திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது! இன்னும் முன்னால் காதலியை காதலிக்கும் என் கணவர்!

Written By:
Subscribe to Boldsky

காதலில் தூரோகம் என்பது மன்னிக்க முடியாத ஒன்று தான். எனக்கு எல்லாமே நீ தான்..! என்று நம்பி வந்த மனைவியை ஏமாற்றுவது ஆண்கள் செய்யும் மிகப்பெரிய குற்றம் தான். காதல் இளம் பருவத்தில் அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று தான் ஆனால், அதை திருமணத்திற்கு பிறகும் கூட தொடர்வது பெண்களின் மனதை மிகுந்த வருத்தத்திற்குள்ளாக்கும்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முன்னால் காதலியின் தொடர்பு

முன்னால் காதலியின் தொடர்பு

நான் 40 வயதுள்ள ஒரு பெண். எனக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு சமீபத்தில் தான் என் கணவர் இன்னும் அவரது முன்னால் காதலியை மறக்கவில்லை என்று தெரியவந்தது. என்னால் அவருடன் இது எல்லாம் தெரியாத மாதிரியும், சகஜமாகவும் பழக முடியவில்லை. அவரது லேப் - டாப்பில் முன்னால் காதலியின் புகைப்படங்கள் மற்றும் இ-மெயில்களை அவர் மறைத்து வைத்திருப்பதை கண்டறிந்தேன்.

தாம்பத்திய வாழ்க்கை :

தாம்பத்திய வாழ்க்கை :

எங்களது தாம்பத்திய வாழ்க்கை அவ்வளவு திருப்திகரமானதாக இல்லை. ஏதோ ஒன்று குறைவது போலவே தோன்றுகிறது. ஆனால் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் அந்த அளவுக்கு ரொமேண்டிக் ஆனவராக இல்லை என்று நினைத்து விட்டுவிட்டேன். ஆனால் அவரது முன்னால் காதலியின் மீது மட்டும் அதீத காதலை காட்டியிருப்பதை அவர் அனுப்பிய மெயில்களின் மூலம் தெரிந்து கொண்டேன். அவர்களது காதல் முறிவுக்கு பின்னரும் கூட இவர் உருகி உருகி தனது முன்னால் காதலிக்கு மெயில் செய்துள்ளார். இருவரும் இவரது அறையில் சந்தித்தும் இருந்துள்ளனர். இது எனக்கு பத்து ஆண்டுகளாக தெரியவில்லை.

குழந்தைகள் இல்லை..!

குழந்தைகள் இல்லை..!

எங்களுக்கு குழந்தைகள் இல்லை, ஏனென்றால் நாங்கள் குழந்தைகள் வேண்டாம் என்று பேசி முடிவு செய்துவிட்டோம். ஆனால் இப்போது நினைத்து பார்க்கும் போது தான் புரிகிறது.. என் கணவர் தான் என்னை குழந்தைகள் வேண்டாம் என்று முடிவு எடுக்க வைத்துள்ளார் என்பது...!

இளகிய மனம் கொண்டவர் தான்!

இளகிய மனம் கொண்டவர் தான்!

அவர் மிகவும் பொறுப்பானவர். அவரது இளகிய மனதை பார்த்தால் எனக்கு சில சமயங்களில் பயமாக இருக்கிறது. இனி இவருடன் என்னால் வாழமுடியாது என்று முடிவு எடுத்து, விவாகரத்து கேட்டேன். ஆனால் அவர் நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது.. என்னை விட்டு போய் விடாதே என்று கூறுகிறார். அவர் செய்த தவறு பற்றி அவரிடம் சொல்ல நான் விரும்பவில்லை.. அப்படி கூறினால் நான் தவறு செய்யவில்லை என்று ஏதேனும் நியாயம் கூறுவார். அவரை விட்டு விலகி செல்ல எனக்கு ஏதேனும் ஒரு சொல்லுங்கள்..!

எக்ஸ்பேர்ட்ஸ் அட்வைஸ் :

எக்ஸ்பேர்ட்ஸ் அட்வைஸ் :

நீங்கள் சொல்வதை பார்த்தால் நீங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. எனக்கு சில விஷயங்கள் சரியாக புரியவில்லை.. உங்களது கணவர் என்னும் அவரது முன்னால் காதலியுடன் தொடர்பில் தான் இருக்கிறா? அவரது இ-மெயில்கள் மற்றும் புகைப்படங்கள் எல்லாம் திருமணத்திற்கு முன்னால் எடுத்தது என்றால் அவைகள் எல்லாம் பெரிதாக பாதிக்காது.

காலம் காயம் ஆற்றும்!

காலம் காயம் ஆற்றும்!

மனிதர்கள் காலம் மாற மாற தங்களை மாற்றிக்கொள்வார்கள். பழைய விஷயங்கள் அவர்களது மனதை அவ்வளவாக பாதிக்காது. பழையதை நினைத்து நீங்கள் வருத்தம் கொள்ள தேவையில்லை..! நீங்கள் அவருடன் வாழ வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி தெளிவாகவும், தீர்க்கமாகவும் முடிவு செய்யுங்கள். உங்களுக்கு 40 வயது தான் ஆகிறது.. இன்னும் உங்களுக்கு வாழ்க்கை இருக்கிறது...! உங்களது எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பற்றி யோசியுங்கள்..!

வாழ விருப்பம் இல்லையா?

வாழ விருப்பம் இல்லையா?

உங்களால் கண்டிப்பாக அவருடன் வாழ முடியாது என்றால், உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவுடன் உங்கள் கணவரிடம் பிரிவு பற்றி பேசுங்கள். உங்களது இந்த முடிவில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். உறுதி இல்லை என்றால் பிரிவு பற்றி பேச வேண்டாம். காலப்போக்கில் உங்களுக்கு இந்த பிரச்சனை ஒன்றும் இல்லாததாக கூட மாறலாம். நிபுணரின் ஆலோசனை வேண்டும் என்றால், ஒரு சிறந்த மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

still my husband love his ex lover

still my husband love his ex lover
Subscribe Newsletter