துரோகம் தவிர்த்து வேறெதுவும் அறியா மனைவி - My Story #122

Posted By:
Subscribe to Boldsky
She Dose Not Know Anything Else Cheating - Real Life Story!

என்ன பார்த்த முதல் பார்வையிலேயே.., இவன் பழம்டான்னு சொல்லிடுவாங்க. உண்மையா இருக்கவன், பொய் சொல்ல தெரியாதவன், மத்தவன ஏமாத்தாம வாழ்றவன், நல்லது மட்டுமே நினைக்கிறவன்னு நல்லவனா வாழ்ற, வாழ முயற்ச்சி பண்ற எல்லாருக்கும் இந்த சமூகம் தர பெயர் பழம், உதவாக்கரை., உருப்பட தெரியாதவன்.

ஸ்கூல்ல, காலேஜ்ல்ல எனக்கான ஃபிரெண்ட்ஸ் ரொம்ப கம்மி. ஏன், இதுவரைக்கும் நான் நாலஞ்சு கம்பெனியில வர்க் பண்ணியிருக்கேன். ஆனால், என்னோட மொத்த ஃபிரெண்ட்ஸ் எண்ணிக்கை அதவிட கம்மி தான். ஏன்னா? காமெடிக்கு கூட நான் யாரோட மனசையும் புன்படுத்துற மாதிரி பேசுனது கிடையாது.

ஆனால், என் வாழ்க்கைய மட்டும் எல்லாரும் புண்படுத்திட்டுப் போறாங்க. கூட வர்க் பண்ணவங்க, பழகினவங்கன்னா சரி.... கட்டுன பொண்டாட்டி உட்பட ஏமாத்துறான்னு நினைக்கும் போது, பேசாம நாமளும் எல்லார் போல நார்மலா பொய் சொல்லி, ஏமாத்தி பொழைக்கலாம் போலன்னு தோணும். ஆனால், முப்பத்தஞ்சு வருஷமா கூடவே வளர்ந்த அந்த குணம் ஈஸியா மாற மாட்டேங்குது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிவிஎஸ் எக்ஸ் எல்!

டிவிஎஸ் எக்ஸ் எல்!

எல்லாரும் சம்பாதிச்சு முதல் சம்பளத்துல கடனுக்காவது ஒரு பலசர் பைக் வாங்கனும்னு நினைப்பாங்க. ஆனா, நான் வாங்கினது டிவிஎஸ் எக்ஸ் எல். எனக்கு அது போதுமானாதா இருந்துச்சு. என்னோட தேவைக்கு அது போதும்ன்னு நினைச்சேன். ஆனா, நம்ம சமூகத்துல நம்ம தேவைக்கு வாழுறத விட, மத்தவங்க தேவைக்கு தான் வாழணும்ன்னு எனக்கு கல்யாணம் ஆனப்பிறகு தான் தெரிஞ்சது.

சம்பாத்தியம்!

சம்பாத்தியம்!

2003ல கோயம்பத்தூர்ல 13,000 சம்பளம்கிறது போதுமானது தான். சென்னை மாதிரி கோயம்பத்தூர் காஸ்ட்லி சிட்டி எல்லாம் இல்ல. காஸ்ட்லியா செலவு பண்ண அப்போ ப்ரூக் ஃபீல்ட்ஸ், ஃபன் மால் மாதிரி எந்த இடமும் அப்போ இல்ல. அப்படி ஒரு சூழ்நிலையில தான் எனக்கு கல்யாணம் ஆச்சு. லேட் மேரேஜ் தான். கல்யாணம் ஆகும் போது எனக்கு 31 வயசு.

மனைவி!

மனைவி!

எங்க அப்பா சொந்த தொழில் பண்ணிட்டு இருந்தவர். அம்மா ரிட்டயர்ட் ஆன அரசு ஊழியர். அம்மாவுக்கு பென்சன் வரும். அப்பா, தான் தொழில் பண்ணிட்டு வந்த இடத்தை லீஸுக்கு விட்டுட்டு அக்கடான்னு வீட்டுல உட்கார்ந்துட்டார். சௌரியத்துக்கோ, வசதிக்கா பஞ்சம் இல்ல. அதே மாதிரி, என் பொண்டாட்டியோட ஆசைகளுக்கும் பஞ்சமே இருக்கல.

எல்லா குடும்பம் மாதிரியும் எங்க குடும்பத்துலயும் மருமகள்- மாமியார், மருமகள் நாத்தனார் சண்டை எல்லாம் இருந்துச்சு. அதுக்கு பரிகாரமா தனிக்குடித்தனமும் போனோம். நான் வேலைக்கு போயிட்டு வீடு திரும்ப நைட் எட்டு மணி ஆகும். தனிக்குடித்தனம் போன பிறகு தான் பிரச்சனை யார் கிட்டன்னு தெரிஞ்சுது. அப்போ எல்லாம் மொபைல் போன் அதிகம் பயன்பாட்டுல இருக்கல, லேண்ட்லைன் தான்.

பில் எகிறும்!

பில் எகிறும்!

நான் அப்பா அம்மா வீட்டுல இருந்தப்போ அங்கயும் ஒரு லேண்ட்லைன் இருந்துச்சு. தனிக்குடித்தனம் வந்த பிறகு, மனைவிக் கேட்டான்னு, அங்கயும் தனியா ஒரு லேண்ட்லைன் கனெக்ஷன் வாங்கிக் கொடுத்தேன். மாசம், மாசம் பில் வரும் போதுதான் தெரிஞ்சுது, என் பொண்டாட்டி எத்தன மணி நேரம் போன்ல பேசிக்கிட்டு இருக்கான்னு. அப்பறம், ஒருமுறை அம்மா கிட்ட லேண்ட்லைன் பில் பத்தி கேட்டேன். எனக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி ஐநூறு ரூபா, வந்துட்டு இருந்த பில், கல்யாணத்துக்கு அப்பறம் மாசம், மாசம் இரண்டாயிரத்துக்கு குறையாம வந்ததும் தெரிஞ்சது.

எக்ஸ்ட்ரா!

எக்ஸ்ட்ரா!

பெரும்பாலும் பி.எஸ்.என்.எல் லேண்ட்லைன் தான் அப்போ உபயோகத்துல இருந்தது. பில் வரும் போது அமவுண்ட் எவ்வளோன்னு மட்டும் தான் வரும். யார், யார் கூட எத்தன மணி நேரம் பேசுனோம்ன்னு தகவல் வேணும்ன்னா அதுக்கு தனியா பில் அமவுண்டோட சேர்த்து அழனும். அதுக்கும் அழுதேன். அப்பதான் ஒருசில நம்பர்ல மட்டும் அதிகமா பேசுறது எனக்கு தெரிய வந்துச்சு.

யார் அது?

யார் அது?

அடுத்த மாசம் பில் வந்ததும், ஒருசில நம்பர்ல மட்டும் அதிக கால் போனத கண்டுபிடிச்சு. அதுக்கு நானே லேண்ட்லைன்ல இருந்து கால் பெண்ணேன். அதுல, என் பொண்டாட்டியோட காலேஜ் ஃபிரெண்ட்ஸ் சிலர் நம்பர் இருந்துச்சு. எல்லாரும் என் வாய்ஸ் கேட்டதும் பேசுனாங்க. ஒரு நம்பர் மட்டும் கட் பண்ணிட்டாங்க. லைட்டா டவுட். கொஞ்ச நேரம் கழிச்சு, வீட்டுக்கு வெளிய இருந்த மளிகைக் கடைக்கு போய், அங்க இருந்து அதே நம்பருக்கு கால் பண்ணேன். ஒரு ஆம்பள வாய்ஸ். ஹலோ, ஹலோன்னு பேசிட்டு வெச்சுட்டாங்க.

காலேஜ் லவ்!

காலேஜ் லவ்!

அப்பறம் என் பொண்டாட்டிக்கிட்ட நேரடியா கேட்டேன். அப்பதான் ஒரு உண்மை தெரிஞ்சது. காலேஜ் படிக்கும் போது ஒரு பையனும், என் பொண்டாட்டியும் காதலிச்ச்சதாகவும், அவங்க வீட்டுல இது தெரிஞ்சு சண்டைப் போட்டு பிரிச்சுட்டாங்கன்னும். பின்ன வேற காலேஜ்ல ஜாயின் பண்ணி படிச்சேன். அப்பறம் அவன்கிட்ட இருந்த எந்த காலும் இல்லை. கல்யாணத்துக்கு பின்ன இப்போ திரும்ப எப்படியோ நம்பர் கண்டுப்பிடிச்சு பேசுறான்னு சொன்னா.

அழுகை!

அழுகை!

சரி, இத ஏன் என்கிட்டே மறைச்ச... நீயே சொல்லியிருக்கலாமேன்னு கேட்டேன். இல்ல, இந்த லவ் பத்தி உங்களுக்கு தெரியாது. தெரிஞ்சா நமக்குள்ள பிரச்சனை வந்திருமோன்னு பயந்து சொல்லல. அவன் பிளாக்மெயில் பண்றான். அவன் கூட பேசாட்டி, உங்ககிட்ட சொல்லிடுவேன்னு சொன்னான். அதான் மறைச்சுட்டேன்னு சொல்லி அழுதாள்.

பரவாயில்ல... நான் உன்ன நம்புறேன். இனிமேல், நீ அப்படி பயந்து பேச வேண்டாம். என்கிட்டே சொல்லிட்டல. இனிமேல் பேசாத. ஏதாவது கால் வந்தா எங்கிட்டே சொல்லுன்னு சொல்லி ஆறுதல் சொல்லிட்டு அந்த பிரச்சனைய அன்னிக்கே முடிச்சுட்டேன்.

பின்ன அதுல இருந்து அவ வெளிய வரணும்ன்னு கரஸ்ல படிக்க சொன்னேன். எம்.ஃபில் வரைக்கும் படிக்க வெச்சேன். எங்க வாழ்க்கை நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு.

வேலை போச்சு!

வேலை போச்சு!

திடீர்ன்னு ஏற்பட்ட நஷ்டம் காரணமா, நான் வேலை பண்ணிட்டு வந்த கம்பெனிய மூடிட்டாங்க. அதனால வேலை போச்சு. வேற என்ன பண்ணலாம்ன்னு யோசிக்கும் போது சின்னதா ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வைக்கலாம். சொந்தமா பிஸ்னஸ் பண்ணலாம்ன்னு என் பொண்டாட்டி ஐடியா கொடுத்தா. சரின்னு பட்டுச்சு. அதுக்கு தேவையான பணமும் சேமிப்புல இருந்துச்சு.

நஷ்டம்!

நஷ்டம்!

டிபார்ட்மெண்ட் ஸ்டோர் எதிர்பார்த்த மாதிரி நல்லாத்தான் போச்சு. ஆனால், ஆறேழு மாசத்துல கணக்குல வராம நிறையா செலவு. கண்ணுக்கே தெரியாம வந்த பணம் எல்லாம் செலவாயிட்டு இருந்துச்சு. எண்ணி ஒரு வருஷம் இருக்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நஷ்டத்துனால மூடிட்டோம்.

கவலை படாதீங்க நான்தான் படிச்சிருக்கேன்ல ஸ்கூல் இல்ல காலேஜ்ல வேலைக்கு போறேன். நாம ரெண்டு பெரும் வேலைக்கு போவோம். எல்லாம் சரி ஆயிடும்ன்னு சொன்னா. என் பொண்டாட்டிக்கு ஒரு ஸ்கூல்ல வேலையும் கிடைச்சது.

குழந்தை!

குழந்தை!

அவ வேலைக்கு போக ஆரம்பிச்ச புதுசுல தான் அவ கன்சீவ் ஆனா. எங்க வாழ்க்கையில புதுசா ஒரு திருப்பம் ஏற்பட்டிருக்குன்னு நெனைச்சு சந்தோசப்பட்டோம். எனக்கும் ஒரு வேலை கிடைச்சது. ரெண்டு பேரும் வேலைக்கு போனோம். நல்லா சம்பாதிச்சோம். குழந்தைக்காக முன்னாடியே நிறைய பொருள் எல்லாம் வாங்கி வெச்சோம். என் பொண்டாட்டிக்கு ஆண் குழந்தை மேல அவ்வளவு பிரியம். அதனால, வாங்குற பொருள் எல்லாம் ஆண் குழந்தை தான் பிறக்கும்ன்னு தேடி, தேடி வாங்குனா.

லக்ஷ்மி!

லக்ஷ்மி!

ஆனா, எங்களுக்கு பிறந்தது கண்ணன் இல்ல, லக்ஷ்மி. எனக்கு ரொம்ப சந்தோஷம் தான். ஆனா, என் பொண்டாட்டி தான் ரெண்டு மூணு நாளா சரியா தூங்கவே இல்லை. அவளுக்கு ஆண் குழந்தை மேல தான் ஆசையா இருந்துச்சு. அவளோட ஆசைப்படி ரெண்டாவது குழந்தையாவது ஆண் குழந்தையா பிறக்கும்ன்னு நினைச்சோம். ஆனா, அதுவும் பெண் குழந்தையா போச்சு. என் பொண்டாட்டி ரொம்பவே மனசு நொந்துப் போயிட்டா.

நான் பெண் குழந்தைனாலும், ஆண் குழந்தைனாலும் என்னோட குழந்தை தானான்னு நினைச்சேன். ஆனா, என் மனைவினால அதை தாங்கிக்க முடியல.

மாஸ்டர்!

மாஸ்டர்!

இரண்டாவது குழந்தை பிறந்து நாலஞ்சு மாசம் இருக்கும். அப்பத்தான் அவ திரும்ப வேலையில ஜாயின் பண்ணா. அப்போ அவ ஸ்கூல்ல புதுசா ஒரு மாஸ்டர் வேலைக்கு ஜாயின் பண்ணிருந்தாரு. வீட்டுக்கு வந்தா எப்போ பார்த்தாலும் அந்த மாஸ்டர் அப்படி, அவர் இப்படின்னு தான் பேசுவா. சரி! கூட வர்க் பண்றவரு தானேன்னு நினைச்சேன்.

வீட்டுக்கு வந்தாலும் எப்பவும் மொபைலும் கைய்யுமாவே இருப்பா. சில சமயம் குழந்தை அழுதாலும், ஏன் நீங்க பார்க்க மாட்டீங்களான்னு சொல்லி அதட்டிட்டு மொபைல் எடுத்துட்டு போன் பேச போயிடுவா.

ஒரு நாள்!

ஒரு நாள்!

ஒரு நாள் என் மனைவி குளிச்சுட்டு இருக்கும் போது, மெசேஜ் வந்துட்டே இருந்துச்சு. மொபைல் எடுத்து பார்த்தப்ப தான் அந்த மாஸ்டர் மெசேஜ் பண்ணது தெரிஞ்சுது. ரெண்டு பெரும் லவ்வர்ஸ்விட மோசமா மெசேஜ் பண்ணிட்டு இருந்தத அப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா, அதப்பத்தி எதுவும் நான் காமிச்சிக்கல. அவ குளிச்சுட்டு வரதுக்குள்ள திரும்ப, திரும்ப மெசேஜ் வந்துட்டே இருந்துச்சு. அதானால, நான் ஓபன் பண்ணி படிச்சது அவளுக்கும் தெரியல.

தம்பி!

தம்பி!

ஒருநாள் என் மனைவியோட தம்பிக்கு கால் பண்ணி மீட் பண்ணேன். அவன்கிட்ட, இதப்பத்தி விசாரிக்கலாம்ன்னு தோனுச்சு. என்ன மாதிரியே அவனும் ஒரு பழம்கிறதுனால பொய் சொல்லாம பேசுவான்னு நம்பினேன்.

அப்போதான்அவன் இன்னொரு அதிர்ச்சியக் கொடுத்துட்டுப் போனான்...

காலேஜ் படிக்கும் போது ஒருத்தன் எங்க அக்காவ ஏமாத்த பார்த்தான். ரெண்டு பேரும் ஓடிபோய் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டாங்க. அவன பத்தி விசாரிச்சப்ப எல்லாரும் மோசமானவன்னு சொன்னாங்க. அப்பறம் எங்க சித்தாப்பா உதவியோட, அவன மிரட்டி விரட்டிவிட்டு. எங்க ஆக்கவா சித்தப்பா வீட்டுலையே வெச்சிருந்தோம். அங்க இருந்து தான் அவ காலேஜ் போயிட்டு வந்திட்டு இருந்தான்னு சொன்னான்.

ஆக, இதுவரைக்கும் என் மனைவி என்கிட்டே சொன்னது எல்லாம் பொய்ன்னு மட்டும் தெரிஞ்சுது.

நான் நல்லவனாச்சே...

நான் நல்லவனாச்சே...

இதெல்லாம் பத்தி தெளிவா என் மனைவிகிட்ட பேசுனேன். திரும்ப அழுதா. மன்னிச்சிடுங்கன்னு சொன்ன. "பழங்கள்"-க்கு ரொம்ப இளகின மனசு. அதனால இந்த பழமும் மன்னிசிடுச்சு. இனிமேலும் இந்த ஊர்ல வேண்டாம்ன்னு வேற ஊருக்கு போனோம்.

ரெண்டு பேருக்கும் ஒரு நல்ல வேலையா பார்த்து முடிவு பண்ணிட்டு தான் போனோம்.

ரெண்டு பெண் குழந்தைங்க இருக்காங்க. பெரியவாளுக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சிடுச்சு. இந்த நேரத்துல அவங்க மனசு நோகுற மாதிரி எந்த சம்பவமும் நடந்திடக் கூடாதுன்னு மட்டும் தான் எனக்கு தோணுது.

நிறையா கணவன், மனைவி, தங்களோட துணை செய்யிற தப்ப எல்லாம் மன்னிக்கிறதுக்கு காரணம் அவங்க மேல இருக்க அக்கறை இல்ல. பெத்த குழந்தைங்க வாழ்க்கை மேல இருக்க அக்கறை. புள்ளக்குட்டி பெத்துக்கிட்ட பிறகும் எப்படி சிலருக்கு ஏமாத்த தோனுதுன்னு எனக்கு தெரியல. அட்லீட்ஸ் என்னோட வாழ்க்கைய படிச்சாவது சிலர் திருந்துன்னா நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

She Dose Not Know Anything Else Cheating - Real Life Story!

She Dose Not Know Anything Else Cheating - Real Life Story!