தரமணி படத்துல நீங்க இதெல்லாம் கவனிச்சீங்களா?

Posted By:
Subscribe to Boldsky

பெண்கள் கடல் கடந்து சாதித்தாலும், அவள் வேறு வீட்டின் மகளாக, பெண்ணாக, மனைவியாக இருந்தால் மட்டுமே பாராட்டும் நமது வாய், அதுவே நமது வீட்டு பெண் என்றால், அவளது கனவுகளுக்கு பூட்டை போட்டு விடும். இதற்கு ஆண்கள் பயன்படுத்தும் பூட்டு பாசம், அக்கறை, பாதுகாப்பு போன்றவை.

மிரட்டினால் தானே மேலும் அடம்பிடிப்பாள், அரவணைத்தால் அடங்கி தானே போவாள் என்ற மனோபாவமும் கூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகள் எங்கும் ஒரு தவறுக்கு ஆணுக்கு ஒரு தண்டனை, பெண்ணுக்கு ஒரு தண்டனை என்ற பார்வையோ, பாகுபாடோ இல்லை.

Relationship Tips From Taramani Movie!

ஆனால், உலகின் எல்லா சமூகங்களும், வாழ்வியலில் நடக்கும் பல சம்பவங்கள், நிகழ்வுகளில் ஆண், பெண் ஈடுபடும் போது வெவ்வேறு விதமான பார்வைகளை வெளிப்படுத்தி பெண்களை தண்டிக்கிறது.

இதை பெண்களும் உட்பட ஒட்டுமொத்த சமூகமும் ஏற்றுக் கொண்டு வந்தள்ளது என்பது தான் வியப்பளிக்கிறது.

அக்கறை, பாசம், பாதுகாப்பு என்ற பெயரில், கணவன், காதலன், அப்பா என்ற உறவு மூலமாக இத்தனை ஆண்டுகள் பெண்களை அடிமைப்படுத்தி வந்த விதத்தை தோலுரித்துக் காட்டியுள்ள ப(பா)டம் தான் தரமணி!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடைசியாக என்று புகழ்ந்தீர்கள்?

கடைசியாக என்று புகழ்ந்தீர்கள்?

உங்கள் மனைவியை, மகளை, அம்மாவை கடைசியாக என்று புகழ்ந்தீர்கள்? என்று ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்.

என் மனைவி எப்படிப்பட்டவள் என நண்பர்களிடம் புகழ்வார்கள், என் அம்மாவின் சமையல் தான் எப்போதும் பெஸ்ட் என உடன் பணிபுரியம் நபர்களிடம் புகழ்வார்கள், என் மகள் தான் உலகின் சிறந்தவள் என உறவினர் மத்தியில் புகழ்வார்கள்.

ஆனால், அவர்கள் கண்ணதிரே, அவர்கள் மனம் மகிழ கடைசியாக நாம் எப்போது புகழ்ந்து பேசியுள்ளோம். குறைந்தபட்சம் நாம் பாராட்டியது கூட இல்லை. நமது விருப்பத்தை ஏதோ ஒரு காரணத்தால் அவர்களிடம் வெளிப்படுத்தாமல் வந்துள்ளோம்.

இதுதான் காரணம்...

இதுதான் காரணம்...

வீட்டில் உணவு சரியில்லை என்றால் ஹோட்டலுக்கு செல்வது எப்படி தவறில்லையோ, அப்படி தான் வீட்டில் ஆண் தன் அருமை அறியாமல், தன்னை புகழாமல், பாராட்டாமல் நடந்துக் கொள்ளும் போதும வேறு ஒரு நபர் அந்த உணர்வை காட்டும் போது... அந்நபர் மீது பெண்களுக்கு ஈர்ப்பு ஏற்படுவதிலும் தவறில்லை.

ஏனெனில், தவறு ஆண்கள் மீது தான் இருக்கிறது.

வீதிக்கு ஒன்று, வீட்டுக்கு ஒன்று...

வீதிக்கு ஒன்று, வீட்டுக்கு ஒன்று...

நம்மை பொறுத்தவரை சானியா மிர்சா தனது கனவில் ஜெயிக்க, இந்தியாவை பெருமைப்பட வைக்க, திருமணமாகியும் பிள்ளை பெற்றுக் கொள்ளாமல் விளையாடிக் கொண்டே இருப்பதை பெருமையாக பேசுவோம், பறைசாற்றுவோம்.

அதுவே, உங்கள் வீட்டில் உங்கள் மகள், மருமகள் தனது கனவில் ஜெயிக்க, பிள்ளை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போட்டால்... கோபம் தலைக்கேறும், அழுது மன்றாடி, பேரப்பிள்ளை காணாமல் இந்த கட்டை வேகாது என வேண்டாத டயலாக் எல்லாம் பேசி பிள்ளை பெற தூண்டுவோம்.

காதல் மட்டும் போதும்!

காதல் மட்டும் போதும்!

இந்தியாவின் பெரு நகரங்களுக்கு சென்று பாருங்கள்... ஆண்களை காட்டிலும், அதிகமாக பொறுப்பும், வேலையும், அதிக ஊதியமும் பெற்று பெண்கள் ஓங்கி உயர்ந்து நிற்கிறார்கள்.

பெண்கள் வளர்ந்துவிட்டனர்., அவர்களை அவர்களே பாதுகாத்துக் கொள்ள, மேம்பட அவர்கள் அறிந்துக் கொண்டார்கள்.

நாம் செய்யும் பெரிய தவறே, காதல் உண்டாகும் வரை அவரை அவர் போக்கில் விடுவதும், காதலில் விழுந்தவுடன், அவரை பாதுகாக்கிறேன், காதலிக்கிறேன், நீ ஒரு குழந்தை என்பது போல பாவித்து, அவர்களது வாழ்க்கையை சீரழிப்பது தான்.

இந்த ஒரு தவறை ஆண்கள் செய்யாதிருந்தால்... பெண்கள் என்றோ நிம்மதியான வாழ்க்கையை வாழ துவங்கி இருப்பார்கள்.

கற்பெனும் அவமானம்!

கற்பெனும் அவமானம்!

கற்பு எனும் ஒற்றை சொல்லில் பல தசாப்தங்களாக நாம் பெண்களை அடிமைப்படுத்தி வாழ்ந்து வந்துள்ளோம். கற்பிழந்தால் இறந்துவிட வேண்டும், கற்பழித்தவன் சுகபோக வாழ்க்கை வாழலாம். சில வருடங்கள் முன்பு வரை கற்பழித்தவனுக்கே திருமணம் செய்து வைப்பது, கற்பழித்தால் அந்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளலாம் என்ற நிகழ்வுகளை எல்லாம் நாம் கண்டுள்ளோம்.

கற்பு என்பது இயல்பு, அது ஆண்களுக்கும் உண்டு என்பதை மறந்து, மறைத்து பெண்களை அடிமைகளாக வாழவைத்த சமூகத்தில் தான் நாம் பிறந்து வளர்ந்துள்ளோம் என்பது வேதனைக்குரியது.

பிள்ளைகள் முன்னர்...

பிள்ளைகள் முன்னர்...

பிள்ளைகள் முன்னர் தவறாக பேசுவது, நடந்துக் கொள்வது மாபெரும் தவறு. குழந்தை பருவத்தில் அவர்கள் மனதில் பதியும் அறிவு, நிகழ்வுகள், குணங்கள் தான் பின்னாட்களில் அவர்களை ஒரு மனிதனாக உருவாக்கும்.

தனது 7 வயது வரை எப்படிப்பட்ட சூழலில், நிகழ்வுகள், அறிவு பெற்று ஒரு குழந்தை வளர்கிறதோ, அதன் வெளிப்பாடாக தான் அக்குழந்தை வருங்காலத்தில் சமூகத்தில் வளர்ந்து நிற்கும் என கூறப்படுகிறது.

எனவே, பிள்ளைகள் முன்னர் தவறான எடுத்துக்காட்டாக ஒருநாளும் இருந்துவிடாதீர்கள்.

தரமணி, தரமான மணி!

தரமணி, தரமான மணி!

தரமணி என்பது இன்றைய சூழல், நமது கலாச்சார மாற்றங்கள், மனித உணர்வுகள், கணவன், மனைவி உறவு, காதலர்கள் உறவு, பிள்ளைகள் எதை பெற்றோரிடம் இருந்து கற்கிறார்கள், அது எப்படி அவர்களுள் தாக்கத்தை உண்டாக்குகிறது போன்ற கருத்துகளை வலிமையாக கையாண்டுள்ளது.

முக்கியமாக நமது உறவு மேம்பட ஒரு சிறந்த பாடமாக திரையில் ஓடுகிறது தரமணி.

சபாஷ் ராம்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Relationship Tips From Taramani Movie!

Relationship Tips From Taramani Movie!
Subscribe Newsletter