உடலுறவு ரீதியாக மனைவியை ஏமாற்றும் ஆண்கள் கூறும் 5 காரணங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

மனிதர்களில் இரு வகையினர் உள்ளனர். ஒன்று தங்கள் வெற்றி தோல்விக்கு காராணம் கூறுபவர்கள், பொறுப்பேற்றுக் கொள்பவர்கள். இதில், காரணம் கூறுபவர்கள் பெரும்பாலும் தவறுகளில் ஈடுப்படுவது, தப்பு செய்துவிட்டு மற்றவர் மீது பழிபோடும்குணம் கொண்டிருப்பார்கள்.

அந்த வகையில் இல்லற உறவில் துணைக்கு மோசம் செய்துவிட்டு ஆண்கள் கூறும் ஐந்து காரணங்களும் அதற்கு எக்ஸ்பெர்ட் அட்வைஸ்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணம் #1

காரணம் #1

துணை தன்னை விட மிகவும் அழகாக, கவர்ச்சியாக இருப்பது, அவர் மீது எழும் சந்தேகத்தின் காரணத்தால் உறவில் ஏமாற்ற தூண்டுகிறது.

எக்ஸ்பெர்ட் அட்வைஸ்!

எக்ஸ்பெர்ட் அட்வைஸ்!

இது ஏமாற்றும் அந்த ஆண் கூறும் சப்பைக்கட்டு காரணம் மட்டுமே. உங்கள் துணை அழகாக, கவர்ச்சியாக இருந்தால் பெருமை படுங்கள். அல்லது சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

ஊரில் யாரோ அழகான பெண்கள் என்றால் கண்டிப்பாக அவர்களுக்கு முன்பே காதல், அனுபவம் இருக்கும் என கூறும் வெட்டி புரளிக்கு செவி சாய்த்து நீங்கங்களும் உங்கள் தரத்தை குறைத்து கொண்டு வேறு உறவில் இணைவேன், தாம்பத்தியத்தில் ஏமாற்றுவேன் என்பது எல்லாம் வெறும் காரணமே தவிர நிதர்சனமோ, உண்மை நிலையோ அல்ல.

அப்படியே அழகான, கவர்ச்சியான துணை உங்களை உண்மையாகவே ஏமாற்றுகிறார் என அறிந்தால் முதலில் புரியவைக்க முயற்சி செய்யுங்கள். அதற்கும் செவி சாய்க்காவிட்டால் விவாகரத்து பெற்று மறுமணம் செய்து நிம்மதியாக இருங்கள். தவறு செய்பவரை உண்மையாக இருந்து பதில் அளிக்க வேண்டுமே தவிர, அதே தவறை நாமும் செய்து தரம்தாழ்ந்து போகக் கூடாது.

காரணம் #2

காரணம் #2

வேறு நபர் என் துணையை காட்டிலும் அதிகம் விரும்புகிறார். என் மீது அதிக பாசம், நேசம் வைத்துள்ளார்.

எக்ஸ்பெர்ட் அட்வைஸ்!

எக்ஸ்பெர்ட் அட்வைஸ்!

உங்கள் நேரத்தை நீங்கள் ஒரு நபரிடம் எவ்வளவு செலவு செய்கிறீர்களோ. அந்த அளவிற்கு அந்த நபர் எப்படிப்பட்டவர் என அறிந்துக் கொள்ளலாம். இது இல்லறத்திலும் அடங்கும்.

திருமணம் ஆன புதிதில் துணையுடன் அதிக நேரம் செலவு செய்வோம் அதனால் அவர் தான் நமது உலகமாக, நமது இன்பம், மகிழ்ச்சி, வெற்றியின் ஆணிவேராக தெரிவார்கள்.

காலம் கொஞ்சம் கடந்த பிறகு அவரிடம் நேரம் செலவழிப்பதும் குறையும். அதனால், அவர் நம் மீது அன்பு, பாசம் செலுத்த தவறுகிறார், குறைத்து கொண்டார் என்ற பிம்பமும் எழும்.

இதனால், புதியதாக அலுவலகத்தில், வெளியிடத்தில் நம் மீது கொஞ்சம் பரிவு காட்டும், அன்பு செலுத்தும் நபர்களை கண்டால் கூட அவர்கள் நமது துணையை காட்டிலும் சிறந்தவர் என்ற எண்ணமும் எழலாம்.

ஆனால், இது உண்மை இல்லை. எனவே, வேறு பெண் மீது உங்களுக்கு ஆசை அதிகரிக்கும் போது சற்று நேரம் ஒதுக்கி ஓரிரு நாள் உங்களது துணையுடன் கொஞ்சம் நேரம் அதிகமாக செலவழித்து பாருங்கள். உங்கள் துணை தான் பெஸ்ட் என உங்களுக்கே தெரியும்.

காரணம் #3

காரணம் #3

நானும், என் துணையும் செக்ஸ் உறவில் ஈடுப்படுவதே இல்லை. அதனால் தான் நான் வேறு பெண்ணை தேடி போகிறேன்.

எக்ஸ்பெர்ட் அட்வைஸ்!

எக்ஸ்பெர்ட் அட்வைஸ்!

இதே போல பெண்களும் எனது கணவன் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதில்லை என வேறு ஆணை தேடி சென்றால் என்ன ஆகும்? செக்ஸ் என்பது வயது ஏற, ஏற மாறுப்படும் ஒன்று.

ஆண், பெண் என இருபாலார் மத்தியிலும் இதன் தாக்கம் வெவ்வேறு மாதிரி இருக்கும். தாய்மை அடைந்த பிறகு, நடுவயது எட்டிய பிறகு, மாதவிடாய் நின்ற பிறகு என பெண்களின் செக்ஸ் உணர்வுகள் பல காரணங்களால் மாறுபடும்.

இதை தவறாக புரிந்துக் கொண்டு உறவில் ஏமாற்றுவது தவறு. மேலும், செக்ஸ் என்பது மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை அறிந்தவர்களுக்கு இது மிக எளிமையாக புரியும்.

காரணம் #4

காரணம் #4

நான் என் துணையுடனான வாழ்க்கையை மிகவும் போராக உணர்கிறேன். பெரிதாக சுவாரஸ்யங்கள் ஏதும் இல்லை. அதனால் தான் ஏமாற்றுகிறேன்.

எக்ஸ்பெர்ட் அட்வைஸ்!

எக்ஸ்பெர்ட் அட்வைஸ்!

கண்டிப்பாக நீங்கள் புதியதகா உறவில் இணைந்திருக்கும் பெண்ணை திருப்திப்படுத்த பல யுக்திகள் கையாள்வீர்கள். அவற்றில் சிலவற்றையாவது உங்கள் துணையிடம் காண்பித்தது உண்டா? இது தான் நடுவயது ஆண்கள் செய்யும் பெரிய தவறு.

நாம் புதிய ஆடை ஒன்று வாங்கினால் ஆரம்பக் காலத்தில் அதை துவைப்பதில் இருந்து இஸ்திரி செய்வது வரை, உடுத்தும் போதும் என கறைப்படாமல் பார்த்துக் கொள்வோம்.

அதுவே, கொஞ்சம் நாள் கழித்து அதைப்பற்றி நாம் கவலைப்படவே மாட்டோம். கசக்கி எறிந்துவிடுவோம். இது தான் உறவிலும் ஆண்கள் செய்யும் தவறு.

புதிதாக உறவில் இணைந்த பெண்ணிடம் கான்பிக்கம் அந்த ஆர்வத்தை உங்கள் துணையிடம் காண்பியுங்கள் உங்கள் உறவே உங்கள் மனைவியுடனே சுவாரஸ்யமாக பயணிக்கும்.

காரணம் #5

காரணம் #5

என் மனைவி என் மீது ஆர்வம் குறைந்து காணப்படுகிறார். அதனால் தான் வேறு துணை தேடி செல்கிறேன்.

எக்ஸ்பெர்ட் அட்வைஸ்!

எக்ஸ்பெர்ட் அட்வைஸ்!

உங்களுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு கூற விரும்பிறேன். நியூட்டனின் மூன்றாம் விதி போன்றது தான் இல்வாழ்க்கையும். நீங்கள் செலுத்தும் அதே அன்பு, சுவாரஸ்யம், காதலானது. அதே அளவிற்கு உங்களுக்கு உங்கள் துணையிடம் இருந்து வந்து சேரும்.

உங்கள் துணைக்கு உங்கள் மீது ஆர்வம் இல்லை என்றால் அது உங்கள் தவறு. அவர் ஆர்வத்தை சம்பாதிக்க நீங்கள் என்னென்ன காரியங்களில், செயல்களில் ஈடுப்பட்டீர்கள் என்பதை பற்றி யோசியுங்கள்.

ஒருவேளை உங்கள் மனைவி பேராசை கொள்பவராக இருந்தால் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால், அவர்களுடைய ஆசை என்னே என்று கூட தெரியாமல். அதற்கு ஏற்ப எந்த செயலிலும் ஈடுபடாமல், அவர் உங்கள் மீது ஆர்வம் குறைவாக உள்ளார், அதனால் நான் வேறு பெண்ணுடன் தொடர்பு கொள்கிறேன் என்பது உங்களது அறியாமை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why Men are Cheating in a Relationship?

Reasons Why Men are Cheating in a Relationship?