For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  எனது லிப்ஸ்டிக், பிரா, உள்ளாடை அணிந்துக் கொள்கிறார் என் கணவர் - உண்மை கதை!

  |

  ஒருவேளை இப்படி ஒரு சம்பவம் என் வாழ்வில் நடக்காமல் இருந்திருந்தால். நீங்கள் அனுதினம் காணும் பெண்களில் நானும் ஒருத்தியாக சாதாரணமாக இருந்திருப்பேன்.

  என் பெற்றோருக்கு நான் ஒரே மகள். அறிவார்ந்த, உயர்தட்டு, வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த பெண் நான். என் அப்பா ஒரு பெண்ணியவாதி என்பதால், என்னையும் அப்படியே வளர்த்தார். அவர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியும் கூட. மற்றும் எனது அம்மா என்னை மிகவும் அன்பு செலுத்தி தாராளமான இடம் கொடுத்து வளர்த்தார்.

  80-களில் எனது பெற்றோர் இருவரும் வேலை செய்து வந்தனர். ஆகையால் சுதந்திரமாக, தீர்கமான முடிவு எடுக்கும் உரிமை எனக்கிருந்தது. என் விருப்பத்திற்கு ஏற்ற ஹாபி, வேலை என செய்து வந்தேன். அனைத்திற்கும் எனது பெற்றோர் ஒப்புதல் வழங்கினர். மேலும், எதற்கும் நான் அவர்களிடம் அனுமதி கேட்டதும் கிடையாது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  கிளர்ச்சியாளர்!

  கிளர்ச்சியாளர்!

  இப்படி ஒரு சுதந்திரம், தைரியம் கொண்ட பெண் என்பதால், நான் இயல்பாகவே ஒரு கிளர்ச்சியாளர் போல தான் வாழ்ந்து வந்தேன்.

  என் வயது முப்பதை எட்டியது. எல்லா உறவினர்களும் அந்த கேள்வியை கேட்க துவங்கினார்கள்.

  ஏன், இன்னும் திருமணம் செய்யவில்லை, ஏதாவது அக்கறை இருக்கிறதா? என எனது பெற்றோரை கேள்வி, மேல் கேள்வி கேட்டு, கடைசியாக மணமகன் பார்க்கும் படலமும் துவங்கியது.

  விண்ணப்பம்!

  விண்ணப்பம்!

  மணமகன் வேண்டி ஆன்லைனில் ஒரு முகவரி துவங்கி, அதில் விண்ணபித்தோம்... ஒருவன் அடக்கமாக இருக்க வேண்டும் என்றான், ஒருவன் அழகாக இருக்க வேண்டும் என்றான், ஒருவன் மனைவியாக மட்டும் இருந்தால் போதும் என்றான்.

  இதெல்லாம் ஏதோ போக்குவரத்து நெரிசலில் அதிகப்படியான ஹார்ன் சப்தம் கேட்பது போல அசௌகரியமாக இருந்தது. மேலும், அந்த தளத்தில் நான் அழகானவள், வடிவானவள் என என்னை பற்றி நானே ஒரு விமர்சனமும் கொடுக்க வேண்டிய சூழல் கேவலமாக இருந்தது.

  அந்த ஜென்டில்மேன்...

  அந்த ஜென்டில்மேன்...

  கடைசியாக ஒரு ஜென்டில்மேனை சந்தித்தேன். அவன் பெரிதாக அழகில்லை, ஃபிட் இல்லை. ஆனால், மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டான். உணர்வு ரீதியானவனாக இருந்தான். தனது கடமைகள் அறிந்திருந்தான். அனைவரையும் போல என்னை அவனது மனைவியாக்கி கொள்ள வேண்டும் என்ற ஆசையும் இருந்தது.

  நான்கைந்து முறை நாங்கள் பேசிய பிறகு தான், நாங்கள் ஒரே அலுவலகத்தில் வெவ்வேறு துறைகளில் பணிபுரிகிறோம் என்பதை அறிந்தேன்.

  இலட்சணங்கள்!

  இலட்சணங்கள்!

  எல்லா கணவரிடமும் இருக்க வேண்டிய, அக்கறை, அன்பு, அமைதி, பொறுமை, ஷாப்பிங், சமையல், உறுதுணை, மனைவியின் கனவிலும் ஆர்வம் செலுத்துதல் என பெரும் பட்டியலுக்கு சொந்த காரனாக இருந்தான் என் கணவன்.

  எனது பெற்றோரிடம் பேசினேன், ஒப்புக் கொண்டனர். அவன் வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர் எங்கள் திருமணம் சிம்பிளாக நட்பும், சுற்றமும் சூழ நடந்தது.

  திருமண நாள் இரவு...

  திருமண நாள் இரவு...

  எங்கள் திருமண நாள் இரவு முழுக்க உறங்கிவிட்டான். சரி சோர்வாக இருக்கும் என அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பிறகு நாங்கள் டெல்லிக்கு இடம்பெயர்ந்து சென்றோம். எங்கள் இருவருக்கும் வேலைப்பளு கொஞ்சம் அதிகமாக இருந்தது. நாட்கள் கழிந்தன... எங்கள் இருவருக்குள்ளும் ஒன்றுமே நடக்கவில்லை.

  மாமனார்!

  மாமனார்!

  எனது மாமனார் தினமும் என்னை பற்றி வர்ணித்து கொண்டே இருப்பார். உடல், வடிவம், அழகு, புருவம் என ஏதாவது ஒன்று பற்றி கூறி வர்ணிக்காமல் அவர் இருந்ததே இல்லை. எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. என்ன செய்வது என்றும் தெரியவில்லை. அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவும் விரும்பவில்லை.

  என்னை தொடவே இல்லை...

  என்னை தொடவே இல்லை...

  நாட்கள் கழிந்தன...

  சரி, நாமாக முயற்சிப்போம் என அவனை தீண்டினால், கல் போல படுத்திருப்பான். எனது முயற்ச்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. என் தலைக்குள் யாரோ நடனம் ஆடுவது போன்ற உணர்வு. ஏதேதோ சிந்தனைகள்.

  எக்ஸ் லவ், அலுவலக உறவு, கள்ளக்காதல் என ஏதோதோ யோசித்தேன். ஒருநாள் அவனிடம் கூறாமல், சீக்கிரமாக வீடு திரும்பு அவனை பற்றி அறிந்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்தேன்.

  அதிர்ச்சி!

  அதிர்ச்சி!

  ஆறு மாத காலம் ஓடிய பிறகு, என்ன தான் செய்வது சந்தேகம் மட்டுமே மிஞ்சியது. ஒரு நாள் மாலை சீக்கிரமே வீடு திரும்பி. அவனை பற்றி ஏதேனும் துப்பு கிடைக்கிறதா என கபோர்டுகளை தேடினேன்.

  துப்புக் கிடைக்கவில்லை. அவனே கிடைத்தான். ஆம்! எனது கபோர்டு உள்ளே அமர்ந்திருந்தான். நான் அதிர்ச்சி அடைந்தேன். காரணம், அவன் எனது லிப்ஸ்டிக் மற்றும் உள்ளாடைகளை அணிந்து அமர்ந்திருந்தான்.

  ஏன்?

  ஏன்?

  என்னை யாரோ கூர்மையான கத்தியால் குத்தியது போல உணர்ந்தேன். வலி தான் இல்லை, ஆனால் இரத்தம் உடலில் இருந்து சிந்துவது போன்ற நிலையில் நானிருந்தேன். "ஏன் என்ன செய்கிறாய்?" என கேள்வு எழுப்பினேன்.

  அவன் குரலில் பெண் சாயல் இருந்தது. என்ன பேசுவது என தெரியவில்லை. என் வாழ்க்கை அவ்வளவு தானா என்ற கேள்வி மட்டுமே எனது மண்டைக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது.

  7 மாதம்...

  7 மாதம்...

  அந்த நாளில் இருந்து ஏழே மாதத்தில், எனது உருவில் இரட்டிப்பு மடங்கு அதிகமானேன். 53 கிலோவில் இருந்து 80 கிலோ எட்டினேன். தினமும் குடி. குடிக்காமல் எனக்கு உறக்கம் வராது. 32 வயதில் 40வயது பெண்ணை போல தோற்றமளித்தேன். நான் நானாகவே இல்லை. என் கணவர் எனது உள்ளாடைகளை உடுத்துகிறான். வேறென்ன செய்ய?

  லிப்ஸ்டிக், உள்ளாடை அணிவது ஒருபுறம், செக்ஸ் இல்லாத வாழ்க்கை. அனைத்திற்கும் மேல், வேறு ஆணுடன் செக்ஸ் கொள்ள தூண்டுகிறான். அதிலும், அவனது அப்பாவுடன் என்றால் அவனுக்கு சௌகரியம்.

  தற்கொலை!

  தற்கொலை!

  ஒரு வருட இல்லற வாழ்வில் ஐந்து முறை தற்கொலைக்கு முயன்றேன். ஒரு மனோதத்துவ நிபுணரை சந்திக்க முயன்றேன். என் கணவர் இது தான் இனிவரும் நாட்களிலும் தொடரும், தன்னால் தன்னை மாற்றிக் கொள்ள முடியாது என கூறிவிட்டான்.

  அது எனக்கும் தெரியும். என் இதயம் மெல்ல, மெல்ல இறந்துக் கொண்டிருந்தது. என்னால் இது குறித்து பெற்றோரிடமும் கூற இயலவில்லை. என் கணவரை அழைத்து கொண்டு மருத்துவரை அணுகினேன். அப்போது தான், என் கணவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பது குறித்து அறிந்தோம். அதாவது ஓரினச் சேர்க்கையில் பெண்ணாக வாழ்பவர்கள்.

  பெண்ணாக வாழ வேண்டும்

  பெண்ணாக வாழ வேண்டும்

  என் கணவருக்கு ஒரு பெண்ணாக வாழ வேண்டும் என்பதே ஆசை. பொது வாழ்வில் தன்னை தற்காத்து கொள்ள என்னை ஒரு கேடயமாக உபயோகித்துக் கொள்கிறான் என் கணவன்.

  அந்த திருமண வாழ்வில் இருந்து வெளிவர எனக்கு ஒரு வருடம் ஆனது. நான் அவனை விட்டு விலகுவதை அவர்கள் விரும்பவில்லை. அனைத்து வழிகளிலும் என்னை தடுக்க முயன்றனர்.

  என் மாமனாருக்கு என்னுடன் படுக்க முடியவில்லையே என்ற வருத்தம். என் மாமியாருக்கு, அவரது மகனுக்கு இனி யார் சமைத்து போடுவார் என்ற வருத்தம். என் கணவருக்கு இந்த விவாகரத்து எப்படியாக முடியும் என்பது குறித்த வருத்தம்.

  மனநோய்!

  மனநோய்!

  நான் பி.டி.எஸ்.டி (PTSD - Post Traumatic Stress Disorder) மனநோயால் பாதிக்கப்பட்டேன். நிறைய கவுன்சிலிங் சென்றேன். இதற்கு இடையே எனது வேலையில் பதவி உயர்வும் அடைந்தேன். லீகலாக விவாகரத்து பெற நிறைய பணம் செலவழித்தேன். கடைசியாக எனது பெற்றோர் உதவியுடன் விவாகரத்து பெற்றேன்.

  சந்தோஷமாக இருக்கிறோமா, இல்லையா என்பது பற்றி இந்த சமூகம் அக்கறை செலுத்தாது. ஆனால், கட்டியவன் எப்படி இருந்தாலும் அவனுடன் கடைசி வரை வாழ்ந்துவிட வேண்டும். இல்லையேல் அவள் பத்தினி இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Real Story: When I Catch Him, I Was Shocked, He is Wearing my Lipstick, Bra and All!

  Real Story: When I Catch Him, I Was Shocked, He is Wearing my Lipstick, Bra and All!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more