‘காதல்’ பிரிய இப்படியும் ஒரு காரணமா! My Story #116

Posted By:
Subscribe to Boldsky

காதலர்கள் என்று சொன்னாலே சதா சர்வ காலமும் போனும் கையுமாக இருப்பார்கள். எப்போதும் நின்றால் எந்தரித்தால் என லைவ் அப்டேட்ஸ் பரிமாறிக்கொண்டு சாவடிப்பார்கள் என்று ஒரு பிம்பம் இருக்கிறதே.... அப்படியான ஒரு பேச்சு எங்களின் காதலில் இருக்கக்கூடாது என்று ஆரம்பம் முதலே நினைத்திருந்தேன்.

என்னவோ காதலிக்க ஆரம்பித்துவிட்டாள், அந்த இணையை ஒரு கூண்டுக்குள் அடைத்து வைத்தது போல ஒரு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வர நினைக்கவில்லை. இது அவர்களது வாழ்க்கை சுதந்திரமாக பறக்கட்டும் நான் அவர்களை நேசிக்கிறேன் என்ற ஒற்றை காரணத்திற்காக அவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏன் தடை சொல்ல வேண்டும்?

பிடித்ததை செய்.... கனவை நோக்கி ஓடு லட்சியங்களை நனவாக்கு.... நீ என் அடிமையல்ல வாழ்க்கைத்துணை! உன்னை காதலிக்கும் அதே நேரத்தில் உன்னையும் உன் கனவுகளையும் மதிக்கிறேன். இப்படிச் சொல்லித் தான் அவளிடம் என் காதலைச் சொன்னேன்.

பெரிய புரட்சி செய்துவிட்டான். காதலிக்கு இப்படியொரு வாழ்க்கையா? யூ ஆர் எ ஹீரோ மேன்... என்று புகழ்ந்து தள்ளிவிட்டீர்களா? இதோ ஒரே வருடம் தான் அதற்கடுத்து எங்கள் காதலில் என்பது தான் ஹைலைட். கதையின் முடிவில் ஏன் காதலர்கள் போனும் கையுமாய் இருக்கிறார்கள் என்பது புரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மும்பை :

மும்பை :

ஒரு வருஷம் ட்ரைனிங் என்று சொல்லி பூனேவிலிருக்கும் நிறுவனத்திற்கு மாற்றினார்கள். பயிற்சி முடிந்த பிறகு சென்னையில் வேலை தொடரும்.

கிட்டதட்ட எங்களுடையது ஐந்து வருடக் காதல். பள்ளியிலிருந்தே பழக்கம் என்றாலும் கல்லூரிக்கு வந்தப் பின்னர் தான் காதலிக்க ஆரம்பித்தோம். நான் ப்ரோப்போஸ் செய்ததைப் பார்த்து மெய்சிலிர்த்த அவள், இதுவரைக்கும் சினிமால கூட இப்டி லவ் சொல்லி பாத்ததில்ல... ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று சிலிர்த்துப் போனாள்.

போய் வரவா ? :

போய் வரவா ? :

ஊரிலிருந்து சென்னைக்கு ட்ரைனிலும் பின் அங்கிருந்து மும்பைக்கு ப்ளைட்டில் செல்லவதாகத் திட்டம்.என்னவளிடம் விடைபெறுகிறேன்.

ஒழுங்கா சாப்டு....டெய்லி நைட் பேசுறேன்.மெஸேஜ் அனுப்புறேன் சரியா...

உடம்ப பாத்துக்கோ.சீக்கிரம் வந்துரு என்று லேசான அழுகையுடன் வழியனுப்பி வைத்தாள்.

இதுவா மும்பை :

இதுவா மும்பை :

சாப்டவும் தங்கவும் ஆஃபிஸ் பொறுப்பு என்று சொல்லித்தான் அழைத்தார்கள். மும்பை என்றதும் பளபளப்பான சாலைகள் மிணுங்கும் என்று எதிர்ப்பார்த்துச் சென்றவனுக்கு அதிர்ச்சி. எல்லாம் நம்மூரில் இருப்பது போலவே தான் இருக்கிறது.

அட்டைப்பெட்டி போல நெருக்கமாக அடுக்கப்பட்டிருந்த ஓர் அடுக்குமாடிக்குடியிருப்பில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான்கு அறைகள் கொண்ட அந்த வீட்டில் ஏற்கனவே பத்து பேர் இருந்தார்கள். இப்போது நான் நுழைந்திருக்கிறேன் இன்னும் ஐந்து பேர் வருவார்களாம்.

வீடு! :

வீடு! :

எல்லாருக்கும் வெளியில் சாப்பாடு என்பதால் கிச்சன் மேடையைக் கூட ஒருவன் தன் பெட்டாக ஆக்குபை செய்திருந்தான்.

இரண்டே பாத்ரூம்கள் அத்தனை பேருக்கும். நினைத்தாலே குமட்டியது. அதை விட ஓப்பன் ஸ்பேஸ் என்று ஒன்றும் இல்லை ஜன்னலைத் திறந்தால் பக்கத்து வீட்டின் அறை தான் தெரிகிறது. இடையில் ஒரு பூனைக்குட்டி கூட நுழைய முடியாது.

இது வேணாம்... நம்ம வெளியவே தங்கிக்கலாம் என்று முடிவெடுத்து அப்போதே பெட்டி படுக்கையுடன் வெளியேறி ஒவ்வொரு மேன்ஷனாக ஏறி இறங்கினேன்.

அலுவலகம் :

அலுவலகம் :

அவர்கள் பேசுகிறார்களா? உளறுகிறார்களா??? என்ன மொழி ஹிந்தியா? மராட்டியா? எதுவும் புரியவில்லை ஒரளவுக்கு கற்று வந்த ஹிந்தி கூட அவர்களால் மறந்து குழம்பிப் போனது தான் மிச்சம்.

அவர்கள் ஏதோ குத்துமதிப்பாக பேச நானும் ஆக்ஷனிலேயே பதில் சொல்லி முடித்து விடுவேன். ஒரு வழியாக, கூகுள் மேப்ஸ் உதவியுடன் எங்கள் பட்ஜெட்டில் அடங்குகிற மாதிரியான ஒரு மேன்ஷனை தேர்ந்தெடுத்தோம். அங்கு பெரிதாக வசதிகள் எல்லாம் இல்லை, சரி கொஞ்ச்ச நாளைக்குத் தான என்று சமாதானம் சொல்லிக் கொண்டோம்.

அங்கிருந்து நான் செல்ல வேண்டிய அலுவலகம் இருபது கிலோமீட்டர்.இரண்டு பஸ் மற்றும் ஒரு கேப் என செல்லவேண்டும்.

அவள் வந்துவிட்டாள் :

அவள் வந்துவிட்டாள் :

அங்கிருந்து எங்கே சாப்பிட? ஒரு ஹோட்டலும் சாப்பிடும்படி இல்லை.. பார்க்க கொஞ்சமாவது டீசண்ட்டாக இருந்த கடையில் நுழைந்து டோக்கன் வாங்கி வெளியில் நின்றபடியே சப்பாத்தியை முழுங்கினேன்.

முதல் நாள் அலுவலகத்திற்கு டிப்டாப்பாக இறங்குவோம் என்று சொல்லி கேப் விசாரித்தால் வஞ்சணை இல்லாமல் ஆயிரத்து ஐநூறு என்றது.

அங்கே இங்கே விசாரித்து... பேருந்துகளில் ஏறி அலுவலகத்தில் நுழையும் போது மணி 12!சம்பிரதாயங்களை முடித்து எனக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் உட்கார்ந்தேன்.எந்த ஊரு பாஸ்... நமக்கு திருச்சி என்று ஒரு நண்பர்.... சங்கடங்களைச் சொன்னேன். மாலையில் மெட்ரோவில் அழைத்துச் செல்வதாகவும் அப்படியென்றால் நேரமும் பணமும் மிச்சம் என்று சொன்னார்.

நிம்மதிப்பெருமூச்சு விட்டபடி போனை எடுத்தேன். பிபி எகிறியது.

இந்த பொண்ணுங்க இருக்காங்களே....

இந்த பொண்ணுங்க இருக்காங்களே....

ஆறு மிஸ்டு கால்கள் வாட்சப்பில் அவள் ஒருத்தி மட்டும் அறுபது மெசேஜ்கள்... போய்டியா... சாப்டியா.... மறந்துட்டியா ? அவ்வளவு தானா காதல்... இதற்குத்தானா நான் காதலித்தேன் அவள் மீது கோப்பப்படுவதா? பரிதாபப்படுவதா ஒன்றும் புரியவில்லை.

இப்போதைக்கு போன் செய்தால் வேலை செய்யும் மூடை கெடுத்து சண்டைபிடிப்பாள் என்று அமைதியாக இருந்தேன். மும்பையில் இறங்கிவிட்டேன். அலுவலகத்தில் இருக்கிறேன் என்று ஒரு மெசேஜ் மட்டும் தட்டிவிட்டேன்.

இது காதல் தாண்டவம் :

இது காதல் தாண்டவம் :

மாலையில் போன் செய்தேன். ஒரே அழுகை..... அங்க போனதும் என்னைய மறந்துட்ட எவ்ளோவாட்டி போன் பண்ணேன் ஒருவாட்டி கூட அட்டெண்ட் பண்ணனும்னு தோணுச்சா? நீ வேணும்னே என்னைய அவாய்ட் பண்ற என்று அழ ஆரம்பித்தாள்.

காலையில் நடந்த சம்பவங்களை எல்லாம் ஒன்று விடாமல் ஒப்பித்தேன். இங்கே என்னென்ன நடைமுறைச் சிக்கல்கள் இருக்கிறது நான் எப்படி தவிக்கிறேன் என்பதை விவரித்தேன்.

சரி. என்று முடித்த்துக் கொண்டாள். அடப் பாதகி.... இதோட விட்ருவோம் என்று சுதாரித்து சரிம்மா சாப்டியா என்று ப்ளேட்டை மாற்றினேன்.

தினசரி :

தினசரி :

இந்த புது இடம், மொழி தெரியாத மனிதர்கள், தங்கவும், சாப்பிடவுமே சிரமங்களை சந்தித்துக் கொண்டு அலுவலகம் சென்று வந்து கோவித்துக் கொள்ளும் அவளை சமாதானம் செய்து என ஒரு ஃபார்முக்கு வந்துவிட்டேன்.

எத்தனை முறை சொன்னாலும் அவளுக்கு புரியவில்லை. இங்கே பல பெண்களுடன் நான் ஜாலியாக இருப்பது போலவே அவளின் கற்பனையில் நான் இருந்திருக்கிறேன் போல... எப்போது போன் செய்தாலும் எங்க இருக்க? யாரோட இருக்க என்பது தான் அவளது முதல் கேள்விகளாக இருக்கும்.

மாற்றம் ஒன்றே போதும் :

மாற்றம் ஒன்றே போதும் :

இரண்டு மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மாறத்துவங்கியது. இங்கே எனக்கு எல்லாம் கொஞ்சம் பழகியது.

மாற்றம் என்னிடம் மட்டுமல்ல அவளிடமும் தான். இப்போதெல்லாம் அவ்வளவாக போன் பேசுவதில்லை... குறுஞ்செய்திகள் கூட குறைந்துவிட்டது. நானும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, விடுமுறை நாட்கள் என சுருங்கிக் கொண்டேன் அதற்காக காதல் குறைந்துவிட்டது என்றெல்லாம் அல்ல.... அவ்வளவு நேசிக்கிறேன் அவளை.

ஒரு வருடம் :

ஒரு வருடம் :

ஒரு வருடம் இப்படியே ஓடியது. போயி ஒரு வருஷத்துள ஐஞ்சு வாட்டி பேசிருப்பியா? என்னடா அங்க எவளையாவது பாத்து கல்யாணம் பண்ணிட்டியா?

ம்ம்ம்ம்மா....... உங்களுக்கெல்லாம் என்னைப் பாத்தா எப்டி தெரியுது.

இப்போதெல்லாம் என்னவள் தேறிவிட்டாள்.... அல்லது பழகிவிட்டாள் போல நான் போன் செய்தால் கூட எடுப்பதில்லை, மிகத் தாமதமாகத்தான் ரிப்ளை வருகிறது.

அவள் மீது கோபமோ வருத்தமோ ஏதுமில்லை.

அவளும் அவனும் :

அவளும் அவனும் :

ஒரு வருடம் பயிற்சியை முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பினேன். முன்னரே தகவல்கள் எல்லாம் கொடுத்திருந்தும் அன்றைக்கு காலை அவளிடமிருந்து எந்த மேசேஜும் இல்லை....போனும் வரவில்லை

தூங்கியிருப்பாள் என்று நினைத்துக் கொண்டேன். பத்து மணிக்கு நானே போன் செய்தேன். உனக்காக ஊர்ல இருந்து என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் தெரியுமா? என்று ஆர்வத்துடன் ஆரம்பிக்க...

அவள் சுரத்தையே இல்லாமல் பேசினாள். சரி நான் ஆபிஸ் கிளம்பிட்டு இருக்கேன் அப்றம் கூப்டவா என்று கேட்க நான் மறுப்பேதும் சொல்லாமல் கட் செய்தேன்.

மறுபடியும்... :

மறுபடியும்... :

அவ்வளவு ஆசையாக பேசும்போது இப்டி தவிர்க்கும் போது கொஞ்சம் கோபம் எட்டிப் பார்த்தது ஆனால் சூழ்நிலை புரிந்து அமைதியாகவிட்டேன். காலை உணவைச் சாப்பிட்டுக் கொண்டே பேஸ்பக் ஸ்க்ரோல் செய்தேன்.

ஒரு கணம்.... என் கண்களால் நம்பவே முடியவில்லை இது ஏதேனும் ஃபேக் ஐடியாக இருக்குமோ என்று ப்ரோஃபைல் ஆராய்ந்தேன்... இல்லை உறுதியானது.

மறுபடியும் படித்தேன்.

என்னவளின் பெயருடன் ரிலேஷன்ஷிப் வித் என்று வேறு எவனோ ஒருவனின் பெயர் நீல நிறத்தில் தெரிந்தது.

பேச்சுக்கள் :

பேச்சுக்கள் :

காதலிப்பவர்களுக்கு தினமும் லவ் யூ என்று மெசேஜ் அனுப்புவது, குட் மார்னிங் குட் நைட் அனுப்புவது, தகவல்களை லைவ் அப்டேட்ஸ் கொடுத்துக் கொண்டிருப்பது எல்லாம் அவசியமா என்ன? என்று கேள்வி தான் உங்கள் முன்னர் இப்போது இருக்கிறது.

இந்தக் கதையில் யார் மீது தவறு இருக்கிறது? நீ எனக்கானவள் அதனால் உன்னை ஒரு கூண்டிற்குள் அடைத்து வைக்க விரும்பவில்லை என்று சொன்ன காதலன் மீதா? இங்கேயிருக்கும் போதெல்லாம் என்னுடன் அன்புடன் பேசியவன்.... பழகியவன் ஊரை விட்டுச் சென்றதும் என்னை மறந்து விட்டான் என்று காதலை மறந்து சென்ற காதலி மீதா?

இதேப் போன்ற சந்தர்ப்பங்கள் உங்கள் வாழ்க்கையிலோ அல்லது உங்கள் நண்பர்களின் வாழ்க்கையிலோ சந்தித்திருப்பீர்கள்.... உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story Explains About Distance Relationship

Real Life Story Explains About Distance Relationship