அம்மா புள்ளையா இருந்தா, அப்பறம் எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிறீங்க? - My Story - #077

Posted By:
Subscribe to Boldsky

எல்லா பெண்களை போல தான் என் வாழ்க்கையும் இருந்தது. எனக்கு பிடித்த வேலைக்கு சென்று வந்துக் கொண்டிருந்தேன். திருமணம் எனும் பெற்றோர், பெரியோர், ஊரார் கட்டாயப்படுத்தும் சம்பிரதாயம் என் பாதையை திசை மாற்றியது. தவறு திருமணம் அல்ல, திருமணத்திற்கு அவர்கள் எனக்காக பார்த்த குடும்பம். 

அக்டோபர் 10, 2016... அன்று தான் முதல் முறையாக நான் எனது வாழ்க்கை துணையை கண்டேன். பெண் பார்க்க எனது வீட்டுக்கு குடும்பத்துடன் வந்திருந்தார். அன்று தான் எங்களுக்கு நிச்சயம் நடந்தது. நிச்சயமான ஆறு மாதத்தில் எங்களுக்கு திருமணமும் நடந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பத்தே நாட்கள்...

பத்தே நாட்கள்...

அந்நாளில் இருந்து, இந்நாள் வரை அவர் என்னுடன் இல்லையே என நான் வருந்தாத நாளில்லை. எங்களுக்கு 2017 ஏப்ரல் மாதம் திருமணம் ஆனது. நாங்கள் இருவரும் திருமணமாகி ஒன்றாக எத்தனை நாட்கள் இருந்தோம் என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம். சுமாராக ஒரு பத்து நாட்கள் இருக்கும். அவருக்கு வேலை ஐதராபாத்தில். நான் பெங்களூரில் வேலை செய்து வந்தேன். இந்த காரணத்தால் நாங்கள் வெகு நாட்கள் விலகியே இருந்தோம்.

சொர்க்கம் டூ நரகம்!

சொர்க்கம் டூ நரகம்!

என் திருமண வாழ்விலேயே அந்த பத்து நாட்கள் தான் மிகவும் சந்தோசமாக இருந்தது. மற்ற நாட்கள் எல்லாம் ஜெயில் வாழ்க்கை தான். அவர் என்னுடன் இருந்துவரை சொர்கமாக இருந்த திருமண வாழ்க்கை, அவர் என்னைவிட்டு பிரிந்து வேலைக்கு சென்ற நாளில் இருந்து நரகமாக மாறியது.

வேலைக்காரி!

வேலைக்காரி!

காரணமே இல்லாமல், தொட்டதற்கு எல்லாம் மாமியார் என்னை திட்டுவார். நான் வேலைக்கே சென்றாலும் கூட காலை, மதிய உணவை சமைத்துவிட்டு தான் செல்ல வேண்டும். சமையல் மட்டுமல்ல, சமைத்த பாத்திரங்களை கழுவிவிட்டு, இதர அனைத்து வீட்டு வேலைகளையும் செய்து முடித்த பிறகே வேலைக்கு செல்ல வேண்டும்.

அடக்குமுறை!

அடக்குமுறை!

நான் என்ன உடை உடுத்த வேண்டும் என்பதில் இருந்து எப்படி நடக்க வேண்டும் என்பது வரை மாமியார் கூறுவது போல தான் இருக்க வேண்டும். அவர் கூறியதற்கு மாறாக நான் உடை அணிந்தால், அவரது மகனுக்கு ஏற்ற மனைவி இல்லை, அவர்களது குடும்பத்திற்கு ஏற்ற மருமகள் இல்லை என என்னை குறைக்கூற துவங்கிவிடுவார்.

கொடுமை!

கொடுமை!

வீட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து கணவரிடம் கூறினால், அவர் என்னை நம்ப தயாராக இல்லை. நான் என்ன கூறினாலும், உடனே அவரது அம்மாவிற்கு கால் பறக்கும், அவரிடம் இருந்து அனைத்தையும் கேட்பார். அவர் கூறுவதை தான் நம்புவார். பிறகு, புருஷன் கிட்ட பத்த வெக்கிறியா, என்னையும், என் மகனையும் பிரிக்க பாக்கிறியா என மிகவும் கேவலமாக திட்ட ஆரம்பித்துவிடுவார்.

மன அழுத்தம்!

மன அழுத்தம்!

இப்படியாக கடந்த எனது திருமண வாழ்க்கையில் முற்றிலும் மன அழுத்தம் மட்டுமே நிறைந்திருந்தது. ஒருமுறை அவரை நேரில் சந்தித்து பேசி புரிய வைக்கலாம் என ஐதராபாத் சென்றேன். அவரது அம்மா செய்த கொடுமைகளை எல்லாம் கூறினேன். எந்த பிரயோசனமும் இல்லை. அவரை பொறுத்தவரை நான் செய்தது தான் தவறு.

நம்பிக்கை!

நம்பிக்கை!

இனியும் பேசி எந்த பயனுமில்லை என மீண்டும் ஐதராபாத்தில் இருந்து வீடு திரும்பினேன். பிறகு ஒருசில முறை போனில் பேசும் போது அவராகவே என்னையும், இங்கே நான் எதிர்கொண்டிருக்கும் சூழலையும் புரிந்துக் கொள்ள ஆரம்பித்தார். எப்படியோ அவர் என்னை நம்புகிறார் என எண்ணியது தான் நான் செய்த தவறு.

அம்மா பிள்ளை!

அம்மா பிள்ளை!

அவர் என்னுடன் அதிகமாக பேசினார். ஒவ்வொரு முறையும் அவரது தாயுடன் அதிகமாக பேசும்படி என்னை வற்புறுத்தினார். திட்டிக் கொண்டே இருப்பவரிடம் எப்படி போய் பேசுவது. நானாக என்ன செய்தாலும் அவருக்கு பிடிப்பதில்லை.

அவர் சொல்வதை செய்யும் ரோபாவாக மட்டுமே நான் இருக்க வேண்டும் என மாமியார் விரும்புகிறார். அதையே தான் மெல்ல, மெல்ல என்னிடம் கூறி என் கணவரும் என்னை மாற்ற நினைக்கிறார்.

(ஏ)மாற்றம்!

(ஏ)மாற்றம்!

கொஞ்ச நாட்களில் என் கணவரிடம் சில மாற்றங்கள் தென்பட்டன. அதற்கும் காரணம் அவரது தாய் தான். ஒரு நாள் மாமனார், மாமியாரிடம் இதுகுறித்து வெளிப்படையாக பேசிவிடலாம் என கருதினேன். எப்படியும் இதன் ரிசல்ட் எதிர்மறையாக தான் இருக்கும் என்பதை அறிந்தே, இதற்கு ஒரு தீர்வு காண முடிவு செய்தேன்.

சண்டை!

சண்டை!

நினைத்தப்படியே அவர்கள் கோபத்தின் உச்சிக்கு சென்றனர். என்னை ஒரு வேலைக்காரியைவிடவும் கேவலமாக நடத்தினார்கள். எப்படி எல்லாம் திட்ட முடியுமோ திட்டி தீர்த்தனர். அல்டிமேட்டாக ஒன்று வேலையை விடு, இல்லை மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு வீட்டை காலி செய்துவிடு என்றார்கள். வேலையை விட்டால், நான் என் தன்மானம் இழக்கக் கூடும்.

வெளியேறினேன்!

வெளியேறினேன்!

அம்மாவிற்கு கால் செய்தேன், நடந்ததை எல்லாம் ஆரம்பத்தில் இருந்தே கூறினேன். அவர் வந்து என்னை அழைத்து எங்கள் வீட்டுக்கு சென்றார். அதற்கு முன், மாமனாரிடம். மீண்டும் என் மகள் உங்கள் வீட்டுக்கு வர வேண்டும் எனில், உங்கள் மகனே வந்து தான் அழைத்து செல்ல வேண்டும் என கூறிவிட்டு வந்தார்.

காத்திருக்கிறேன்!

காத்திருக்கிறேன்!

நான் எங்கள் வீட்டுக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகிறது. இன்றுவரை என் கணவர் என்னிடம் பேசவில்லை. நானாக பேசலாம் என்றால், என்னை ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், மெசேஞ்சர் என அனைத்திலும் பிளாக் செய்து வைத்துவிட்டார். இன்றும் அவருக்காக தான் காத்திருக்கிறேன். எனக்காக அவர் ஒரு வாய்ப்பு அளித்தால் போதும், எனக்கு என்னென்ன கொடுமைகள் நடந்தன என்பதை கூறிவிடுவேன்.

ஆனால், அதற்கும் அவர் தயாராக இல்லை. என் தன்மானத்தை இழந்து அந்த வீட்டுக்கு மீண்டும் செல்ல எனக்கும் மனதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

My Story: Mother in Law Scripted and My Long Distance Marriage Life Destroyed!

My Story: Mother in Law Scripted and My Long Distance Marriage Life Destroyed!