திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு வேறு ஆண் மீது காதல் வருவது தவறா? - MyStory #051

Posted By:
Subscribe to Boldsky

என் கணவரை நான் திருமணம் செய்துக் கொண்ட போது என் வயது 26. அவர் என்னைவிட ஐந்து வயது மூத்தவர். இன்று, எங்களுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை இருக்கிறான். திருமணத்திற்கு முன்னரே, இந்த உறவை துண்டித்துக் கொள்வதற்கு பதிலாக, இன்று அவ்வப்போது கணவருடன் சண்டையிட்டு வருகிறேன்.

என் கணவர் மிகவும் அன்பானவர், அக்கறை எடுத்துக் கொள்பவர். எனக்காக நிறைய உதவிகள் செய்வார். தினமும் வீட்டு வேலைகளில் அவர் பங்கெடுக்க மறந்ததே இல்லை.

எங்களுக்கு திருமணம் ஆனதில் இருந்து, எனது முன்னாள் காதலன் குறித்து நான் எப்போதுமே நினைத்து பார்த்ததுமில்லை, ஒருவேளை அவனுடன் என் திருமணம் நடந்திருந்தால் என் இல்வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்றும் எண்ணியதில்லை.

திருமணமாகி சில வருடங்களை கழிந்த பிறகு தான், எனக்கான ஒருவனை கண்டேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நண்பர் வாயிலாக...

நண்பர் வாயிலாக...

எனது நண்பர் ஒருவர் வாயிலாக தான் அவனது தொடர்பு கிடைத்தது. அவனுக்கும் என்னுடைய வயது தான். அவனுக்கும் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. எங்களுக்குள் இதை தவிர வேறு எதுவும் பொதுவாக இல்லை.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், எனது நேச்சரும், அவனது நேச்சரும் முற்றிலும் வேறுபட்டு இருந்தது. அவன் மிகவும் அமைதியானவன், பொறுமையாக இருப்பான். நான் மிகவும் சப்தம் போட்டு பேசுவேன், பொறுமை என்றால் என்ன, எத்தனை கிலோ என்று தான் நான் கேட்பேன்.

ஃபேஸ்புக்!

ஃபேஸ்புக்!

ஒருநாள் அவனிடம் இருந்து எனது ஃபேஸ்புக் முகவரிக்கு ஃபிரண்ட்ஷிப் ரெக்வஷ்ட் வந்தது. வெகு குறைந்த காலத்தில் நாங்கள் மிக நெருக்கமான நண்பர்கள் ஆனோம். எங்கள் இருவருக்குள் எண்ணிலடங்கா ஃபேஸ்புக் டெக்ஸ்ட் மெச்செஜ், போன் கால்கள், லன்ச் பிரேக்குகள் தொடர்ந்தன.

என் கணவர் வேலை காரணமாக வெளியிடத்தில் தங்கியிருந்தார். வாரம் இருமுறை மட்டுமே வீட்டிற்கு வந்து செல்வார். என்னுள் எப்படி அந்த நண்பன் மீது உணர்வுகள் அதிகரிக்க ஆரம்பித்தது என நான் அறிந்திருக்கவில்லை.

ஓர் இரவு...

ஓர் இரவு...

ஓர் இரவில் எப்போதும் போல பேசிக் கொண்டிருந்த போது, அவனுக்கும் என் மீது அதே போன்ற உணர்வுகள் அதிகரித்ததாக கூறினான். நாங்கள் இருவருமே ஒருவர் மீது ஒருவர் மோகம் கொண்டிருந்தது அப்போது தான் தெரிந்துக் கொண்டோம். இதற்கு காரணம் எங்கள் இருவருக்குள் நாங்கள் பகிர்ந்துக் கொண்ட அதிகப்படியான நேரம் தான்.

பிக்னிக்!

பிக்னிக்!

ஒருமுறை நானும் எனது கணவரும் பிக்னிக் சென்றிருந்தோம். அந்த பயணத்தின் போது எனக்கும், அந்த தோழனுக்குமான தொடர்பு மொத்தமாக அறுபட்டு போனது. அந்த நாட்களில் தான் நான் அவன் மீது எவ்வளவு காதல் வைத்துள்ளேன் என்பது அறிய கருவியாக இருந்தது. இந்த காதல் வெளிபாடு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அவனுடன் பேச காத்திருக்க கூடாது என்ற நிலைக்கு சென்றேன்.

ஒரு வாரம், ஒரு வருடம்!

ஒரு வாரம், ஒரு வருடம்!

அந்த வார பயணம், எனக்கு ஒரு வருடம் போல நகர்ந்தது. என் கணவர் என்னுடன் இருந்த காரணத்தால், அவனுடன் அதிக நேரம் பேச முடியாமல் போனது. எனது மனதில் ஒவ்வொரு நொடியும் அவனது நினைவுகளே உதித்துக் கொண்டிருந்தன.

அந்த பயணத்தை முடித்து வீடு திரும்பிய பிறகு, அந்த நண்பனிடம் என்னுள் மலர்ந்த எண்ணங்கள் குறித்து அனைத்தும் கூறினேன். அவனும் என் மீது காதல் கொண்டிருந்தான். அவன் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

விலகாத நொடிகள்...

விலகாத நொடிகள்...

அதன் பிறகு நாங்கள் இருவரும் இரவும், பகலுமென எப்போதுமே தொடர்பிலேயே இருந்தோம். என் கணவர் வீட்டில் இருக்கும் நாட்களை தவிர. எங்கள் இருவருக்கு மத்தியில் இருக்கும் உறவு, நாளுக்கு நாள் வலிமையாவதை கண்டு நாங்கள் ஆச்சரியமடைந்ததும் உண்டு.

இதனால், எங்களுக்குள் பிரிந்துவிடலாம் என்ற எண்ணமே எழவில்லை. இதற்கும், அந்த நண்பன் ஒன்றும் பேரழகன் அல்ல. சுமாரான தோற்றம் கொண்டவன் தான். அவன் ஓர் இளவரசன் போல அல்லது சாக்லேட் பாய் போன்ற தோற்றம் கொண்டவன் அல்ல.

இது தவறு...

இது தவறு...

என்னுள் இந்த உணர்வுகள் அதிகரிப்பதை நான் விரும்புவதும், அனுமதிப்பதும் தவறு என எனக்கு தெரிந்தது. அவன் திருமணமான ஆணாக இருந்தாலுமே கூட, எனது கட்டுப்பாடு என்னை கடந்து சென்றுவிட்டது.

பலமுறை இது சரியான உணர்வு தானா? என நான் க்ராஸ் செக் செய்ததுண்டு. ஒவ்வொரு முறையும், இது காதல் தான் என்றே முடிவே எனக்கு கிடைத்தது. இப்படி ஒரு உணர்வை நான் எனது கணவரிடமோ, முன்னாள் காதலனிடமோ கண்டதில்லை.

மேஜிக்!

மேஜிக்!

இந்த உணர்வு ஒரு மேஜிக் போன்றது. இதை தான் இந்த உலகம் காதல் என்கிறதா? என்ற கேள்வி என்னுள் எழுந்துக் கொண்டே இருக்கும்.

வேறு நபருடன் திருமணமான பிறகு, குழந்தை பெற்ற பிறகு காதல் வருவது சரிதானா? ஆனால், இதன் பிறகு தானே என் வாழ்வில் ஓர் உண்மையான காதலை நான் கண்டேன். என்ன செய்ய. அவனை விட்டு விலகுவதும் கடினம்.

பைத்தியம்!

பைத்தியம்!

காதல் எப்போதுமே அசாதாரணமான ஒன்று, பைத்தியக்காரத்தனமான முடிவை தான் எடுக்க வைக்கும். நான் எதையும் மறக்க நினைக்கவில்லை. எங்களுள் தகாத வகையில் ஏதுமில்லை. அவனுடன் பழகுவது, பேசுவது என்னுள் காதல் உணர்வுகளை ஏற்படுத்துகிறது.

இதை இதன் முன் நான் வேறு யாருடனும் உணரவில்லை என்பது தான் உண்மை.

இந்த உறவின் காரணத்தால் என் வாழ்வில் என்ன நடக்கும் என எனக்கு தெரியாது. ஆனால், என் வாழ்வினுள் வந்ததற்காக நான் அவனுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். என் வாழ்வை வண்ணமையம் ஆக்கியவன் அவன் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

My Story: I Share A Child With My Husband, But Not My Heart!

My Story: I Share A Child With My Husband, But Not My Heart!