இப்படிப்பட்ட திருமணங்களை எல்லாம் நேரில் பார்த்திருக்கிறீர்களா?

Posted By:
Subscribe to Boldsky

இந்தியாவில் திருமணம் என்பது மிகப்பெரிய சந்தையாக மாறிவிட்டிருக்கும் சூழலில் அதன் வழக்கங்களையே மாற்றி அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் சில திருமணங்கள் நடைப்பெற்று இருக்கின்றன.

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்,நம் செல்வத்தை நம்முடைய ஆடம்பரத்தை காட்டும் ஓர் வழி, பொறுத்தங்கள் இருக்க வேண்டும் என்று ஏதேதோ பீடிகைகளுடன் பிரம்மாண்ட நிகழ்ச்சியாகத்தான் இதுவரை திருமணத்தை பார்த்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம்

திருமணம் பற்றி நம்முடைய அபிப்ராயங்களை மாற்றியமைத்து சில திருமணங்களை பற்றிய தொகுப்பு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருமணம் 1 :

திருமணம் 1 :

ஐ ஆர் எஸ் அதிகாரி அபய் திவாரே மற்றும் வங்கி அதிகாரி ப்ரீத்தி கும்பாரே இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? திருமணத்திற்காக ஆடம்பர செலவுகள் எதுவும் இருக்க கூடாது என்று இருவருமே முடிவெடுத்தனர்.

வீணாக ஆடம்பர விஷயங்களில் செலவழிப்பதற்கு பதிலாக பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் என்று விரும்பியவர்கள், மிகவும் ஏழ்மை நிலையினால் தற்கொலை செய்து கொண்ட விவசாய குடும்பத்தினர் 10 குடும்பங்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20,000 ரூபாய் வரை கொடுத்திருக்கிறார்கள்.

ஐந்து நூலகங்களுக்கு 52000 மதிப்புள்ள புத்தகங்களை வாங்கி கொடுத்திருக்கிறார்கள். இவை போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Image Courtesy

திருமணம் 2 :

திருமணம் 2 :

இங்கே மணமகன் திருமணத்திற்கு முன்பே ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொண்டார். அதோடு பத்தாயிரம் அனாதை மக்களை தன் திருமணத்திற்கு அழைத்திருந்தார்.

பூனேவைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஆதித்யா திவாரி தனக்கு திருமணமாவதற்கு முன்பே ஒரு குழந்தையை தத்தெடுத்து கொண்டார். அந்த குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் என்ற மூளை குறைபாடு இருந்தது அதே சமயத்தில் அந்த குழந்தைக்கு இதயத்தில் ஓட்டையும் இருந்திருக்கிறது.

தத்தெடுத்த குழந்தையுடனே மணமேடையில் அமர்ந்திருந்தார். அவர்களின் திருமணத்திற்கு அனாதையாக கைவிடப்பட்டோர், முதியவர்கள்,மற்றும் ஊனமுற்றோர் என பிறர் யாருமே அழைக்கத் தயங்குபவர்களை பட்டியலிட்டு அழைத்திருந்தார்.

இது மட்டுமன்றி இவர்களது திருமணத்தை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கிறது, மிருகக் காட்சி சாலையில் இருக்கும் விலங்குகளுக்கு உணவுகளும் வழங்கப்பட்டிருக்கிறது.

Image Courtesy

திருமணம் 3 :

திருமணம் 3 :

நம்முடைய சமுதாயத்தில் பாலியல் பலாத்காரம் என்பது ஒதுக்கி வைக்க கூடிய ஒன்றாகத் தான் இருக்கிறது. குறிப்பாக இது பெண்களை அதிகம் பாதிக்க கூடியது, ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறாள் என்றால் அவள் சமூகத்தில் வாழவே தகுதியில்லாதவள் என்கிற ரீதியில் பிற்போக்குத்தனமான பல்வேறு கற்பிதங்களை வைத்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு மத்தியில், 2017,மே மாதம் இவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லும் வகையில் ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வினால் பாதிக்கபப்ட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

அதோடு, அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்க அவருடன் சேர்ந்து தொடர்ந்து போராடினார்.

திருமணம் 4 :

திருமணம் 4 :

காதலுக்கு, திருமணத்திற்கு அழகு என்பது ஒரு பொருட்டு அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் சாலை விபத்தால் முகம் சிதைந்த தன்னுடைய காதலியை பல்வேறு எதிர்ப்புகளை மீறி கரம் பிடித்தார் ஜெயப்பிரகாஷ்.

Image Courtesy

 திருமணம் 5 :

திருமணம் 5 :

மும்பையைச் சேர்ந்த சிசிடிவி ஆப்ரேட்டர் ரவி ஷங்கர் சிங் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஒரு ராங் கால் மூலமாக அந்தப் பெண்ணின் தொடர்பு கிடைத்திருக்கிறது. இதன் மூலமாக இருவரும் காதலித்து திருமணம் செய்திருக்கிறார்கள்.

Image Courtesy

திருமணம் 6 :

திருமணம் 6 :

திருமணத்திற்கு பின் கணவனை இழந்த பெண்கள் எந்த ஒரு நல்ல விஷயத்திலும் பங்கெடுக்க கூடாது என்று சமூகம் ஒதுக்கி வைத்திருந்தது. அவர்கள் ராசியில்லாதவர்கள் என்றும் முத்திரை குத்தப்பட்டிருந்தது. இதனையும் முறியடித்திருக்கிறார்கள்.

ஜிதேந்திரா பாட்டீல் என்பவர் தன்னுடைய மகன் திருமணத்திற்கு பத்தினெட்டாயிரத்திற்கும் மேற்ப்பட்ட விதவைப் பெண்களை அழைத்திருந்தார். அவர்களில் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்களை தேர்ந்தெடுத்து 500 பசுமாடுகளை தானமாக வழங்கியிருக்கிறார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Marriage which break Stereotypes in society

Marriage which break Stereotypes in society