மேற்கத்திய காலச்சரங்கள் நம்மில் கலந்தது தான் விவாகரத்து ஏற்பட முக்கிய காரணமா?

Written By: Lakshmi
Subscribe to Boldsky

திருமணம் என்பது வாழ்க்கையில் முக்கியமானது. நம் வாழ்வின் கடைசி நாட்கள் வரை நம்முடன் வரக்கூடிய ஒரு உறவு. இந்த உறவில் விட்டுக்கொடுத்து போவது மற்றும் சில விஷயங்களை அனுசரித்து போவது முக்கியம். நம் அம்மா, பாட்டி போன்றவர்களுக்கு இருந்த பொருமையும், விட்டுக்கொடுத்து போகும் குணமும் நம்மிடம் உள்ளதா? கண்டிப்பாக இல்லை. நமது எண்ணங்களுக்குள் மேற்கத்திய நாகரிகம் பரவி வருவது இது திருமணங்கள் தோல்வியில் முடிய காரணமாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேற்கத்திய தாக்கங்கள்

மேற்கத்திய தாக்கங்கள்

இன்றைய சில பெண்கள் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் முன்னரே தனது சுயமரியாதையை காப்பாற்ற வேண்டும், சுதந்திரம் பறிபோகக்கூடாது என்பது தான் பெண்களின் எண்ணமாக இருக்கிறது. ஆண்களும் அவ்வாறே இருக்கின்றனர். யாராக இருந்தாலும் திருமணத்திற்கு பின்னர் சில மாற்றங்களை செய்து கொண்டால் தான் வாழ்க்கையை சிறப்பாக வாழ முடியும் என்ற நிலை மாறி விட்டது. இன்று எதிர்பார்ப்புகள் மற்றும் ஏமாற்றங்கள் மட்டுமே மிஞ்சுகிறது.

நமது பாரம்பரியம்

நமது பாரம்பரியம்

மேலை நாடுகள் எல்லாம் நமது பாரம்பரியத்தை கண்டு திகைப்பில் இருக்கும் போது நமது எண்ணகளோ மேலைநாடுகளின் பாரம்பரியத்தின் பக்கம் சாய்கிறது. சகிப்பது தன்மை ஆண் பெண் என இருபாலரிடமும் குறைந்து தான் காணப்படுகிறது.

சகிப்பு தன்மை

சகிப்பு தன்மை

இன்றைய தலைமுறையினரிடம் வேகம் மட்டுமே உள்ளதே தவிர உறவில் சகிப்பு தன்மையும், விட்டுக்கொடுத்து போவதும் அதிகம் காணப்படுவது இல்லை. மேலைநாடுகள் எல்லாம் அப்படி இருக்கின்றன. எனவே நாமும் அதை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.

கூட்டுக் குடும்பங்கள்

கூட்டுக் குடும்பங்கள்

கூட்டுக் குடும்ப வாழ்க்கை தம்பதிகளிடையே உண்டாகும் பல பிரச்சனைகளை குறைப்பதாக இருக்கிறது. இந்த வாழ்க்கையில் தம்பதிகளுக்கிடையே ஏதேனும் சண்டைகள் வந்தால் கூட அதனை தடுக்கவும் அறிவுரைகள் சொல்லவும் பெற்றோர்கள் இருந்தார்கள். தனிக்குடும்ப வாழ்க்கை பிரச்சனைகளை பெரிதுபடுத்துகிறது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

இன்று நாம் நிதி நிலை மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை தான் அதிகம் விரும்புகின்றோம். உறவுகளுக்கு தரும் மதிப்புகள் குறைந்துவிட்டது. பிற விஷயங்களை காட்டிலும் தம்பதிகள் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடந்து கொள்வது வேண்டும்.

இன்று நாம் நிதி நிலை மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை தான் அதிகம் விரும்புகின்றோம். உறவுகளுக்கு தரும் மதிப்புகள் குறைந்துவிட்டது. பிற விஷயங்களை காட்டிலும் தம்பதிகள் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடந்து கொள்வது வேண்டும்.

அதிகரித்து வரும் விவாகரத்து

அதிகரித்து வரும் விவாகரத்து

இன்னும் இந்தியாவில் விவாகரத்துகளின் அளவு குறைந்ததாக தெரியவில்லை. அதிக அளவு விவாகரத்துகள் வர சகிப்பு தன்மை இன்மை, விட்டுக்கொடுத்து போகும் தன்மை இல்லாதது ஆகியவை காரணமாக இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Indian Marriages Failing Because Of Western Influences

Indian Marriages Failing Because Of Western Influences
Story first published: Tuesday, June 20, 2017, 16:30 [IST]
Subscribe Newsletter