For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் மனைவியை குஷியாக வைத்துக்கொள்ள நீங்க இத எல்லாம் அடிக்கடி பண்றீங்களா?

இங்கே கணவன் தன் மனைவிக்காக அடிக்கடி செய்ய வேண்டிய சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

By Lakshmi
|

அனைவருக்குமே தங்களது இல்வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு உங்கள் மனைவிக்கு நீங்கள் அவரை எப்போதும் காதலிக்கிறீர்கள், காதலிப்பீர்கள் என்பதை உணர்ந்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். உங்கள் காதலை வெளிக்காட்ட தெரியவில்லையா? இதோ இங்கே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை முழு மனதோடு உங்கள் மனைவிக்கு செய்யுங்கள். அப்பறம் என்ன எப்போதும் உங்கள் மனைவி ஒரே குஷியாக இருப்பார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. மார்பில் சாய்த்துக்கொள்ளுங்கள்

1. மார்பில் சாய்த்துக்கொள்ளுங்கள்

உடல் ரீதியான தேவைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடும். உங்கள் மனைவியை மார்பில் சாய்த்துக்கொள்ளுதல் அவருக்கு மிகவும் பிடிக்கும்.

2. உடலுறவு

2. உடலுறவு

மார்பில் சாய்த்து கொண்டவுடன் உடனடியாக அடுத்த நிலையான உடலுறவுக்கு தாவ நினைப்பீர்கள். சரிதானே? உங்கள் மனைவி தானாக முன்வரவில்லை. வற்புறுத்தல்கள் வேண்டாம்.

3. இரவு உணவு உங்கள் பொறுப்பு

3. இரவு உணவு உங்கள் பொறுப்பு

அடிக்கடி நீங்களாக முன்வந்து இரவு உணவை உங்கள் கையால் சமைத்து மனைவிக்கு ஊட்டிவிடுங்கள். அவர் மிகவும் சந்தோஷப்படுவார். குறிப்பாக உங்களுக்கு வீட்டில் தினமும் நல்ல சாப்பாடு கிடைக்கும்.

4. குழந்தைகளை வெளியே அழைத்து செல்லுங்கள்

4. குழந்தைகளை வெளியே அழைத்து செல்லுங்கள்

குழந்தைகள் என்றாலே சேட்டைகளுக்கு பஞ்சமா இருக்கும்? உங்கள் மனைவியால் குழந்தைகளை கவனித்துக்கொண்டு வேலையையும் பார்க்க சிரமமாக உணரும் போது உங்கள் குழந்தைகளை ஒரு மணிநேரம் அல்லது அதற்கு மேலாக வெளியே அழைத்து செல்லுங்கள். இது உங்கள் மனைவிக்கு அவரது வேலைகளை சிரமமின்றி முடிக்க உதவியாக இருக்கும்.

5. ஜென்டில் மேன்

5. ஜென்டில் மேன்

உங்கள் மனைவியை வெளியே அழைத்து செல்லும் போது கார் கதவை திறந்துவிடுவது, படிகளில் ஏற முடியவில்லை என்றால் கைகளை பிடித்து அழைத்து செல்வது, அன்புடன் பேசுவது போன்ற விஷயங்களை செய்து அவ்வப்போது அசத்துங்கள்.

6. பாராட்டுங்கள்

6. பாராட்டுங்கள்

உங்கள் மனைவி அழகாக இருக்கிறார் என்று தோன்றுகிறதா? அவர் நகைச்சுவையாக பேசிகிறார் என்று தோன்றுகிறதா? அப்ப உடனே அவரை புகழ்ந்து பாரட்டுங்கள்.

7. அவருடன் வேண்டுங்கள்

7. அவருடன் வேண்டுங்கள்

ஒரு நல்ல கணவர் மனைவிக்காக தினமும் இறைவனின் வேண்டுவார். ஒரு மிகச்சிறந்த கணவர் மனைவியுடன் சேர்ந்து வேண்டுவார்.

8. வெளியே அழைத்து செல்லுங்கள்

8. வெளியே அழைத்து செல்லுங்கள்

உங்கள் மனைவியை அடிக்கடி வெளியில் அழைத்து செல்லுங்கள். அதற்காக நீங்கள் அதிக பணம் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அருகில் உள்ள பார்க், பீச் அல்லது சினிமாவிற்கு அழைத்து செல்லுங்கள்.

9. அவரை தூங்க வையுங்கள்

9. அவரை தூங்க வையுங்கள்

தினமும் குழந்தைகளை கவனித்து கொள்வதால் அவர்களால் சரியாக தூங்க முடியாது. எனவே நீங்கள் வீட்டில் இருக்கும் போது குழந்தைகளை நீங்கள் கவனித்துக்கொண்டு உங்கள் மனைவியை தூங்க வையுங்கள்.

10. அவரது பொழுதுபோக்குகளை ஊக்குவியுங்கள்

10. அவரது பொழுதுபோக்குகளை ஊக்குவியுங்கள்

குடும்பத்தை பார்த்துக்கொள்வதிலேயே பெண்களின் நேரம் அனைத்தும் போய்விடுகிறது. அவர்களுக்கு ஆர்வம் உள்ள விஷயங்களை செய்வதற்கு போதுமான நேரம் இருப்பது இல்லை. எனவே உங்கள் மனைவியின் பொழுதுபோக்குகளை ஊக்குவியுங்கள்

11. மன்னிப்பு கேளுங்கள்

11. மன்னிப்பு கேளுங்கள்

பொதுவாக ஆண்கள் சண்டை வரும் போது ஒரு மணிநேரம் அல்லது ஒரு இரவில் சண்டையை மறந்து அந்த விஷயத்தை தூக்கி எரிந்துவிடுவார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை அதை மனதில் நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். எனவே உங்கள் மனைவியிடம் மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்துவது அவசியம்.

12. கையை பிடித்துக்கொள்ளுதல்

12. கையை பிடித்துக்கொள்ளுதல்

உங்கள் மனைவி வருத்தமாகவோ அல்லது சோகமாகவோ இருக்கும் போது அவரது கைகளை பிடித்துக்கொண்டு ஆறுதலாக நாழு வார்த்தை பேசுங்கள்.

13. மரியாதை

13. மரியாதை

உங்கள் மனைவிக்கு மரியாதை கொடுத்து நடந்து கொள்ளுங்கள். சண்டை வரும் போது கூட கெட்ட வார்த்தைகளையோ அல்லது அவரை காயப்படுத்தும் வார்த்தைகளையோ கூறாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

husband should do these things regularly

here are the some things that husband should do regular basis
Story first published: Saturday, May 27, 2017, 11:32 [IST]
Desktop Bottom Promotion