உங்கள் துணையின் நம்பிக்கையை பெற நீங்கள் இவற்றை செய்ததுண்டா?

Posted By:
Subscribe to Boldsky

இன்பத்தை மட்டும் பெருக்கி கொள்வதல்ல உறவு. ஒருவர் உறவில் இன்பம் மட்டும் எதிர்பார்க்கிறார் எனில், அவர் உங்கள் சரியான துணை என்பதை அறிந்துக் கொள்ள முடியும். ஓர் ஆரோக்கியமான உறவின் ஆணிவேர் நம்பிக்கை. நம்பிக்கை இல்லாத உறவு இறந்துவிட்டது என்பதே உண்மை.

சண்டை, சச்சரவு, சந்தேகங்கள், ஈகோ, விருப்ப, வெறுப்பு காரணங்களால் உறவில் நம்பிக்கை குறைய வாய்ப்புகள் உண்டு. ஆனால், அதை மீட்டெடுக்க கற்றுக் கொள்ள வேண்டும். பொதுவாகவே உறவை, குடும்பத்தை நாம் ஒரு மரமாக தான் பாவிக்கிறோம். அதனால் ஆயிரம் உயிர்கள் பயன்பெறுகிறது.

எப்படி மரம் தன்னில் இருந்து உதிர்ந்த இலைகளை, மீண்டும் இயற்கையாக பெறுகிறதோ, அதே போல, உறவுகளில் இழந்த நம்பிக்கையையும் மீண்டும் மீட்டெடுக்க முடியும். அதற்கு நீங்கள் ஒருசிலவற்றை சரியாக செய்ய வேண்டும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேசு நிலவே...

பேசு நிலவே...

கொஞ்சம் ஈகோ எட்டிப்பார்த்தாலும் நாம் செய்யும் தவறு பேசுவதை குறைத்து கொள்வது, சரியாக பேசாமல் போவது, எரிச்சலூட்டும் வகையில் பேசுவது., விரிசல் பெருசாகும் வகையில் பதில் அளிப்பது. இவற்றை முதலில் தவிர்க்க வேண்டும்.

சண்டையாக இருக்கட்டும், உறவில் நம்பிக்கையின்மை குறைந்ததாக இருக்கட்டும்... தவறு யார் தான் செய்யவில்லை. தவறு உங்கள் மீதிருந்தால் மன்னிப்பு கேளுங்கள், அவர் மீது இருந்தால் மன்னிக்க பழகுங்கள்.

முதலில் முகம் கொடுத்து, கொஞ்சம் புன்னகை கலந்து பேசுங்கள். அப்போது தான் உறவில் நம்பிக்கை பெருகும்.

அனுதாபம் அல்ல...

அனுதாபம் அல்ல...

அனுதாபம் என்பது வேறு, பச்சாதாபம் என்பது வேறு... இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. ஒருவருடைய சோகத்தை கண்டு வருவது அனுதாபம். ஒரு கஷ்டப்படுகிறார் எனும் போது அவர் மீது கருணை காண்பிப்பது பச்சாதாபம்.

உங்கள் துணைக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்து அதை செய்துக் கொடுங்கள். அவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் உடன் இருந்து உதவுங்கள். உங்கள் துணையை உணர்வு ரீதியாக சமாதானப்படுத்துங்கள். இதை நீங்கள் சரியாக செய்து வந்தாலே போதுமான நம்பிக்கை உங்கள் மீது வந்துவிடும்.

நீர் ஊற்றவும்...

நீர் ஊற்றவும்...

மரத்தை வளர்க்க நீர் ஊற்ற வேண்டும், உறவில் நம்பிக்கை வளர்க்க அன்பை ஊற்றவும். இந்த உலகில் சக்தி வாய்ந்தது அன்பு. அன்பை தாண்டிய பெரும் சக்தி வேறொன்றும் இவ்வுலகில் இல்லை. தாயன்பிற்கு பிறகு ஒரு பெண் அதிகம் எதிர்பார்க்கும் அன்பு கணவனின் அன்பு.

எனவே, உங்கள் மனைவி மீது அளவுகடந்த அன்பு செலுத்துங்கள். இந்த அன்பு உங்கள் உறவில் ஆரோக்கியம், வலிமை, நம்பிக்கை, ஆசை, நெருக்கம், இறுக்கம் என அனைத்தையும் வளர்க்கும்.

சோதிக்க வேண்டாம்...

சோதிக்க வேண்டாம்...

சந்தேகம் எனும் கருவி உலகில் மாபெரும் விஷம். இது எதையும் உடைத்துவிடும், சீர்குலைத்துவிடும். இதை உறவில் தெளிக்க வேண்டாம். இந்த விஷத்தால் ஏற்பட்ட விளைவுகளை சரிசெய்ய மீண்டும் நீங்கள் அன்பெனும் மருந்தை தான் பயன்படுத்த வேண்டும். ஆனால், சில சமயங்களில் சந்தேகத்தின் பின் வரும் அன்பும் சந்தேகமாகவே காணவைக்கும்.

எனவே, சந்தேகப்படுவது, சோதனை செய்வது எல்லாம் வேண்டாம். எதுவாக இருந்தாலும் நேருக்கு, நேர் வைத்துக் கொள்ளுங்கள்.

இரகசியங்கள்!

இரகசியங்கள்!

உலகில் இரகசியங்கள் பேணிக்காக்கப்படும் பெட்டகம் தான் கணவன் - மனைவி உறவு. ஆனால், அந்த உறவிலேயே இரகசியம் மறைப்பது என்பது பெரும்பாலும் தவறுகளை மறைப்பதாக தான் இருக்கும். எனவே, கணவன் - மனைவி உறவில் இரகசியங்கள் மறைக்க வேண்டாம். இது நம்பிக்கையை கொன்று, சந்தேகம் எனும் விஷமாக மாற செய்யும்.

வேண்டாம்...

வேண்டாம்...

வேண்டும் என கேட்பது மட்டும் உறவல்ல, வேண்டாம் என கூறவும் பழக வேண்டும். உங்கள் துணை தவறு செய்கிறார் என்றால் அதன் வீரியத்தை எடுத்துக்கூறி வேண்டாம் என தவிர்க்க செய்யுங்கள். ஆசைகளுக்கு நோ சொல்வது தவறு. ஆனால், பேராசைகளுக்கு நோ சொல்லாமல் இருப்பது அதைவிட பெரும் தவறு. எனவே, நோ சொல்லவும் பழகுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Build Trust in Relationship?

How To Build Trust in Relationship?
Story first published: Friday, October 13, 2017, 18:02 [IST]