தன் மனையுடனான உறவு பற்றி மனம் திறந்த ஷாருக்கான்!

Posted By:
Subscribe to Boldsky

பாலிவுட்டில் மனக்கசப்பு மற்றும் சலசலப்பு ஏற்படாத தம்பதிகளில் ஷாருக்கான் கௌரி தம்பதியினரும் ஓர் அங்கம் ஆவார்கள். திருமணம் ஆனதில் இருந்து இன்று வரை இல்வாழ்க்கையிலும் சரி, சினிமா வாழ்விலும் சரி பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்தவர் ஷாருக்.

இதையும் படிங்க: தெறிக்க தெறிக்க ஷாலினியை காதலித்த அஜித்தை பற்றி உங்களுக்கு தெரியுமா!!!

இந்த அனைத்து தருணத்திலும் ஷாருக் துவண்டு போகாமல் இருக்க முக்கிய காரணம் இவரது மனைவி கெளரி தான். எப்போதும் அரவணைப்புடன் இருந்து இவரை பார்த்துக் கொண்டார் கௌரி. இதுக்குறித்து ஷாருக் சமீபத்தில் மிக விரிவாக கூறியிருந்தார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வளர்ப்பு:

வளர்ப்பு:

ஓர் இல்லறம் என்பது முழுமையடைவது குழந்தைகளின் பிறப்பில் தான். "கௌரியுடனான எனது இல்லற உறவு வேகமடைந்தது எங்கள் குழந்தைகள் பிறந்த பிறகு தான்.

எங்கள் குழந்தைகளின் வளர்ப்பில் நாங்கள் கவனம் செலுத்த ஆரம்பித்த போதுதான். வாழ்வில் வேகம் அதிகரித்தது. எல்லாருடைய இல்லறத்திலும் கடைசியில் நடக்க போவது இதுதான்." என குழந்தை வளர்ப்பு பற்றி கூறியிருந்தார்.

குழந்தைகள்:

குழந்தைகள்:

எனக்கு மூன்று குழந்தைகள், கையாள கடினமான 18 வயது மகன், எழில் நயம் வாய்ந்த 16 வயது மகள், மற்றும் மூன்று வயது குட்டி கேங்க்ஸ்டர்.

எண்ணம்:

எண்ணம்:

எண்களின் எண்ணம் எப்போதும் எங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை எப்படி மிளிரவைக்க வேண்டும் என்பதை சார்ந்து தான் இருக்கும்.

எங்கள் குழந்தைகள் தான் எங்களது மையப்புள்ளி. எங்கள் உலகமே அவர்கள் தான்.

நட்சத்திர அந்தஸ்து:

நட்சத்திர அந்தஸ்து:

நட்சத்திர அந்தஸ்தானது எப்போதுமே இல்லறத்தில் பூகம்பம் வெடிக்க ஓர் காரணியாக இருக்கும். இதை பற்றியும் ஷாரூக் கூறியுள்ளார்.

"பொது வாழ்வில் தொடர்புடையதால், நான் மற்றும் எனது மனைவியுடனான வாழ்க்கை சற்று மன அழுத்தம் அதிகமாகவும் இருக்கும்.

ஓர் நடிகனாக இல்லறத்தை நடத்திக் கொண்டுசெல்வது சற்று கடினம் தான்" என ஷாரூக் கூறியுள்ளார்.

அந்தரங்க வாழ்க்கை:

அந்தரங்க வாழ்க்கை:

எங்களுக்கான தனி வாழ்க்கை ஒன்று இருக்கிறது. அந்த தனிப்பட்ட வாழ்க்கையும் அடிக்கடி கேள்விக்குறியாக வந்து நிற்கும். அந்தளவிற்கு மன அழுத்தம் அதிகரிக்கும்.

எங்களுக்குள்ளான இடமே அவ்வப்போது கிடைக்காது. என்றும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஷாரூக் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகரின் மனைவி:

நடிகரின் மனைவி:

இந்த விஷயத்தில் கௌரி மிகவும் அழகாக தன் வாழ்க்கையை கையாள்வார். அவர் எப்போதுமே தன்னை ஓர் பெரிய நடிகரின் மனைவியாக கருதிக் கொள்வது இல்லை.

அவருக்கான இடத்தை அவர் சரியாக தக்கவைத்து கொள்கிறார்.

சந்தேகம்:

சந்தேகம்:

எனது சினிமா வாழ்வில் எழும் கிசுகிசுக்கள் குறித்து கௌரி எப்போதும் சந்தேகப்பட்டது கிடையாது. அதை பெரிதுப்படுத்தி கூறியது கிடையாது.

என்னிடம் அது குறித்து விவாதம் நடத்தியது கிடையாது. எனது தொழில் பற்றி நன்கு அறிந்து அது சார்ந்த அவர் எப்போதும் தலையிட்டது கிடையாது.

இல்வாழ்க்கை சந்தோஷம்:

இல்வாழ்க்கை சந்தோஷம்:

"கெளரி தனது தனி அடையாளத்தை மையப்படுத்தி வாழ்ந்து வருவது தான். அவரையும், என்னையும் இன்று வரை இறுக்கம் குறையாத, மகிழ்ச்சியான உறவில் இணைத்து வைத்துள்ளது.

பெரிதோ, சிறிதோ நாம் அனுபவிக்க வேண்டிய, கடந்து செல்ல வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன." என ஷாரூக் முடிவில் கூறியிருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

SRK Talks About His Bond With Gauri

SRK Talks About His Bond With Gauri, Says Their Relationship Is Geared Towards Raising Their Kids,
Please Wait while comments are loading...
Subscribe Newsletter