இந்திய தம்பதிகளிடம் உண்டாகும் வீண் சண்டைகள்!

Posted By:
Subscribe to Boldsky

பெரும்பாலும் காரணத்துடன் இந்திய தம்பதிகள் சண்டையிட்டுக் கொள்வது 0.9% தான். மற்றவை 99.1% சதவீத சண்டைக்கு இவர்களே காரணமாக இருக்க மாட்டார்கள். எங்கோ, எதையோ பேச ஆரம்பித்து கடைசியில் பேச்சு எங்கோ முடிந்து சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள்.

இதற்கான முக்கிய காரணம் கண்டிப்பாக உறவினர்களாக தான் இருப்பார்கள். பெரும்பாலும் இந்த சண்டைகள் தம்பதிகளை பாதிக்கிறதோ இல்லையோ, அவர்களது குழந்தைகளை மனதளவில் வெகுவாக பாதிக்கிறது என மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தை வளர்ப்பில்

குழந்தை வளர்ப்பில்

பெரும்பாலான வீட்டில் குழந்தைகளின் சிறு தவறு, பெற்றோர் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட காரணமாகிவிடும். பொதுவாகவே, குழந்தை எதாவது தவறு செய்தால் அப்பன மாதிரி, ஆத்தாள மாதிரி என ஆரம்பிக்கும் வாக்கியங்கள், வாக்குவாதத்தில் தான் சென்று முடிகின்றன.

பிறந்த வீடு, புகுந்த வீடு

பிறந்த வீடு, புகுந்த வீடு

எங்க வீட்டு ஆளுங்க எல்லா அப்படி நடந்துக்க மாட்டாங்க.. ஆனா, உங்க வீட்டு ஆளுங்கள பாரு... என பிறந்த வீடு, புகந்த வீடு உறவுகளை ஒப்பிட்டு பேசி சண்டையிட்டு கொள்வார்கள். பெரும்பாலும், சுப நிகழ்வுகள் நடந்த மறுநாளில் இந்த சண்டைகள் தலைக் தூக்குகின்றன.

உப்பு சப்பு

உப்பு சப்பு

இத்தன வருசமா சமைக்கிற உப்பு, காரம் கூட ஒழுங்கா போட தெரியாதா? என கொஞ்சம் குரலை உயர்த்தினாலும், சமையலறையில் பாத்திரங்கள் உருள ஆரம்பித்துவிடும்.

ஒப்பீடு

ஒப்பீடு

இந்திய கணவர்களுக்கு ஒப்பிட்டு பேசுவது பிடிகாதும், இந்திய மனைவிகளால் ஒப்பிட்டு பேசாமல் இருக்க முடியாது. அப்பறம் என்ன.. சண்டை தான்.

இருப்பதை விட்டு பறப்பது

இருப்பதை விட்டு பறப்பது

பெரும்பாலும் இருப்பதை விட்டுவிட்டு பறக்க ஆசைப்படும் போது தான் தம்பதி மத்தியில் சண்டை பிறக்கிறது. பேராசை பெரும் நஷ்டம் என்பது வெறும் பழமொழி இல்லை.

பாதிப்புகள்

பாதிப்புகள்

வீட்டில் கணவன், மனைவி அவசயமின்றி அளவுக்கு அதிகமான சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் சண்டையிட்டு கொள்வது குழந்தைகளின் மனநிலையை பாதிக்கிறது. இதில் முக்கியமாக தம்பதிகள் செய்யும் தவறே, இவர்கள் குழந்தைகள் முன்பு சண்டையிட்டுக் கொண்டு, அவர்கள் இல்லாத போது சமாதானம் ஆகிவிடுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Silly Reasons Between Indian Couples Fights

Silly Reasons Between Indian Couples Fights , read her in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter