For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இத்திருமணம் விவாகரத்தில் தான் முடியும் என குடும்பநல வழக்கறிஞர்கள் கூறும் 7 அறிகுறிகள்!

|

இன்றைய சூழலில் விவாகம் நடக்க தான் தாமதம் ஆகிறதே தவிர, விவாகரத்து நடக்கக் அல்ல. விவாகம் நடக்க எடுத்துக் கொள்ளும் ஆண்டுகளை விட, விவாகரத்துக்கு எடுத்துக் கொள்ளும் ஆண்டுகள் குறைவாக இருக்கிறது.

ஒருவேளை சரியான முதிர்ச்சி அல்லது ஆவல் இல்லாமல் திருமணம் செய்துக் கொள்வதால் இது நடக்கிறதோ என சமூகத்தில் சில கேள்விகள் எழுகின்றன.

காதல் திருமணம், பெற்றோர் நிச்சயம் செய்த திருமணம் என இரண்டுமே விவாகரத்து கோரி நீதிமன்ற படி ஏறுவதில் சரிப்பாதியாக இருக்கின்றன என விவாகரத்து மற்றும் குடும்பநல வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: விவாகரத்தில் முடிந்த பிரபலங்களின் காதல் திருமணங்கள்!!!

மேலும், சில அறிகுறிகளை வைத்து இந்த திருமணம் விவாகரத்தில் தான் முடியும் என அறிந்துக் கொள்ள முடியும் என்றும் குடும்பநல வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆடம்பரம்!

ஆடம்பரம்!

ஆடம்பரமாக நடக்கும் பெரும்பாலான திருமணங்கள் விவாகரத்தில் தான் முடிகிறது என விவாகரத்து வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

பெரும்பாலும் ஆடம்பரமாக நடக்கும் திருமணங்கள் மணமக்களின் ஒப்புதலை விட, குடும்ப கவுரவம், ஜாதி, மதம் அல்லது தொழில் நட்பு போன்ற வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டு தான் நடக்கின்றன. இதனால் மணமக்கள் மத்தியில் நெருக்கம் இருப்பதில்லை.

7 வருடங்கள்!

7 வருடங்கள்!

7 வருடங்களுக்கு மேல் ஒன்றாக வாழும் தம்பதிகள் மத்தியில் பெரிதாக விவாகரத்து வழக்கு வருவதில்லை என்றும். விவாகரத்து கோரி நீதிமன்றம் நாடும் பெரும்பாலான தம்பதிகள் 2 - 4 வருடங்கள் வாழ்ந்தவர்களாக தான் இருக்கிறார்கள் என்றும் விவாகரத்து வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

வயது வித்தியாசம்!

வயது வித்தியாசம்!

இன்று வயது வித்தியாசம் பார்த்து திருமணம் செய்வதெல்லாம் மலையேறிவிட்டது. ஆனால், விவாகரத்து கோரும் தம்பதிகளில் முக்கால்வாசி பேர் 2-3 வருடங்களுக்கும் கீழான வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தவர்களாக தான் இருக்கிறார்கள். இதில், சிலர் தன்னைவிட வயது குறைந்த ஆண்களை திருமணம் செய்தவர்கள் ஆவார்கள்.

ஊதியம்!

ஊதியம்!

தங்களின் ஊதியம் சார்ந்து ஏற்றத்தாழ்வு பார்க்கும் தம்பதிகள் மத்தியில் விவாகரத்து வேகமாக நடக்கிறது என்றும் விவாகரத்து வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பல தம்பதிகள் மத்தியில் நான் பெரிதா, நீ பெரிதா என்ற ஈகோ பிறப்பது தான் விவாகரத்திற்கு காரணமாக இருக்கிறது.

உணர்வுகள்!

உணர்வுகள்!

வாய் திறந்து கூறாமலேயே தன் துணை இப்படி தான் இருக்கிறார், அவர் இவ்வாறு உணர்கிறார், அவரது சூழ்நிலை இவ்வாறாக இருக்கிறது என அறிய முடியாத தம்பதிகள் மத்தியில் விவாகரத்து அதிகமாக நடக்கிறது.

நைட் ஷிப்ட்!

நைட் ஷிப்ட்!

சமீப காலமாக, ஐ.டி-யில் புரியும் தம்பதிகள் மத்தியில் விவாகரத்து நடப்பதற்கு முக்கிய காரணியாக் இருப்பது இந்த நைட் ஷிப்ட் வேலை முறை தான். இருவரும் வெவ்வேறு ஷிப்ட்டுகளில் வேலை செய்வதால், இருவர் மத்தியிலான உரையாடல், உணர்வு ரீதியான நெருக்கம் குறைவது தான் முக்கிய காரணம்.

சுதந்திரம்!

சுதந்திரம்!

கணவன், மனைவியாக இருப்பினும் கூட தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்படும் போது, அவர்கள் விவாகரத்தை நாடுகின்றனர். எனவே, அவரவர் சுதந்திரத்தை தட்டிப்பறிக்க நினைக்க வேண்டாம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs Your Marriage Won’t Last, According To Divorce Lawyers

Signs Your Marriage Won’t Last, According To Divorce Lawyers
Desktop Bottom Promotion