ஆண்களிடம் நாற்பது வயதுக்கு பிறகு உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

இருபது வயது வரை நான் மற்றும் என்னை சுற்றி நடக்கும் விஷயங்கள் என்று மட்டுமே என்ற வாழ்க்கை சூழல் இருந்திருக்கும். முப்பதுகளை தாண்டிய பிறகு, நான் மற்றும் தன் குடும்பத்தை சுற்றிய விஷயங்கள் என்று இருந்திருப்பீர்கள். ஆனால், நாற்பது வயதை தாண்டும் போது நீங்கள் மற்றும் உங்களது சமூகமும் என்று மாறும். உங்களது கோபம், உங்கள் குடும்பத்தை மட்டுமின்றி, சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நாற்பது வயதை தாண்டிய பிறகு உங்கள் செயல்பாடுகள் உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் புதியதாய் பிறக்கும் செயல்கள் குறித்து இனிக் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வீடு, வாசல், பொருள்

வீடு, வாசல், பொருள்

நாற்பதுகளை தாண்டும் போது வீடு, வாசல், பொருள் போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய கடினமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும். முன்பிருந்தே இருந்தாலும் கூட, இந்த வயதுக்கு பிறகு தான் அது பெருமளவு அதிகரிக்கிறது.

நல்லொழுக்கம் வளர்த்தல்

நல்லொழுக்கம் வளர்த்தல்

தன்னிடம் மட்டுமின்றி, தன் பிள்ளைகள் மற்றும் சுற்றி இருப்பவர் மத்தியிலும் நல்லொழுக்கம் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். இது மற்றவர் மத்தியில் உங்களது பெயரை சிறக்க வைக்கும்.

சமூக பங்காற்றல்

சமூக பங்காற்றல்

இருபது வயது வரை உங்களை பற்றி மட்டுமே நினைத்து வாழ்ந்து வந்திருப்பீர்கள், முப்பதுகளில் உங்களது குடும்பத்தை பற்றியும் சேர்த்து நினைக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். நாற்பதை தாண்டும் போது தான் நீங்கள் சமூகத்தின் மீதும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டி வரும், அப்போது தான் உங்களுக்கு ஏதுனும் என்றாலும் சமூகம் உதவிக்கு வரும்.

கோவம் அதிகரிக்கும்

கோவம் அதிகரிக்கும்

கோவம் அதிகரிக்கும் வயது இந்த நாற்பது. இதை கட்டுப்படுத்த நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையேல் உறவுகளில் விரிசல், பிரிவு ஏற்படலாம்.

அமைதியை தேடுதல்

அமைதியை தேடுதல்

கோவம் அதிகரிக்கும் இதே தருணத்தில் தான் ஆன்மிகம் மீதான நாட்டமும் அதிகரிக்கும். சிலரை நீங்கள் கண்டிருக்கலாம், கடவுளே இல்லை என்று கூறியவர்கள் கூட நாற்பதை தாண்டிய பிறகு கோவிலுக்கு சென்று வருவார்கள். பெரும்பாலும் அமைதியை வேண்டி தான் ஆன்மீகத்தை இந்த வயதில் நாடுகிறார்கள்.

இறைவழிபாடு

இறைவழிபாடு

இறைவழிபாடு அதிகமாகும் வயது. கோவிலுக்கே சென்று வராதவர்கள் கூட மனதை ஒருநிலைப்படுத்த கோவிலை நாடுவார்கள்.

உடலுறவு

உடலுறவு

மேலும் நாற்பதை கடந்த பிறகு மெல்ல, மெல்ல உடலுறவு சார்ந்த எண்ணங்கள் குறையத் தொடங்கும். இதன் பிறகு வேறு விதமான இணக்கம், நெருக்கம், தம்பதி மத்தியில் வளர ஆரம்பிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Relationship Changes After 40s

Relationship changes occurs after he age of 40s, take a look.
Story first published: Wednesday, January 13, 2016, 13:04 [IST]
Subscribe Newsletter