உங்களுக்கே தெரியாமல் உறவில் நீங்கள் செய்யும் 5 தவறுகள்!

Posted By:
Subscribe to Boldsky

விட்டுக் கொடுத்து நடக்கிறோம் என்ற பெயரில், தங்கள் சுயக் கருத்தை விட்டுக் கொடுப்பது, பிடித்த செயல்கள் மற்றும் விஷயங்களை மறப்பது என இல்லறத்தில் கணவன், மனைவிகள் பெரிய மனதுடன் நடந்துக் கொள்வதுண்டு. ஆனால், இந்த பெரிய மனது சாகும் வரை இருக்க வேண்டும்.

ஓர் கணவனாக மனைவிக்கு நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய 5 விஷயங்கள்!!

திடீரென எப்போதாவது ஏற்படும் சண்டை அல்லது பிரச்சனையின் போது, உனக்காக நான் இவற்றை எல்லாம் விட்டுக் கொடுத்து சென்றேன். ஆனால், நீ நன்றி மறந்துவிட்டாய் என மூன்றாம் நபரிடம் பேசுவது போல நடந்துக் கொண்டால் நீங்கள் தியாகம் என்ற பெயரில் செய்தவை எல்லாம் தண்ணீரில் விட்டெறிந்ததை போல காணாமல் போய்விடும்.

பிரபலங்களின் திருமணம் விவாகரத்தில் முடிய காரணங்கள் என்ன??

அந்நியன் பாணியில் கூற வேண்டும் என்றால் இதுவெல்லாம உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்று தான் இருக்கும். ஆனால், உங்களுக்கே தெரியாமல் உறவில் நீங்கள் செய்யும் பெரிய ஐந்து தவறுகளே இவை தான்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செயல்திறன்

செயல்திறன்

உங்களைவிட உங்கள் மனைவி சிறந்து செயல்பட முடியும் என்பதை ஒப்புக்கொள்ள மறுத்தல். அது வீட்டு மேலாண்மையாக இருப்பினும் சரி, வேலைக்கு சென்று சம்பாதிப்பதாக இருப்பினும் சரி.

செயல்திறன்

செயல்திறன்

உங்கள் துணை உங்களைவிட சிறந்து விளங்குகிறார் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். இது உறவு சிறக்க தான் உதவுமே தவிர, உங்கள் தன்மானத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது. மனைவி சிறந்து விளங்குவது தனக்கு ஏற்படும் இழுக்கு என ஆண்கள் எண்ணுவது தவறு.

தயார்

தயார்

வெளியே செல்வது, உறவினர் சுபநிகழ்வுகள், புதியதாக ஏதேனும் முயற்சி என எதுவாக இருந்தாலும், நீங்களும் தயாராக இருந்தாலும் மட்டும் தலையை ஆட்டுங்கள்.

தயார்

தயார்

பெரும்பாலும் தன் துணை ஆசைப்படுகிறார் என்பதற்காக கணவன், மனைவி தலையை ஆட்டுவது, பின்னாட்களில் உண்மை வெளிப்படும் போது அல்லது சண்டையின் போது உளறிக்கொட்டிவிடம் போது உறவை சிதைத்துவிடும்.

ஓகே

ஓகே

உங்களுக்கு பிடிக்காத விஷயங்களில் உங்கள் துணை ஈடுபடும் போது வெளிப்படையாக பிடிக்கவில்லை என்று உங்கள் கருத்தை தெரிவித்துவிடுங்கள். வெறுமென ஓகே என்று கூறிவிட்டு, சில நாட்கள் அல்லது காலம் கழித்து அன்று நீ செய்தது எனக்கு பிடிக்கவில்லை என்பது வீண் கோபத்தையும், எரிச்சலையும் தான் உண்டாக்கும்.

ஓகே

ஓகே

சிலர் தங்கள் கணவன், மனைவிக்கு பயந்தும் கூட ஓகே சொல்வதுண்டு. எங்கே ஓகே சொல்லாமல் போனால் சண்டை ஏற்பட்டு உறவில் விரிசல் விழுந்துவிடுமோ என்று கூட ஓகே சொல்கிறார்கள். இதை தவிர்க்க வேண்டும். கணவன், மனைவி உறவுக்குள் ஒளிவுமறைவு இருக்க கூடாது.

காயம்

காயம்

உணர்வுகளை உள்ளுக்குள் அடக்கி வைத்துக் கொள்ள வேண்டாம். அடக்கி வைக்கும் சின்ன சின்ன விஷயங்களும் பின்னாட்களில் எரிமைலையாய் வெடிக்கும் அபாயம் இருக்கிறது. எனவே, பிரச்சனை சிறிதோ, பெரிதோ, உடனே இருவரும் பேசி தீர்த்துவிடுங்கள்.

காயம்

காயம்

பேசி தீர்க்காத சிறிய பிரச்சனையும் கூட நாள்பட, நாள்பட பெரிய காயமாக மனதில் உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, புரிதலோடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.

கேட்க தயக்கம்

கேட்க தயக்கம்

கணவன், மனைவிக்கு நடுவே தயக்கம் கூடாது. தாம்பதியமாக இருந்தாலும் சரி, தார்மீக கருத்தாக இருந்தாலும் சரி தயக்கம் இன்றி வெளிப்படுத்துங்கள். தயக்கம் என்பது உறவின் நெருக்கத்தை குறைக்கும் கருவியாகும்.

கேட்க தயக்கம்

கேட்க தயக்கம்

இவை எல்லாம் இல்லறத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கிறோம் என்று தம்பதிகள் செய்யும் காரியங்கள் தான். ஆனால், பின்னாட்களில் பொறுமை இழக்கும் போதோ, சண்டை பெரிதாகும் போதோ வாய் தவறி கூறிவிட்டாலும் மனதில் காயமாக மாறிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Ways You Sabogate Your Relationships Without Even Realizing

Five Ways You Sabogate Your Relationships Without Even Realizing It, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter