நிமிடத்தில் பெண்களை மூட் அவுட்டாக்கும் ஆண்களின் 7 செயல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

சில சாதாரன விஷயங்களை பெரிதாக எடுத்துக் கொண்டு பெண்கள் மூட் அவுட்டாவது ஒரு வகை. சில பெரிய விஷயங்களை மிக சாதாரணமாக கூறி பெண்களை ஆண்கள் மூட் அவுட்டாக்குவது இரண்டாவது வகை. இந்த இரண்டு வகையிலும் பெண்கள் தான் மூட் அவுட்டாகிரார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Dear Men, These 7 Things Will Mood Out Your Girl Within a Minute

டிரெஸ்ஸிங்கில் இருந்து தாம்பத்தியம் வரை ஆண்கள் தெரிந்தோ, தெரியாமலோ சில விஷயங்களை விளையாட்டாக செய்ய போக, அது வினையாகி சிலபல நாட்கள் முகத்தை திருப்பிக் கொண்டு மனைவி நடக்க காரனமாகிவிடும். அது என்னென்ன செயல்கள் என்று இனிப் பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிரெஸ்ஸிங் சென்ஸ்!

டிரெஸ்ஸிங் சென்ஸ்!

பெண்களை பொறுத்தவரை அவர்களது டிரெஸ்ஸிங் சென்ஸை எக்காரணம் கொண்டும் யாரும் கிண்டலடித்து விடக் கூடாது. அதற்காக தான் நிறைய நேரம் எடுத்துக் கொள்வார்கள். இதில் அவர்கள் செய்யும் பெரிய தவறு என்னெவெனில், அவர்களுக்கு ஏற்ற உடையை காட்டிலும், அவரது தோழி, அலுவலக நண்பர் சமீபத்தில் எடுத்த, அதே போன்ற உடை உடுத்துகிறேன் என சிலபல காமெடிகள் செய்வார்கள்.

இந்த காமெடியை கணவனாகிய நீங்கள் கலாய்த்தால் சண்டை வெடிக்கும். எனவே, அவர்களாக பட்டு திருந்தட்டும் என விட்டுவிடுங்கள். இல்லையேல் அவர்களது முழுநாள் மூட் அவுட்டுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.

ஒப்பிடுதல்!

ஒப்பிடுதல்!

பெண்கள் ஆண்களை மற்ற ஆண்களோடு ஒப்பிடுவார்கள், இதோ அவர் அது செய்கிறார், இவர் அது செய்கிறார், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என கண்டதை எல்லாம் ஒப்பிடுவார்கள். இதையே நீங்கள் துளியளவு செய்துவிட்டால், அம்மன் க்ளைமேக்ஸ் சீனை பார்க்க தயாராக இருக்க வேண்டும்.

ப்ளான் கேன்சல்!

ப்ளான் கேன்சல்!

பெண்களிடம் ஆண்களின் வாக்கு சுத்தமாக இருக்க வேண்டும். இன்று வெளியே கூட்டி செல்கிறேன் என கூறிவிட்டு, கடைசி நேரத்தில் கேன்சல் செய்தால், அந்த தாக்கம் இயற்கை சீற்றத்தின் தாக்கத்தை விட பெரிதாக அவர்களது மனதில் அவர்களாக பத்தித்து கொள்வார்கள். சிலபல நாட்கள் சாப்பாடு பரிமாறும் போது சொல்லிக்காட்டிக் கொண்டே இருப்பார்கள்.

வாக்குறுதி!

வாக்குறுதி!

அம்மா வீட்டுக்கு போயிட்டு வா, உனக்கு அடுத்த மாசம் நகை வாங்கி தரேன். கண்டிப்பா அடுத்த வருஷம் வீடு வாங்கிரலாம் என கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாவிட்டால் அல்லது கூறியது நடக்க இன்னும் கொஞ்சம் காலம் எடுத்துக் கொள்ளும் என நீங்கள் சொல்லி... சொல்லி பாருங்க... அப்பறம் தெரியும் சந்திரமுகி முகம்!

டேட்டிங், அவுட்டிங்!

டேட்டிங், அவுட்டிங்!

பெண்களிடம் டேட்டிங், அவுட்டிங்குக்கு ஓகே வாங்குவது மிகவம் கடினம். அவர்களுக்கே விருப்பம் இருந்தாலும் உடனே ஓகே சொல்ல மாட்டார்கள். அப்படி ஓகே வாங்கிய தேதிகளில் நீங்கள் வீணடித்துவிட்டால் ஏகபோகமான கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்.

பீரியட் டைம்!

பீரியட் டைம்!

சும்மாவே மாதவிடாய் நேரத்தில் பெண்கள் வலி மற்றும் மூட் ஸ்விங் காரணத்தால் சோர்வாகவும், மனநிலை சீரற்று இருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்களை சீண்டி பார்ப்பது, பழைய கதை பேசி நோகடிப்பது, கோபத்தை காட்டுவது என இருந்தால் நிமிடத்தில் அல்ல நொடியில் மூட் அவுட்டாகிவிடுவார்கள்.

செக்ஸ்!

செக்ஸ்!

உடலுறவில் ஈடுபடும் போது, எக்காரணம் கொண்டும் உங்கள் துணையின் மனநிலை மற்றும் உடல்நிலை புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்ள வேண்டாம். இந்த விஷயத்தில் ஒருதலைப்பட்சமாக நடந்துக் கொள்வது மூட் அவுட்டாக்குவது மட்டுமில்லாமல், உங்களையும் அவுட்டக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Dear Men, These 7 Things Will Mood Out Your Girl Within a Minute

Dear Men, These Five Things Will Mood Out Your Girl Within a Minute
Please Wait while comments are loading...
Subscribe Newsletter