ஆண்கள் தன் மனைவியிடம் இருந்து எதிர்பார்க்கும் பத்து விஷயங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். ஆனால், இப்போது வரன் வேண்டி யாரும் வரம் வேண்டுவதில்லை, ஆன்லைனில் ஓர் பட்டியலிட்டு இந்த குணநலன்கள் உள்ளவர்கள் மட்டும் தொடர்புக் கொள்ளலாம் என்று கூறும் அளவிற்கு திருமண தேடல் பெரும் அளவில் வளர்ந்து நிற்கிறது.

இதில், ஆண்கள் பெண்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள், பெண்கள் ஆண்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என அறிவது கொஞ்சம் கடினம் தான். முன்பு போல பெண் என்றால், ஆடல், பாடல், ஆண் என்றால் அரசாங்க உத்தியோகம் என்று இல்லாமல் எல்லாமே தலைகீழாக மாறி இருக்கின்றன.

இதில், தங்கள் மனைவியாக வர வேண்டிய நபர் எப்படி இருக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள் என்ற ஓர் சிறிய பட்டியல்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதுகாப்பு பெட்டகம்

பாதுகாப்பு பெட்டகம்

தன்னை பற்றிய இரகசியங்கள், முழு விவரங்கள், நான் யார் என்பதையும், தன்னை பற்றிய மற்றும் சுற்றி நடக்கும் விஷயங்களையும் பகிர்ந்துக் கொள்ளவும், அதை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் நம்பகமான ஓர் நபராக மனைவி இருக்க வேண்டும்.

அஸ்திவாரம்

அஸ்திவாரம்

தன் வெற்றி, புகழ், உயர்வு போன்றவற்றுக்கு சிறந்த அஸ்திவாரமாக, பக்கபலமாக, சிறந்த துணையாக தனது மனைவி இருக்க வேண்டும் என்று ஆண்கள் விரும்புகிறார்கள்.

ஊக்குவிப்பாளர்

ஊக்குவிப்பாளர்

தன் அருகில் வெறுமென அமர்ந்திருக்காமல், தன்னை உத்வேகப்படுத்தி, ஊக்கவிக்கும் நபராக தன் மனைவி இருக்க வேண்டும் என்று ஆண்கள் விரும்புகிறார்கள்.

நேரம்

நேரம்

தோணும் போது நேரம் செலவழிக்காமல், தங்களுக்கு வேண்டிய போது தம்முடன் நேரம் செலவழிக்க, உறுதுணையாக இருக்க வேண்டும்.

உடலுறவு

உடலுறவு

100-ல் 90% ஆண்கள், உடலுறவில் தங்கள் துணை தாங்கள் விரும்பும் போதெல்லாம் ஒத்துழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள். இது இயல்பான ஒன்று.

உதவியாக

உதவியாக

தனது வேலைகளுக்கு உதவியாக, தனது சரிப் பாதியாக தொழில் மீது அக்கறை எடுத்துக் கொள்ளும் நபராக இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆண்களிடம் இருக்கிறது.

மதிப்பு அறிந்தவர்கள்

மதிப்பு அறிந்தவர்கள்

தாங்கள் செய்யும் வேலை மற்றும் நேரத்தின் மதிப்பை அறிந்து நடந்துக்கொள்ள வேண்டும், வீணாக சண்டை, சச்சரவுகளில் ஈடுபடக் கூடாது என்ற எதிர்பார்ப்பு எல்லா ஆண்கள் மத்தியிலும் இருக்கிறது.

ஆச்சரியமூட்டும் நபர்

ஆச்சரியமூட்டும் நபர்

அவ்வப்போது தங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த வேண்டும் என்ற ஆசை பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் இருக்கிறது.

மனதை படிப்பவர்

மனதை படிப்பவர்

தாங்கள் மனதில் நினைப்பதை அறியும் திறன் கொண்டவராக தங்கள் மனைவி இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஆண்களுக்கு இருக்கிறது.

தன்னுடன் சேர்ந்து வளர வேண்டும்

தன்னுடன் சேர்ந்து வளர வேண்டும்

தன்னை அறிந்துக் கொண்டு, தன்னுடன் சேர்ந்து தான் அறியும் விஷயங்களையும் கற்றுக் கொண்டு, தன்னுடன் வளரவும், தன்னை வளர்ச்சி அடைய வைக்கும் நபராக இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Actually Guys Expecting From Wife

These are ten things guys expecting from their wife, not much more than that.
Story first published: Wednesday, December 9, 2015, 13:11 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter