நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 திருமண ஒழுக்க நெறிகள்

Posted By: Ashok CR
Subscribe to Boldsky

திருமண காலம் வந்து விட்டது... இனி குதூகலத்திற்கும் மகிழ்ச்சிக்கும், ஆட்டத்திற்கும் பாட்டத்திற்கும் அளவே கிடையாது. நாம் அனைவரும் அதில் மூழ்கி களிப்படைவோம். ஆனால் ஒருவரின் திருமண விழாவிற்கு செல்கையில் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில ஒழுக்க நெறிகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

திருமணம் என்றாலே அனைவரும் குஷியாகி விடுவார்கள். திருமண விழா என்றாலே வகை வகையான உணவுகளுக்கும் கேளிக்கைகளுக்கும் பஞ்சம் இருக்காது. இந்த நிகழ்வின் போது சொந்த பந்தங்கள் குடும்பம் குடும்பமாக இருப்பார்கள். கிட்டத்தட்ட மிகப்பெரிய குடும்ப சுற்றுலா போலத் தான் காட்சியளிக்கும். ஆனால் ஒரு குடும்பத்துக்கு மட்டும் அப்படி இருக்காது - அது தான் விழாவை நடத்தும் குடும்பத்திற்கு! அதனால் அவர்களுக்கு அதிக தொந்தரவு கொடுக்காதவாறு நாம் நடந்து கொள்ள வேண்டும். அதற்கு கீழ் கூறியவற்றை கடைபிடியுங்கள் நண்பர்களே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேலையில் உதவிட முன் வாருங்கள்.

வேலையில் உதவிட முன் வாருங்கள்.

வேலையில் உதவிட முன் வாருங்கள். ஆனால் அதிக வேலையை அவர்கள் கையில் இருந்து எடுத்துக் கொண்டு அவர்களது திட்டங்களையும் ஏற்பாடுகளையும் கெடுத்து விடாதீர்கள். சிலர் இவ்வகை விழாவிற்கு வருகையில் எந்த வேலையிலும் தலையிட மாட்டார்கள். இன்னும் சிலரோ ஆர்வக்கோளாராக இருந்து வேலையை பகிர்ந்து கொள்கிறேன் என்ற பெயரில் அதிக தொந்தரவை அளிப்பார்கள். அதனால் சமநிலையுடன் நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

நேரத்திற்கு மரியாதை அளித்து..

நேரத்திற்கு மரியாதை அளித்து..

அவர்களின் ஏற்பாடு செய்த நேரத்திற்கு மரியாதை அளித்து, உணவு வரும் வரை காத்திருக்கவும். மாறாக எல்லாம் நேரத்திற்கு முந்தி நடக்க வேண்டும் என மூக்கை நுழைக்காதீர்கள்.

கூடுதல் செலவு வைக்காதீர்கள்

கூடுதல் செலவு வைக்காதீர்கள்

பொதுவாக உணவு அளிக்கும் சமையல்காரர்கள் விழ நடத்துபவர்களிடம் ஏதாவது ஒப்பந்தம் போட்டிருப்பார்கள். அதன் படி, ஒரு தட்டு கணக்கில் உணவிற்கு வசூலிக்கப்படும். அதனால் உணவை உண்ணும் போது பல தட்டுக்களை எடுத்து வீணாக்க வேண்டாம். அப்படி நீங்கள் செய்வதால் அவர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.

ஒத்துழைப்பு தாருங்கள்

ஒத்துழைப்பு தாருங்கள்

அதற்காக அனைத்து அதிகப்படியான அசௌகரியங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. ஆனால் அதற்காக சின்ன சின்ன விஷயத்தை எல்லாம் பெரிது படுத்தாமல் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்.

மனதார திருமணத்தை கொண்டாடுங்கள்.

மனதார திருமணத்தை கொண்டாடுங்கள்.

நீங்கள் சந்தோஷமடைய வேண்டும் என்ற எண்ணத்தில் விழாவை நடத்துபவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பார்கள். அதனால் உங்களுக்காக அவர்கள் ஏற்பாடு செய்ததை பயன்படுத்தி மகிழ்ந்திடுங்கள். அவர்களின் ஏற்பாடுகளை நீங்கள் மிகவும் ரசித்து மகிழ்ச்சி அடைந்தீர்கள் என அவர்கள் அறிந்தால் அதை விட அவர்களுக்கு வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும்?

விழா முடியும் வரை

விழா முடியும் வரை

விழா முடியும் வரை இருந்து அவர்களிடம் அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்த மறந்து விடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Six Wedding Etiquettes You Must Know

Do You Know About Six Wedding Etiquettes You Must Know? Read here.
Story first published: Sunday, May 24, 2015, 9:28 [IST]