ஐம்பதுகளில் வரும் காதலின் உன்னதம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது!!

Posted By:
Subscribe to Boldsky

உங்கள் திருமணத்தில் ஆரம்பித்து, உங்கள் குழந்தைகளின் திருமணத்தில் முடிவடைகிறது, நீங்கள் மற்றவருக்காக வாழும் வாழ்க்கை. எப்படியும் இந்த பொறுப்பை எல்லாம் முடிப்பதற்கு ஐம்பது, அறுவது வயது முடிந்துவிடும். ஐம்பதுகளில் தான் ஒரு தம்பதியின் உண்மையான காதல் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.

உடல் உறவுகள் இன்றி, மனதின் இணைப்பு மட்டுமே வலுவாய் இருக்கும் தருணம் அது. முழுக்க, முழுக்க ஒருவருக்கு ஒருவர் என்பதை நீங்கள் உணர்ந்து வாழும் நேரமும் இது தான். ஐம்பதிகளில் வரும் காதல் முற்றிலும் வேறுப்பட்ட ஒன்று. சகிப்புத்தன்மையும், வாழ்க்கையின் முதிர்ச்சியும், முழு அறிதலும் இருக்கும்.

நீங்களே கண்டிருக்கலாம், எந்த வகையான குழப்பமாக இருந்தாலும் அதற்கான தீர்வு, ஐம்பதுகளில் வாழும் தம்பதியிடம் இருக்கும்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நினைவுகளின் பெட்டகம்

நினைவுகளின் பெட்டகம்

திருமணம் பந்தம் ஆரம்பித்த நாளில் இருந்து, ஏறத்தாழ 20 - 25 ஆண்டுகள் நீங்கள் கடந்த வந்த பெரும் பயணத்தை பற்றி பேசவே உங்களுக்கு ஓர் ஐம்பது வருடங்கள் தேவைப்படும். சண்டைகள் போட்டு, அழுத பொழுதுகள் கூட உங்களை சிரிக்க வைக்கும்.

உறுதியான துணை

உறுதியான துணை

கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால், உண்மையில் ஐம்பதுகளில் தான் நீங்கள் உறுதியான துணையாய் அறிவீர்கள். முழுக்க, முழுக்க உங்களுக்கு அவர், அவருக்கு நீங்கள் என்று நீங்கள் வாழும் நாட்கள் அவை.

பேரன், பேத்தி

பேரன், பேத்தி

சிலர் பேரன் பேத்தி எடுத்து கொஞ்சிக் கொண்டிருப்பார்கள், சிலர் பேரன், பேதியை எதிர்பார்த்து இருப்பர்கள். குழந்தையை வளர்ப்பதோடு, பேரனை வளர்ப்பதில் இருக்கும் அந்த இன்பமும், மகிழ்ச்சியும் கடலை விடவும் பெரியது.

உண்மையான ஓய்வு

உண்மையான ஓய்வு

ஐந்து நாட்கள் வேலை போக வார இறுதியில் நீங்கள் இரண்டு நாட்கள் வெட்டியாய் பொழுதை கழிப்பது அல்ல ஓய்வு. அனைத்து பொறுப்புகளையும் முடித்துவிட்டு ஐம்பது, அறுவதுகளில் நீங்கள் வாழ்க்கையை வேறு கோணத்தில் பார்க்க ஆரம்பிக்கும் அந்த நேரம் தான் உண்மையான் ஓய்வு.

பொன்னான நேரம்

பொன்னான நேரம்

இந்த காலத்தில் ஐம்பது, அறுவதுகள் நோய்களுக்கான வயதாகிவிட்டது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அந்த வகையில் நோயற்ற ஐம்பது, அறுவதுகள் தான் உங்கள் வாழ்க்கையின் உண்மையான பொன்னான நேரம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Love At Fifties Are The Best

Love At Fifties Are The Best
Story first published: Friday, December 11, 2015, 19:09 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter