சின்ன சின்ன சண்டையிடும் தம்பதிகளின் இல்லற வாழ்க்கையில் இதெல்லாம் பக்காவாக இருக்கும்!!

Posted By:
Subscribe to Boldsky

ஓர் திரைப்பட பாடலில், "சின்ன சின்ன சண்டை தான் காதலை வளர்க்கும்.." என்று பாடலாசிரியர் நா. முத்துகுமார் எழுதியிருப்பார். அந்த சின்ன சின்ன சண்டைகள் காதலை மட்டுமல்ல, இருவருக்குள் ஓர் புதிய அனுபவ பாடம் கற்பிக்கும். ஆனால், அது அந்த சண்டையின் காரணம் மற்றும் வீரியத்தை பொருத்து இருக்கிறது.

பெண்களின் பிறப்புறுப்பு உணர்ச்சிகள் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியவைகள்!!

கீழேப்போட்ட கடுகுகளை கூட ஒன்றுவிடாமல் அள்ளி விடலாம். ஆனால், பிரயோகம் செய்த வார்த்தைகள் அம்புகளை விட கொடியது. அவற்றை அள்ளுவது மிகவும் கடினம். சண்டைகள் அவசியம் தான் ஏனெனில், காரமில்லமால் இனிப்பின் உண்மையான சுவையை ருசிக்க முடியாது, உணரவும் முடியாது.

படுக்கை உடல் மொழியை வைத்து, ஆண்களின் குணாதிசயங்களை தெரிந்துக்கொள்ளலாம்!!!

அப்படி தான் சின்ன சின்ன சண்டைகள் இன்றி உங்கள் துணையின் உண்மையான பிரியத்தை உணர முடியாது. இதுப் போன்ற சின்ன சின்ன சண்டை போடுவதன் மூலம் உங்கள் இல்லற வாழ்க்கையில் ஏற்படும் நல்லறங்கள் பற்றியும் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்....

காதல் வாழ்கையில் பெண்கள் தங்கள் காதலர்களிடம் எதிர்பார்க்கும் சில சின்ன சின்ன ஆசை!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழைய நினைவுகள்

பழைய நினைவுகள்

இதுப்போன்ற சின்ன சின்ன சண்டைகளுக்கு பிறகு உங்கள் இருவருக்குள் பழைய நினைவுகள் துளிர்விட ஆரம்பிக்கும். அது முந்தைய சண்டைகள் அதன் பிறகு ஏற்பட்ட கொஞ்சல்கள் என உங்கள் இல்லற வாழ்கையை திரும்ப பார்க்கவைக்கும் ஓர் இன்ப சுற்றுலாவாக இருக்கும்.

உடலுறவு வாழ்க்கை

உடலுறவு வாழ்க்கை

நீங்கள் போடும் சின்ன சின்ன சண்டைகளுக்கு பிறகு கண்டிப்பாக ஓர் நல்ல உடலுறுவு எபிசொட்கள் அரங்கேறும். அதில் கொஞ்சல்களும், கெஞ்சலான தீண்டல்களும் அளவுக்கு அதிகமாக இருக்கும்.

இருவர் மீதான அக்கறை மேம்படும்

இருவர் மீதான அக்கறை மேம்படும்

சண்டைக்கு பிறகு துளிர்க்கும் பிரியத்தில் ஒருவர் மேல் ஒருவருக்கான அக்கறை மேம்படும். ஒரு சில நாட்கள் எது கரைபுரண்டு ஓடும் ஆற்றினை போலவும் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இளமை ஊஞ்சலாடும்

இளமை ஊஞ்சலாடும்

நாற்பது, ஐம்பது என கடந்த பிறகும் கூட, அந்த சின்ன சின்ன சண்டைகளுக்கு பிறகு கொஞ்சி, கொஞ்சி சேரும் போது, ஏதோ இப்போது தான் பருவ வயதை தாண்டியதை போல ஓர் உணர்வு மேலோங்கும். இளமை ஊஞ்சலாடும். அந்த ஊஞ்சலில் உங்களது அஞ்சலையை வைத்து ஆட்டிவைக்கவும் ஆண்களுக்கு அசை பிறக்கும்.

சிறுபிள்ளைத்தனமான செயல்பாடுகள்

சிறுபிள்ளைத்தனமான செயல்பாடுகள்

காதலில், பெரியவர், சிறியவர், வயது வரம்பு இவை எல்லாம் இல்லை. ஆனாலும் கூட சில சமயங்களில் புதுமணத் தம்பதியை போல இவர்கள் ஊட்டிவிட்டு விளையாடுவதும், ஆசை முத்தங்கள் பரிமாறிக்கொள்வதும் குழந்தைத்தனமான காதல் செயல்பாடுகளாக இருக்கும். ஆனால், முன்னர் கூறியதை போல, காதல் எப்போதும் கைக்குழந்தை தான்.

வீட்டு திட்டங்கள்

வீட்டு திட்டங்கள்

சில வீடுகளில் சண்டை போட்டு சேர்ந்த பிறகு தான் நிறைய திட்டமிடுவார்கள். இனிமேல் இப்படி சண்டை போடக்கூடாது என்பதில் தொடங்கி, வீட்டை பற்றிய எதிர்கால திட்டங்கள், இவர்கள் பல வருடங்களுக்கு முன்பு மறந்த யோசனைகளை எல்லாம் தூசித்தட்டி எடுத்து செயல்முறை படுத்த மீண்டும் திட்டமிடுவார்கள். காலப்போக்கில் மீண்டும் அதில் தூசி ஏறிவிடும் என்பது வேறு கதை.

லவ்வோலிக வாழ்க்கை

லவ்வோலிக வாழ்க்கை

இந்த சண்டைகள் முடிந்த சில நாட்களுக்கு இவர்களுக்கு லவ்வோலிக வாழ்க்கை கொஞ்சம் மேலோங்கி இருக்கும் என்பதால், குழந்தைகள் கேட்பது எல்லாம் நிறைவேற்றப்படும். இதே கொஞ்சம் இளைய தம்பதியாய் இருந்தால், இன்னொரு குழந்தைக்கு கூட அச்சாரம் போடப்படும். எனவே, உங்கள் லவ்வோலிக வாழ்க்கைக்கும் அருள்பாலிக்கும் இந்த சின்ன சின்ன சண்டைகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Couples Should Fight Well For Better Love Life

Do you why should couple fight well for better love life? read here.
Story first published: Tuesday, July 28, 2015, 12:43 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter