பொண்டாட்டிய சந்தோஷமா வெச்சுக்குங்க, இல்ல உங்க கதி அம்பேல்!!!

Posted By:
Subscribe to Boldsky

பெண்கள் கணவர்களிடம் இருந்து நகை, புடவை மற்றும் அவ்வப்போது பரிசுகள் என எதிர்பார்ப்பார்கள் தான். ஆனால், "அதுக்கும் மேல" பெண்கள் அவர்களது ஆசை கணவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது அன்பும், அக்கறையும். பிள்ளைகள் பெற்றெடுத்த பின்னும் கூட, தங்களை ஒரு குழந்தைப் போல கணவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைப்பார்கள் பெண்கள். இந்த இடத்தில் தான் பல ஆண்கள், அவர்களது மனைவிகளுக்கு தவறு இழைக்கின்றனர். திருமணத்தின் ஆரம்பக் கட்டத்தில் இருந்த அன்பும், அக்கறையும் அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த பின் இருப்பதில்லை.

உடலுறவு பற்றி கணவன் - மனைவி ஏன் வெளிப்படையாக பேசிக் கொள்ள வேண்டும்?

இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன, ஆண்களின் அலுவலக வேலைகள், பிரச்சனைகள், எதிர்காலத்தை பற்றிய யோசனைகள், வாழ்க்கை திட்டங்கள், குழந்தைகளின் படிப்பு செலவுகள் என பலவன இருக்கின்றன. ஆயினும் பெண்கள் எதிர்பார்ப்பது குறைந்தபட்சமாவது அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்பது தான். இதற்காகவாவது ஆண்கள் தங்களது மனைவிகளுடன் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும். அதற்காக அலுவலகத்திற்கு விடுப்பு போட்டுவிட்டு வர வேண்டும் என்பதெல்லாம் மனைவி எதிர்ப்பார்க்கவில்லை. அவர்களது எதிர்பார்ப்பு "அதுக்கும் மேல" சற்று வேறுவிதமாக இருக்கும் அந்த எதிர்பார்ப்புகளை தெரிந்து, புரிந்து உங்கள் ஆசை மனைவியின் ஆசை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுங்கள்...

ஆண்களைக் கடுப்படிக்கும் பெண்களின் குணாதிசயங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மார்க்கெட்டுக்கு உடன் செல்லுதல்

மார்க்கெட்டுக்கு உடன் செல்லுதல்

என்னதான் தனது கணவன் பெரிய ஜில்லா கலெக்டராக இருந்தாலும், காலை வேளையில் மார்க்கெட் சென்று காய்கறிகள் வாங்கி வர உடன் வரவேண்டும் என விரும்புவர். கணவனே தனியாக போய் வாங்கி வந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். இது வேலை வாங்குவதாக கருதக்கூடாது. பெண்கள் இதையெல்லாம் மிகவும் பெருமிதமாக நினைப்பார்கள்.

சமையல் செய்யும் போது உதவுவது

சமையல் செய்யும் போது உதவுவது

பெரும்பாலும் சமைத்து தராவிடினும், சமையல் செய்யும் போது காய்கறிகள் அறுத்து தருவது, உலை வெந்த போது இறக்கி தருவது என சிறு சிறு விஷயங்களில் கணவன் உதவ வேண்டும் என மனைவிகள் ஆசைப் படுவார்கள். இதை எல்லாம் கணவன்மார்கள் முகம் சுளிக்காது செய்து தரவேண்டும். இல்லை எனில் இரவில் அவர்கள் முகம் சுளித்துவிடுவார்கள்.

மாலை நேரத்தில் வாக்கிங்

மாலை நேரத்தில் வாக்கிங்

மாலை நேரங்களில் கணவனுடன் வாக்கிங் செல்வது மனைவிகளுக்கு பிடித்தமான விஷயம். வாரம் முழுக்க இல்லையெனிலும் வாரக்கடைசியிலாவது செல்ல வேண்டும் என்பது அவர்களது குறைந்தபட்ச எதிர்பார்ப்பு.

குழந்தைகளை பராமரிப்பது

குழந்தைகளை பராமரிப்பது

என்னமோ குழந்தை பிறந்ததில் இருந்து மனைவிகள் மட்டும் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என எண்ணுவது ஆண்களின் குணம். ஒரு நாள் தனியே குழந்தையுடன் நேரம் செலவழித்தால் தெரியும் அதன் அருமையும், பொறுமையும். எனவே, முடிந்த வரை வீட்டில் பெண்கள் வேறு வேலைகள் செய்யும் போது. கணவன் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என மனைவி விரும்புவாள்.

மாமனார் மாமியார் மீது அக்கறை

மாமனார் மாமியார் மீது அக்கறை

கணவன் அவரது தாய் தந்தை மீது எடுத்துக் கொள்ளும் அதே அக்கறையும், அன்பும், தங்களது தாய், தந்தை மீதும் எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பது மனைவிகளின் ஆசை. பெரும்பாலான ஆண்கள் இதை செய்ய தவறிவிடுகின்றனர்.

ஆதரவு

ஆதரவு

பெண்கள் மனமுடைந்து போகும் நிலைகளில், உடல் நிலை சரியில்லாது போகும் போது அவர்களது கணவன் மனதளவில் மிகவும் ஆதரவாக இருக்க வேண்டும் என பெண்கள் நினைப்பது இயல்பு. அந்த நேரங்களிலாவது அலுவலகத்தில் வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு அவர்களுடன் ஆதாரவாக ஆண்கள் இருக்க வேண்டியது அவசியம்

பிக்கப்-ட்ராப்

பிக்கப்-ட்ராப்

மனைவிகள் ஒருவேளை வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், அவர்களை அலுவலகத்தில் ட்ராப் செய்வது, பிக்கப் செய்வது போன்றவை கணவனிடம் அவர்கள் கூறாமலே தானாக தற்செயலாக நடக்க வேண்டும் என்பது மனைவிமார்களின் சினிமா லெவல் ஆசை.

வெளியில் செல்வது

வெளியில் செல்வது

திருமணமான புதிதில் ஒவ்வொரு வாரக்கடைசியிலும் எங்காவது கூட்டிக்கொண்டுப் போய் பழக்கிவிட்டு பின்பு, குழந்தை பிறந்த பின்பு முற்றிலுமாய் மறந்துவிடுவது ஆண்களின் குணம். ஆனால், பெண்கள் அதை அறுவது வயதிலும் எதிர்பார்பார்கள். குறைந்தது, அக்கம் பக்கம் இருக்கும் கோவில்களுக்காவது கணவர்களுடன் போய் வர பெண்கள் விரும்புவார்கள்.

பிரசவக்காலத்தில் அரவணைப்பு

பிரசவக்காலத்தில் அரவணைப்பு

பல ஆண்கள் பிரசவ காலத்தில் பெண்களை அவர்களது அம்மா வீட்டிற்கு அனுப்பிவிட்டு, இங்கு இவர்களது வேளையில் மூழ்கி விடுவார்கள். ஆனால், மற்றவர்களை விடு கணவன் அருகில் இருக்க வேண்டும் என்பது தான் பெண்கள் எதிர்பார்பார்கள்.

மாதவிடாய் பிரச்சனையை புரிந்துக் கொள்ள வேண்டும்

மாதவிடாய் பிரச்சனையை புரிந்துக் கொள்ள வேண்டும்

பல பெண்கள், அவர்களது கணவர்களிடம் வெறுப்பது மாதவிடாய் காலத்தில் அவர்களை புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வது. அவர்கள் உடலளவில் பெருமளவு மாதாமாதம் மிகவும் சோர்வடையும் நாட்கள் அவை. எனவே, ஆண்கள் அவர்களது நிலையை புரிந்துக்கொண்டு, அவர்களை அரவணைத்து, அக்கறையுடன் பார்த்துக் கொள்வது அவசியம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Things Wifes Expecting From Their Lovable Husbands

More than jewells and money, there are 10 things wifes expecting from their lovable husbands, read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter