For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எத்தனை வயது இடைவெளியில் திருமணம் பண்ணுனா கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியா இருக்கும் தெரியுமா?பாத்து பண்ணுங்க!

தம்பதிகளுக்கு இடையே வயது வித்தியாசம் இருப்பது என்பது மிகவும் பொதுவான ஒன்றாகும். இந்த வயது வித்தியாசம் ஒவ்வொரு தம்பதிக்கும் ஒவ்வொரு விதத்தில் செயல்படும்.

|

தம்பதிகளுக்கு இடையே வயது வித்தியாசம் இருப்பது என்பது மிகவும் பொதுவான ஒன்றாகும். இந்த வயது வித்தியாசம் ஒவ்வொரு தம்பதிக்கும் ஒவ்வொரு விதத்தில் செயல்படும். சில தம்பதிகளுக்கு 2 வயது இடைவெளி நன்றாக வேலை செய்கிறது, சிலர் 8 வயது இடைவெளியை விரும்புபவர்களாக இருக்கிறார்கள். தங்களுக்கு மிகவும் வயதான ஒரு துணையைப் பெற விரும்பும் பலர் உள்ளனர்.

நீங்கள் செய்யும் சிறு உதவி 12 வயது சிறுவனின் நோய் தீர உதவும்

What Is the Best Age Difference for a Successful Marriage in Tamil

ஒவ்வொருவரும் தங்களின் தேவைகளைப் பொறுத்து தங்கள் துணையின் வயது இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு அவர்கள் தேர்ந்தெடுக்க அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. பெரும்பாலான வெற்றிகரமான திருமணங்கள் சரியான வயது இடைவெளியைக் கொண்டுள்ளன, அது விருப்பங்களுடன் இணக்கத்தை சமநிலைப்படுத்துகிறது. மேலும் சிலருக்கு இது பெரும் தடையாக இருக்கும். வெவ்வேறு வயது இடைவெளிகள் தம்பதிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1-4 வயது வித்தியாசம்

1-4 வயது வித்தியாசம்

தற்போதைய காலக்கட்டத்தில் அனைவரும் இந்த வயது இடைவெளிகளில் திருமணம் செய்யவே விரும்புகின்றனர். ஆனால் இதிலும் சாதக, பாதகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த வயது வித்தியாசத்தில் திருமணம் செய்பவர்களுக்குள் பிடிவாதம் தொடர்பான பிரச்சினைகள் எழ வாய்ப்புள்ளது. அதேசமயம் ஒருவரின் தேவையை மற்றவர்கள் புரிந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இருவருமே தங்களின் எல்லைக்குள் நிற்பதால் விரைவில் திருமண முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது. துரதிர்ஷ்டவசமாக தற்போது விவாகரத்து செய்யும் ஜோடிகளில் பெரும்பாலானவர்கள் இந்த வகையை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கின்றனர்.

5-7 வயது இடைவெளி

5-7 வயது இடைவெளி

இந்த வயது வித்தியாசம் உள்ள தம்பதிகள் குறைவான மோதல்கள், தவறான புரிதல்கள் மற்றும் வாக்குவாதங்களை எதிர்கொள்கின்றனர். திருமணத்தில் பங்குதாரர்களில் ஒருவர் எப்போதும் முதிர்ந்தவராக இருப்பார்; அவர்கள் திருமணம் முறிந்து போகாமல் இருக்க பொறுமை காப்பார்கள். இந்த வயது இடைவெளி மற்றவர்களை விட மிகவும் சிறந்தது, ஏனெனில் இது தம்பதிகள் ஸ்திரத்தன்மையை அடைய உதவுகிறது மற்றும் நெருக்கமான கண்ணோட்டத்தில் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள உதவுகிறது.

10 வயது வித்தியாசம்

10 வயது வித்தியாசம்

வாழ்க்கைத் துணைவர்களிடையே போதுமான அன்பும் புரிதலும் இருந்தால் 10 வயது இடைவெளியை அடையக்கூடிய பல திருமணங்கள் உள்ளன. அவர்கள் தங்கள் வாழ்க்கை இலக்குகள், லட்சியங்கள் மற்றும் முன்னேற்றங்களை ஒன்றாக இணைக்கும்போது, 10 வருட இடைவெளி அச்சுறுத்தலாக இருக்காது. இருப்பினும், சாதாரண ஜோடிகளுக்கு, இது சற்று அதிகமானதாகத் தோன்றலாம். சில நேரங்களில், இளைய பங்குதாரர் தங்கள் துணையின் முதிர்ச்சி நிலையை அடையாமல் இருக்கலாம், அது நிறைய சிக்கல்களை உருவாக்கலாம்.

20 வயது வித்தியாசம்

20 வயது வித்தியாசம்

தற்போதைய காலக்கட்டத்தில் 20 வருட இடைவெளியில் பரவலாக யாரும் திருமணம் செய்துகொள்வதில்லை. ஆனால் கடந்த காலங்களில் இது மிகவும் சாதாரணமான ஒன்றாக இருந்தது. ஆனால் திருமணத்தில் தம்பதிகளுக்கு இது சிறந்த வயது இடைவெளி அல்ல. 20 வயதுக்கு மேற்பட்ட வயது வித்தியாசம் கொண்ட பல பிரபலமான தம்பதிகள் இருந்தாலும், வேறுபாடுகள் அதிகமாக இருக்கலாம். இலக்குகள், லட்சியங்கள் மற்றும் கருத்துகளில் பெரிய மாற்றம் இருக்கும். எல்லாவற்றிலும் பெரியது, குழந்தைகளைப் பெறுவதற்கான தேவை; வயதில் மூத்த மனைவி விரைவில் குழந்தைகளைப் பெற விரும்பலாம் ஆனால் இளைய வயது மனைவி இந்த வாய்ப்பில் ஆர்வம் காட்டாமல் இருக்கலாம். அவர்களின் சிந்தனை நிலைகளில் உள்ள வேறுபாடு மிகப்பெரிய குறைபாடுகளில் ஒன்றாக இருக்கலாம். மேலும் இந்த வயது வித்தியாசம் ஆண்களின் கருவுறுதல் திறனிலும்

பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.

வயது வித்தியாசம் உண்மையில் முக்கியமா?

வயது வித்தியாசம் உண்மையில் முக்கியமா?

ஆம், பொதுவாக அது செய்கிறது. தற்போதைய உலகம் ஒவ்வொரு முறையும் மாறி வருவதால் கருத்துக்களில் பெரிய வேறுபாடுகள் இருக்கும். திருமணங்கள் குறுகிய காலமே நீடிப்பதாகவும், சிக்கலாகவும் இருக்கலாம். பொதுவாக, வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால், தம்பதிகள் சந்திக்கும் பிரச்சனைகள் அதிகம். ஒரு சிறிய வயது இடைவெளி கூட பயனுள்ளதாக இருக்கும் ஆனால் இரண்டு தசாப்த கால இடைவெளி? அதிக அளவல்ல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Is the Best Age Difference for a Successful Marriage in Tamil

Read to know what is the best age difference for a successful marriage.
Desktop Bottom Promotion