For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா?

எல்லா ஜோடிகளும் வித்தியாசமாக இருந்தாலும், ஒரு உறவை வெற்றிகரமானதாக மாற்றத் தேவையான சில பண்புகளை அறிவியல் கணித்துள்ளது.

|

அனைவரின் வாழ்விலுமே காதல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எல்லாருக்குமே வாழ்க்கையில் காதல் என்பது திருப்பு முனையாக இருக்கும். ஒருவரின் வாழ்க்கையை சரியான பாதையில் செலுத்துவதில் காதல் என்பது முக்கியபங்கு வகிக்கிறது. அந்த காதல் சரியான காதலாக அமைய வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையாகும்.

How To Find a Perfect Relationship Scientifically?

சரியான காதல் எது என்பதை தீர்மானிப்பதில் அனைவருக்கும் குழப்பம் இருக்கும். பர்பெக்ட்டான உறவுக்கான அளவுகோல் என்னவென்பதை உலகம் முழுவதும் பலரும் ஆராய்ச்சி செய்து கொண்டுதான் இருக்கின்றனர். ஒவ்வொரு ஜோடிகளும் வித்தியாசமாக இருந்தாலும், ஒரு உறவை வெற்றிகரமானதாக மாற்றத் தேவையான சில பண்புகளை அறிவியல் கணித்துள்ளது. இந்த பதிவில் பர்பெக்ட்டான காதலுக்கு இருக்கும் சில தகுதிகள் என்னென்னெ என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறைவான சண்டைகள்

குறைவான சண்டைகள்

வெற்றிகரமான தம்பதிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவ்வளவாக சண்டையிடுவதில்லை. ஒரு காலத்தில் அவர்கள் அதையே வேலையாக வைத்திருந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் காலம் செல்ல செல்ல சண்டை குறைந்து காதல் மட்டுமே அவர்களுக்குள் நிறைந்திருக்கும்.

 வீட்டு வேலைகள்

வீட்டு வேலைகள்

வெற்றிகரமான உறவில் அல்லது சரியான காதலில் எப்பொழுதும் என் வேலை, உன் வேலை என்று தனித்தனியாக எதுவும் இருக்காது. வெற்றிகரமான உறவில் ஆண், பெண் இருவரும் அனைத்து வேலைகளையும் சமமாக பிரித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் செய்வார்கள்.

பாலியல் செயல்பாடு

பாலியல் செயல்பாடு

வெற்றிகரமான ஜோடிகள் உணர்ச்சிரீதியாக மட்டுமில்லாமல் உடல்ரீதியாகவும் ஒருவர்மீது ஒருவர் ஈர்ப்புக் கொண்டவர்களாகவும், ஒத்துபோகக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். தாம்பத்தியம் என்பது திருமணத்தின் ஒரு முக்கியமான பகுதியாகும். பாலியல்ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கும் தம்பதிகள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள்.

MOST READ:முஸ்லீம் ஆண்கள் தங்கம் போடாமல் இருப்பதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?

போதுமான தூக்கம்

போதுமான தூக்கம்

இது கொஞ்சம் வித்தியாசமானதாகத் தோன்றலாம், ஆனால் இது வெற்றிகரமான காதலுக்கு இதுவும் ஒரு தகுதியாகும். ஒரு சரியான மற்றும் வெற்றிகரமான காதலில் ஜோடி இருவரும் போதுமான அளவு ஓய்வு எடுப்பார்கள். இது அவர்களின் புரிதலுக்கான அடையாளமாகும்.

சத்தமாக சிரிப்பார்கள்

சத்தமாக சிரிப்பார்கள்

சிரிப்பு உண்மையிலேயே அனைத்து பிரச்சினைகளுக்கும் சிறந்த மருந்தாகும். மனம் விட்டு சத்தமாக சிரிக்கும் தம்பதிகள் வெற்றிகரமான உறவில் இருப்பதாக அர்த்தம் என்று அறிவியல் கூறுகிறது.

 ஒருவரையொருவர் ஊக்குவிப்பார்கள்

ஒருவரையொருவர் ஊக்குவிப்பார்கள்

வெற்றிகரமான காதலில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் ஊக்குவித்துக் கொள்வார்கள். ஒருவரின் சாதனையை நினைத்து மற்றவர்கள் மகிழ்வார்கள். ஒருவருக்குள் இருக்கும் சிறந்த குணத்தை மற்றொருவர் வெளிக்கொண்டுவர துணையாக இருப்பார்கள்.

நண்பர்கள் வட்டம்

நண்பர்கள் வட்டம்

தம்பதிகளுக்கு பொதுவான நண்பர்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அவர்களின் சொந்த நட்பு வட்டாரமும் அவர்களுக்கு முக்கியம். இது தம்பதிகளின் சுதந்திரத்தின் அடையாளமாகும், இது வெற்றிகரமான ஜோடிக்குத் தேவையான இடத்தை அளிக்கிறது.

MOST READ:இலட்சுமணனின் மரணத்திற்கு இராமரே எப்படி காரணமாக மாறினார் தெரியுமா?

செலவு

செலவு

சமீபத்திய ஆய்வில் பணம் அதிகம் செலவழிக்கும் குணம் கொண்ட இருவரும் வெற்றிகரமான ஜோடியாக இருக்க வாய்ப்புள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்தாலும் அதிக செலவு அதிக மகிழ்ச்சியைத் தரும் என்று கூறப்படுகிறது.

முதல் மற்றும் கடைசி பிறந்தவர்கள்

முதல் மற்றும் கடைசி பிறந்தவர்கள்

தம்பதிகளில் ஆண் முதலில் பிறந்தவராகவும் (வயதானவர்), பெண் கடைசியாக பிறந்தவராகவும்(இளையவர்) இருந்தால் அந்த உறவு மிகவும் வெற்றிகரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

 மரியாதை

மரியாதை

தம்பதிகள் தங்களுக்குள் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எந்த சூழ்நிலையிலும் ஒருவரை ஒருவர் அவமதித்துக் கொள்ள மாட்டார்கள். ஒருவர் மீது ஒருவர் எப்பொழுதும் அன்பும், மரியாதையும் வைத்திருப்பார்கள்.

MOST READ:இந்த சீன முறையை வைச்சு கருவில் இருக்கிறது என்ன குழந்தைனு துல்லியமா சொல்லிரலாம் தெரியுமா?

கடந்த காலம்

கடந்த காலம்

வெற்றிகரமான உறவில் இருக்கும் இருவருக்குமே அவரவர் கடந்த காலம் முழுவதுமாக தெரிந்திருக்கும். சரியான காதலில் இருப்பவர்கள் தங்கள் துணையின் கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காமல் நிகழ்காலத்தை எப்படி மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது என்பது பற்றி சிந்திப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Find a Perfect Relationship Scientifically?

Science has predicted these traits that are needed to make a relationship successful.
Story first published: Thursday, November 21, 2019, 18:00 [IST]
Desktop Bottom Promotion