For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் திருமண வாழ்வில் காதல் குறையாமல் இருக்க இத பண்ணுங்க போதும்...!

|

உங்கள் துணையுடன் நேரம் செலவிடுவதே இந்த நவீன காலகட்டத்தில் மிகப்பெரிய விஷயமாக அனைவரும் பார்க்கின்றனர். தற்போது உள்ள காலக்கட்டத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் வேலைக்கு செல்கின்றனர். ஒரே துறையை சார்ந்தோ அல்லது வெவ்வெறு துறையை சார்ந்தோ அல்லது ஒரே அலுவலகத்தில் பணிபுரிவதோ இப்படியாக வேலை நாட்கள் நகரும். இந்தியாவில் முன்பை விட தற்போதுதான் விவாகரத்து வழக்குகள் அதிகம் உள்ளன. காரணம் புரிதலின்மை. தங்களுடைய துணைக்கான நேரத்தை ஒதுக்கி அவர்களுடன் மகிழ்ச்சியாக பேசுவது, விளையாடுவது என்பது இங்கு மிகமிக குறைவு.

Hobbies For Couples To Strengthen Their Relationship

உங்களுடைய உறவை நீங்கள் அடுத்தகட்டதிற்கு எடுத்துச்செல்ல சில பொழுதுபோக்கு விளையாட்டுகளை உங்கள் துணையுடன் நீங்கள் விளையாடாலாம். இது உங்கள் உறவுக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும் என்கிறது ஆய்வுகள். உங்கள் துணையுடன் சேர்ந்து பொழுதுபோக்கைக் கொண்டிருப்பது சிறந்த, வலுவான மற்றும் நெருக்கமான பிணைப்பை இணைக்கவும் வளர்க்கவும் உதவும். உங்கள் துணையுடன் சேர்ந்து ஒன்றாக விஷயங்களைச் செய்வது உங்கள் உறவை சுவாரஸ்யமாகவும் வேடிக்கையாகவும் வைத்திருக்கும். இது உங்கள் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கும், புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கும் ஒரு அற்புதமான வழியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பயணங்கள்

பயணங்கள்

ஒன்றாக பயணம் செய்யும் தம்பதிகள் பயணங்கள் முடிந்த பிறகும், தங்கள் உறவை வலுப்படுத்தும் பொதுவான குறிக்கோளையும் நோக்கத்தையும் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் துணையுடன் ஒரு வேடிக்கையான வார பயணத்தைத் திட்டமிட்டு கூட்டிச்செல்லுங்கள். புதிய இடம் மற்றும் புது சூழலில் ஒருவருக்கொருவர் பிணைவதற்கான சரியான சூழ்நிலை.

நடைபயணம் என்பது உலகை ஆராய்வதற்கான ஒரு அற்புதமான வழியாகும், மேலும் நீங்கள் இருவரும் ஒன்றாக எதிர்கொள்ளக்கூடிய உண்மையான சவாலாக இது இருக்கலாம். இருப்பினும், ஒரு குழுவாக சவாலை முடிக்க ஒருவருக்கொருவர் ஊக்குவிப்பதே பிணைப்புக்கு உதவும்.

ரோலர் ஸ்கேட்டிங்

ரோலர் ஸ்கேட்டிங்

உங்கள் துணையுடன் அருகில் உள்ள பகுதிக்கு சென்று ஒரு ஜோடி ரோலர் பிளேட்களைப் பெற்று, ரோலர் ஸ்கேட்டிங் செல்லுங்கள். ரோலர் ஸ்கேட்டிங் செல்லும்போது, கைகளைப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பல முறை விழக்கூடும். ஆனால் நீங்கள் இருவரும் அதை ஒன்றாகச் செய்வீர்கள். இது ஒருவிதாமான கலகலப்பான விளையாட்டாக மாறும். உங்களுக்குள் சந்தோஷம் மற்றும் அன்பு அதிகரிக்கும்.

மார்க்கெட்க்கு செல்லுங்கள்

மார்க்கெட்க்கு செல்லுங்கள்

ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒருவருக்கொருவர் சரியாக நேரத்தை செலவிட மார்க்கெட்க்கு செல்லுவது ஒரு எளிய மற்றும் அழகான வழியாகும். குறிப்பாக இது உங்கள் மனைவிக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும்.

நீங்கள் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கிக்கொண்டு சமைக்க இந்நாளை ஒன்றாக செலவிடலாம். நீங்கள் ஒருவருக்கொருவர் ருசியான உணவுகளை தயாரிக்கவும், சில சமையல் வலிமையைக் காட்டவும் முடியும். பிடித்தமான நல்ல ருசியான உணவுகளை சமைத்து உண்பது கூட ஒருவித நெருக்கத்தை உங்கள் துணையுடன் ஏற்படுத்தும்.

MOST READ: கர்ப்ப காலத்தில் பெண்கள் வேர்க்கடலை சாப்பிடலாமா? அது பாதுகாப்பானதா?

புகைப்படம் எடுத்தல்

புகைப்படம் எடுத்தல்

தற்போது புகைப்படத்தின் மேல் அனைவருக்கும் மோகம். உணர்ச்சிகள் நிரம்பிய சில தருணங்கள் வாழ்க்கையில் எப்போதாவதுதான் தோன்றும். அந்த தருணங்களை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டால், அந்த புகைப்படத்தை எத்தனை வருடம் கழித்து பார்த்தாலும், அந்த அழகான நேரம் உங்கள் கண்முன் வந்துபோகும்.

திருமணம், பிறந்தா நாள் நிகழ்வு என எல்லா நிகழ்வுகளையும் புகைப்படம் எடுத்து சேர்த்து வைக்கும் பழக்கம் வெகுஜன மக்களிடையே அதிகமாக வந்துவிட்டது. இதில், உங்கள் துணையுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களை புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இருவரும் அதைத் திரும்பிப் பார்த்து, பிற்காலத்தில் அந்த தருணத்தை புதுப்பித்து, நீங்கள் ஒன்றாகக் கழித்த அழகான நேரத்தை நினைவூட்டலாம். அது இன்னும் உங்கள் உறவுக்கு வலு சேர்க்கும்.

நடனம்

நடனம்

ஒருவருக்கொருவருடன் நெருக்கம் ஏற்படுத்துவதில் நடனம் முக்கிய பங்கு வகிக்கிறது. சல்சா நடனம் உங்கள் துணையுடன் சேர்ந்து ஆடும்போது, இது உங்கள் இருவரையும் ஆறுதல் மண்டலங்களிலிருந்து வெளியேற்றும். ஒருவித ரொமன்ஸ் மூடுவுக்கு வந்துவிடுவீர்கள்.

சினிமாக்களிலும், கதைகளிலும் கூட ஒரு நடனத்திற்குப் பிறகு ஜோடிகள் முத்தமிடுகிறார்கள். அதற்கு பின் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டு உடலுறவு கொள்வதற்கான தூண்டுதலாகவும் அமையும். இது உங்களுக்கு புதுவித அனுபவத்தையும், நெருக்கத்தையும் ஏற்படுத்தும்.

ஸ்நோர்கெலிங் செல்லுங்கள்

ஸ்நோர்கெலிங் செல்லுங்கள்

நீங்கள் இருவரும் சாகச விளையாட்டுகளை விரும்பினால், இது மற்றொரு சிறந்த வெளிப்புற பொழுதுபோக்காக உங்களுக்கு இருக்கும். நீங்கள் கடலில் பல மீன்களைக் காணலாம் மற்றும் சில அற்புதமான நினைவுகளை உருவாக்கலாம். எதிர்காலத்தில் நீங்கள் இருவரும் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும்போது, மனதில் பதியக்கூடைய ஒரு நிகழ்வாக இது இருக்கும்.

அதுபோல ஸ்கூபா டைவிங் செல்லும்போது, அழகான புதிய நினைவுகளை உருவாக்கலாம். இது ஒரு சிறந்த பிணைப்பு அனுபவமாக இருக்கும். ஏனென்றால் இயற்கையின் மிக அழகான காட்சிகளில் ஒன்றை நீங்கள் ஜோடியாக ஒன்றாக அனுபவிப்பீர்கள்.

MOST READ:நெய்ல் பாலிஸ் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து...!

தோட்டம் அமைப்பது

தோட்டம் அமைப்பது

தோட்டக்கலை ஒரு வேடிக்கையான பொழுதுபோக்கு. நீங்கள் இருவரும் வெளியில் அழகான தோட்டம் ஒன்றை உருவாக்கலாம். நீங்கள் இருவரும் விரும்பும் எந்த காய்கறிகளாக இருந்தாலும், பூக்களாக இருந்தாலும் உங்கள் உறவைப் போல நீங்கள் உருவாக்கிய தோட்டமும் நாளுக்கு நாள் வளர்வதைப் பாருங்கள். இது உங்களுடைய அன்பை மேலும் அதிகமாக வெளிப்படுத்தும்.

ஒன்றாக சமைக்கவும்

ஒன்றாக சமைக்கவும்

உங்கள் துணையுடன் சேர்ந்து ஒன்றாக சமையல் செய்ய முயற்சி செய்வது ஒரு சிறந்த பொழுதுபோக்கு. நீங்கள் விரும்புமும் உணவுகள் மற்றும் இதுவரை சுவைக்காத சில சமையல்களை துணையுடன் சேர்ந்து சமைக்கலாம். இது உங்களுக்கும் இன்னும் நெருக்கத்தை ஏற்படுத்தும்.

நீங்கள் இருவரும் அனுபவிக்கும் அன்புடன் உணவை உருவாக்க இது ஒரு சூப்பர் வேடிக்கையான வழியாகும். நீங்கள் ஒரு சமையல் போட்டியை கூட நடத்தலாம். அங்கு ஒருவர் இனிப்பையும் மற்றொன்றை பிரதான உணவாகவும் செய்யலாம். வெற்றியாளர் யார் என்பதை உங்கள் நண்பர்கள் தீர்மானிக்கலாம்.

வீடியோ கேம்களை விளையாடுங்கள்

வீடியோ கேம்களை விளையாடுங்கள்

ஒருவருக்கொருவர் பிடித்த வீடியோ கேம்களை விளையாடுங்கள் அல்லது புதிய கேம் ஒன்றை முயற்சிக்கலாம். ஒவ்வொரு நாளும் ஏராளமான வீடியோ கேம்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒருவருக்கொருவர் போட்டியிடுங்கள் அல்லது ஒரு அணியை உருவாக்கி மற்றவர்களுக்கு எதிராக போட்டியிடுங்கள். வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழுங்கள்.

கேம்ப்

கேம்ப்

நீங்கள் ஒன்றாகச் செய்யக்கூடிய ஒரு பொழுதுபோக்கிற்கு கேம்ப் ஒரு சிறந்த யோசனை. நீங்கள் ஒருவருக்கொருவர் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். ஏனென்றால் நீங்கள் ஒரு புதிய சூழலில் சில நாட்கள் தங்கியிருப்பீர்கள். இதில் நீங்கள் உங்கள் துணையுடன் தனியாக நேரத்தை கழிக்கலாம். இது மிகுந்த மன நிம்மதியை இருவருக்கும் தரும். உங்களுக்கும் ஊடல் உண்டாகவும் இந்த கேம்ப் பொழுதுபோக்கு காரணமாக இருக்கலாம்.

MOST READ: ஆண்களே உங்களின் விந்தணுக்களுக்கு எது சக்தி தருகிறது தெரியுமா?

நீச்சல்

நீச்சல்

நீச்சல் என்பது நீங்கள் இருவரும் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு. உங்கள் துணைக்கு நீச்சல் தெரியவில்லை என்றால் நீங்களே கற்றுக்கொடுக்கலாம். இது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் உங்கள் உறவை வலுபடுத்தும். மேலும் இது ஒரு காதல் அனுபவமாக மாற்றலாம்.

உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்லுங்கள்

உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்லுங்கள்

உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று ஒன்றாக உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இருவரும் ஒன்றாகச் செய்ய இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு. உங்கள் துணை இதற்கு உந்துதலாக இருக்கலாம். ஆரோக்கியமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உங்களுடைய துணை உங்களை ஊக்குவிப்பார்கள். உடற்பயிற்சியின் சில நேரங்களில் உங்களுக்குள் சில கவர்ச்சியான சில விஷயங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

மேலும் யோகா வகுப்பிற்கு கூட நீங்கள் இருவரும் ஒன்றாக செல்லலாம். மன அழுத்தத்தை குறைக்கும் யோகா உங்களுடைய வாழ்க்கையில் மனநிம்மிதியை அளிக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தில் அதன் மகிழ்ச்சி பலன்களை அறுவடை செய்வீர்கள்.

ஒரு புதிய இசைக்கருவியைக் கற்றுக் கொள்ளுங்கள்

ஒரு புதிய இசைக்கருவியைக் கற்றுக் கொள்ளுங்கள்

உங்கள் கலைப் பக்கங்களை வெளியேற்றி, வயலின், பியானோ அல்லது தப்லாவை எவ்வாறு வாசிப்பது என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால் இசைக்கு மயங்காத உயிர் இவ்வுலகில் இல்லை. உங்கள் துணைக்கு பிடித்த பாடலை அல்லது இசையை வாசித்து அவர்களை சந்தோஷப்படுத்துங்கள். அவர்களுக்கும் அதை கற்றுக்கொடுங்கள். கற்றுக்கொடுக்கும்போது உங்களுக்குள் காதல் மலரலாம்.

MOST READ: இந்த எண்ணெய் உங்களின் பாலுணர்வை அதிகரிக்கும் தெரியுமா?

ஒருவருக்கொருவர் மசாஜ் செய்வது

ஒருவருக்கொருவர் மசாஜ் செய்வது

இருவரும் மசாஜ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். இதுதொடர்பாக யூடியூபிலிருந்து தேவையான அனைத்து தகவல்களையும் நீங்கள் பெறலாம் அல்லது புத்தகத்தின் மூலம் பெறலாம். இது நல்ல மசாஜ் செய்வது எப்படி என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் உங்களுக்குக் கற்பிக்கும்.

நீங்கள் அதை ஒன்றாகக் கற்றுக்கொள்ளலாம் அல்லது நீங்கள் கற்றுக்கொண்டதை உங்கள் துணைக்கு செய்து காட்டலாம். ஒருவருக்கொருவர் மசாஜ் செய்து ஒருவருக்கொருவர் பயிற்சி செய்யுங்கள். இந்த நிதானமான பொழுதுபோக்கு மனதுக்கும் உடலுக்கும் பல நன்மைகளைக் கொடுக்கிறது. இதில் உங்கள் உடலுறவும் நலம்பெற அமையும்.

சதுரங்க விளையாட்டு

சதுரங்க விளையாட்டு

உலகளவில் விரும்பப்படும், அறிவார்ந்த தூண்டுதல் விளையாட்டு சதுரங்கம். இந்த விளையாட்டை உங்கள் துணையுடன் சேர்ந்து விளையாடலாம், இன்னும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். ஒருவருக்கொருவர் ஏதாவது பந்தையம் வைத்து விளையாடலாம். வெற்றி பெற்றவர்களுக்கு தோல்வியடைந்த துணை ஏதாவது செய்ய வேண்டும் என்றும் வேடிக்கையாக விளையாடலாம். இதனால் அன்புமும் பலமடங்கு பெருகும்.

உங்கள் துணையுடன் சேர்ந்து புதிய பொழுதுபோக்குகளை முயற்சிப்பது மற்றும் ஒன்றாகச் செயல்களைச் செய்வது இருவருக்குள்ளும் பிணைப்பையும், உறவையும் வலுப்படுத்தும். புதிய பொழுதுபோக்குகளை செய்ய முயற்சிப்பது, உங்கள் உறவில் ஒருபோதும் சலிப்பை ஏற்படுத்தாது. உங்களுடைய தாம்பத்திய வாழ்க்கையிலும், அன்பிலும் குறையில்லாமல் மகிழ்ச்சியாய் செல்லும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hobbies For Couples To Strengthen Their Relationship

Here are the list of hobbies to do for couples to strengthen their relationship.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more