For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செக்ஸ் குறித்து இளைஞர்களுக்கு அதிகம் தோன்றும் பயங்கள் என்னென்ன தெரியுமா? எப்படி அதை சரிசெய்வது?

|

பொதுவாக திருமணமான தம்பதிகளுக்கு செக்ஸ் என்பது பயமுறுத்துவதாகவோ அல்லது ஆச்சரியமானதாகவோ இருக்காது. இது அவர்களுக்கு சுவாரஸ்யம் நிறைந்த மகிழ்ச்சிகரமான செயலாகவே இருக்கும். ஆனால் திருமணம் ஆகாதவர்களுக்கு சில சமயம் திருமணம் ஆனவர்களுக்கு கூட செக்ஸ் பயம் நிறைந்த செயலாக மாற வாய்ப்புள்ளது.

உண்மையில் திருமணம் ஆகாதவர்களுக்கு செக்ஸ் என்பது அவர்களுக்கு சாகசம் போல தோன்றினாலும் அவர்களுக்குள் மறைமுகமான பயம் கண்டிப்பாக இருக்கும். சிலசமயம் இந்த பயங்கள் திருமணத்திற்கு பிறகும் தொடரலாம். இந்த பயம் தம்பதிகளின் பாலியல் வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக நிலவும் செக்ஸ் குறித்த அச்சங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
STD பயம்

STD பயம்

STD அல்லது ஹெர்பெஸ், கிளமிடியா போன்ற பாலியல் பரவும் நோய்கள் ஏற்படுமோ என்ற பயம் மக்களிடையே மிகவும் பொதுவானது. அவர்களில் பெரும்பாலோர் தங்களுக்கு மிகக் குறைவாகத் தெரிந்த அல்லது தெரியாத ஒருவருடன் உடலுறவு கொள்வதைத் தவிர்க்கிறார்கள். உங்கள் பங்குதாரர் தங்களை சோதித்திருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம் என்றாலும், இந்த விஷயங்கள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும். எனவே நீங்கள் உடலுறவைத் தொடங்குவதற்கு முன்பு நிச்சயமாக உங்கள் துணையிடம் இதைப் பற்றி பேசுங்கள்.

தேவையில்லாத கர்ப்பம்

தேவையில்லாத கர்ப்பம்

கர்ப்பத்தை தவிர்க்க பெரும்பாலும் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு சாதனம் காண்டம்தான். இருப்பினும், ஆணுறைகள் எப்போதும் 100% பயனுள்ளதாக இருக்காது. சில நேரங்களில் இது கடினமான செக்ஸ் அல்லது பொருளின் மோசமான தரம் காரணமாக கூட உடைந்து போகக்கூடும். இதன் விளைவாக கர்பத்திற்கான அறிகுறிகளை நீங்கள் உணர ஆரம்பிக்கலாம். இந்த தேவையற்ற பயத்தை போக்க தரமான காண்டம் அல்லது வேறுசில கர்ப்பத்தடை முறைகளை பயன்படுத்தலாம்.

வரலாற்றில் ம(றை)றக்கப்பட்ட உலகின் வித்தியாசமான கலாச்சாரங்கள்... ஆச்சரியப்படுத்தும் பண்டைய வரலாறு...!

சங்கடமான உடல் செயல்பாடுகள்

சங்கடமான உடல் செயல்பாடுகள்

செக்ஸ் என்பது சில சந்தர்ப்பங்களில் மிகவும் குழப்பமானதாக இருக்கலாம் மற்றும் நீங்கள் திடீர் சத்தம், உடல் உமிழ்வு அல்லது திரவ வெளியேற்றங்களைக் கூட அனுபவிக்கலாம். இது சுறுசுறுப்பாகவும் ஆனால் மிகவும் சங்கடமாகவும் இருக்கலாம், ஆனால் இது செயல்பாட்டின் ஒரு பகுதியாகும். இது முற்றிலும் இயற்கையானது, ஆனால், உங்கள் துணை இதற்காக சங்கடப்பட்டால் அவர்கள் முதிர்ச்சியற்றவர்கள், உங்களுக்கு சரியானவர்கள் அல்ல.

இல்லை என்று கூறுவது

இல்லை என்று கூறுவது

நீங்கள் உடலுறவு கொள்வதற்கு முன் இந்த கேள்வியை உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் பாலியல் துணையை நம்புகிறீர்களா? பொதுவாக மக்கள் தங்கள் கூட்டாளர்களை மகிழ்விப்பதில் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள், இதனால் அவர்கள் பெரும்பாலும் தங்கள் விருப்பங்களை அங்கீகரிக்கத் தவறிவிடுகிறார்கள். உங்கள் துணை உங்கள் விருப்பங்களையும், ஆசைகளையும் மதிக்க மறுத்தால், அவற்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். அந்த சூழ்நிலையில் கண்டிப்பாக உடலுறவு கொள்ளாதீர்கள்.

குறைந்த தன்னம்பிக்கை

குறைந்த தன்னம்பிக்கை

பலர் உடலுறவைத் தவிர்க்க காரணம் மற்றவர்கள் கிண்டல் செய்யலாம் அல்லது நிர்வாண உடலை வெறுக்கலாம். இத்தகைய குறைந்த தன்னம்பிக்கை பிரச்சினைகள் சமூகத்தில் இருந்து எழுகின்றன. நம் அனைவருக்குமே பாதுகாப்பற்ற தன்மை உள்ளது, அது சரிதான். ஆனால் படுக்கையறையில் நீங்கள் அனுபவிக்கும் வேடிக்கையில் முக்கியமாக கவனம் செலுத்துவது நல்லது, ஏனென்றால் உங்கள் துணை கவனிக்க விரும்புவது உங்கள் குறைபாடுகளை அல்ல.

இந்தியாவில் அமானுஷ்ய சம்பவங்களுக்காகவே ஒதுக்கப்பட்ட கோவில்கள்... பயப்படாம படிங்க...!

உடலுறவில் மோசமாக இருக்கிறேன்

உடலுறவில் மோசமாக இருக்கிறேன்

யாரும் உண்மையில் உடலுறவில் மோசமாக இல்லை. இது அனுபவம். நீங்கள் குறைவான அனுபவம் இல்லாதவர்களாகவோ அல்லது உடலுறவு செயல்பாட்டில் குறைவாகவோ இருந்தால் நீங்கள் செக்ஸ் குறித்து சரியாம புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். நீங்கள் அதனைப் பற்றி தெரிந்து கொண்ட பிறகு, உங்களின் தேவை குறித்து உங்கள் துணையிடம் தொடர்பு கொள்ள கற்றுக்கொண்டவுடன், செக்ஸ் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் சுவாரஸ்யமாகவும் மாறும். நீங்கள் எப்போதும் உடலுறவில் மோசமாக இருக்க மாட்டீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Common Fears People Have About Love Making

Check out the list of common fears people have about love making.