For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதல் காதல் என்றும் அழிக்க முடியாதது...

முதல் காதல் கொடுக்குற எல்லா விஷயமும் எல்லையற்றதான ஒன்று தான். முடிவிலின்னு சொல்லுவான... அது முடிவே இருக்காது... முதல் காதல் கொடுக்குற வலி, இன்பம், சுவாரஸ்யம், காத்திருப்பு, அனுபவங்கள், தருணங்கள்...

|

நாம என்ன தான் இப்ப க்ரூசர் பைக், ஸ்போர்ட்ஸ் கார்னு ஓட்டுனாலும்... முதல் முறையா குரங்கு பெடல் அடிச்சு ஓட்ட கத்துக்கிட்ட அந்த சைக்கிள் கால அனுபவங்கள மறக்க முடியுமா? இப்ப நூறு கிலோ மீட்டர் வேகமா வண்டி ஓட்டு வாழ்க்கைய சுவாரஸ்யமான நாம பார்த்திருந்தாலும்... அந்த குரங்கு பெடல் சைக்கிள்ல கீழ விழுந்து வார்னா அந்த காயம் இன்னும் உங்க கால் கையில இருந்துட்டே தான இருக்கும்.

பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணியே அந்த வடுவ மறைச்சாலும்... அந்த இடத்துல ஒரு வடு இருந்த அடையாளம் நம்ம மனசுக்குள்ள இருந்துட்டே தான் இருக்கும். அத யாராலையும் மறக்கவே முடியாது. அது கொடுத்த அனுபவங்கள், வலி எல்லாம் யாராலையும் திரும்ப(பி) கொடுக்க முடியாது.

அந்த குரங்கு பெடல் தான் நம்ம எல்லாருடைய முதல் காதல். சிலர் இன்னும் அந்த குரங்கு பெடல் அடிச்ச சைக்கிளோட வாழ்ந்துட்டு இருப்பாங்க. சிலர் கூடவே வெச்சிருப்பாங்க.. இப்ப அந்த சைக்கிள் அவங்களுக்கு அழகானத தெரியும். எல்லாருடைய வாழ்க்கையிலையும் அந்த குரங்கு பெடல் சைக்கிள் கடைசி வரைக்கும் வரது இல்ல.

ஏன்னா... சிலருக்கு அது சொந்தமா இருக்கலாம். சிலருக்கு அது வாடகை சைக்கிளா இருக்கலாம்.... என்னவா இருந்தாலும் அந்த குரங்கு பெடல் சைக்கிள் நினைவுகள் சாகுற வரைக்கும் மறையாது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பதட்டம்!

பதட்டம்!

எந்த ஒரு விஷயமும் முதல் முறையா ட்ரை பண்ணும் போது தான் ஒரு பதட்டம் இருக்கும். காதல்ல அந்த பதட்டம் ரொம்பவே அழகானது. எப்படி பிரபோஸ் பண்றதுங்கிறத தாண்டி... அப்படி அவள பார்க்கலாம்.. எத காரணமா வெச்சு அவள பார்க்கலாம்ங்கிறது எல்லாம் ரொம்பவே சுவாரஸ்யமா இருக்கும். சிலர் எல்லாம், ஒரு தடவ நேர்ல பார்க்க, பேச அவளோட பிறந்தநாள் வரைக்கும் காத்திருப்பாங்க. அந்த ஒரு ஹேப்பி பர்த்டே விஷ், அந்த சாக்குல அவள ஒரு முறை லேசா கைய தொட்டு பார்த்துக்கலாம். அதெல்லாம் பயங்கரமான பதட்டம்.

நாம காதலிக்கிற பொண்ணோட கைய தொட்டு பார்த்துட்டோம்னு வையிங்களேன்... சும்மா உடம்பு முழுக்க ஜில்லுன்னு இருக்கும். அவள் கைப்பட்ட இடம் மட்டும்... ஐஸ்மலையாய்...னு சிலர் கவிதை எல்லாம் கிறுக்கி இருப்பாங்க. அதுல நான் ஒரு பெரிய கிறுக்கன்.

மூத்த மகன் பரிதாபங்கள்!

மூத்த மகன் பரிதாபங்கள்!

பெரும்பாலான முதல் காதல் பள்ளி பருவத்துல தான் வந்திருக்கும். அதுல மிஸ் ஆயிருந்தா சிலருக்கு அது காலேஜ் டைம்ல வந்திருக்கலாம். ரொம்ப, ரொம்ப சிலருக்கு மட்டுமே முதல் காதல் அனுபவம் இருபது வயத தாண்டின பிறகு அமையுதுன்னு... வீட்டுக்கு மூத்த மகனா பிறந்தவர்கள் குமுறுவதை வெச்சு தெரிஞ்சுக்க முடியும்.

மூத்த மகனா பிறக்குறதுல மட்டும் தாங்க அவங்க ஃபர்ஸ்ட். மத்தப்படி... கூட தங்கச்சிகள் / தம்பிகள் பிறந்துட்டா... தட்டுல விழுகுற தோசைல இருந்து, தீபாவளி டிரஸ், டியூஷன் ஃபீஸ், காதல், கல்யாணம் வரைக்கும் இவங்க தான் கடைசியா இருப்பாங்க.

வலி!

வலி!

அவள எதிர்பார்த்து காத்திருந்த நேரத்துல பார்க்க முடியாத வலி. அவ நிச்சயமா இன்னிக்கி இந்த வழியில தான் வருவா.. அவள பார்த்துடலாம்னு மனசுக்குள்ள ஒரு பெரிய கோட்டையே இருக்கும். அது இடிஞ்சு விழுகுற வலி வார்த்தையில அடங்கிடாதது. அந்த இடத்துல இருந்து வீட்டுக்கு போகுற வரைக்கும்... ஏன் அவன் இன்னிக்கு வரல, அவளுக்கு என்ன ஆயிருக்கும்...ன்னு பதில் கிடைக்காத ஆயிரம் கேள்விகள் பிறக்கும்...

ரெண்டு லட்டு....

ரெண்டு லட்டு....

எதிர்பார்த்த நேரத்துல பார்க்க முடியாதது பெரும் வலின்னு சொன்னா.... எதிர்பாராத நேரத்துல நாம அவன்கள பார்க்குற தருணம் இருக்கே... சொர்கமும் அதுக்கு ஈடாகாதுன்னு தான் சொல்லணும். பஸ்ல, வீட்டு பக்கத்துல, தியேட்டர், பீச், பார்க், விளையாடுற இடத்துல... அந்த இடம் எதுவா வேணாலும் இருக்கலாம்.

ஆனா, அந்த தருணம்... எத்தன காசு கொடுத்தாலும் கிடைக்காது. அது, முதல் காதல்ல மட்டுமே அத்தனை சந்தோஷம் கொடுக்கும். எத்தனை பீர் குடிச்சாலும்.. நாம முத பீர் மட்டும் தான சும்மா தெறிக்கவிட்டு பொங்கவிட்டு குடிப்போம்... அதே மாதிரி தான் இந்த முதல் காதல் கொடுக்குற சந்தோசமும்.. சும்மா பொங்கி வழியும்.

ஒத்த பார்வையால...

ஒத்த பார்வையால...

லவ் பண்ணும் போது, நாம நேரம் காலம் பார்க்காமா எத்தனையோ தடவ அவங்க பின்னால செருப்பு தேய... சைக்கிள் டயரு பஞ்சராக அலைஞ்சு, திரிஞ்சிருப்போம்.... ஆனா, அவங்க நாம பார்க்குற அந்த நேரத்துல ஐ டூ ஐ காண்டாக்ட்ல பார்க்குற நொடி இருக்கே... ப்பா... ஜஸ்ட் லைக் தட் லூக்கா இருந்தாலும்... மச்சான் அது காதல் தாண்டான்னு மனசு கூவும். இந்த உலகத்த நம்ம ரெண்டு கண்ணால தான் பார்ப்போம்... ஆனா, நம்ம உலகம் அவங்க ரெண்டு கண்ணுக்குள்ள தான் இருக்கும்.

எல்லையற்றது...

எல்லையற்றது...

முதல் காதல் கொடுக்குற எல்லா விஷயமும் எல்லையற்ற ஒன்று தான். முடிவிலின்னு சொல்லுவாங்க... அது முடிவே இருக்காது...

முதல் காதல் கொடுக்குற வலி, இன்பம், சுவாரஸ்யம், காத்திருப்பு, அனுபவங்கள், தருணங்கள், நினைவுகள் எல்லாமே எல்லையற்றது. அத அவ்வளவு சீக்கிரமா மறந்திடவும் முடியாது, மறந்த மாதிரி இருந்திடவும் முடியாது.

முதல் காதல் பென்ஸில் வெச்சி பேப்பர்ல எழுதுன கிறுக்கல் இல்ல, அழிச்சுட்டு வேற எழுத. இது பாறையில செதுக்குன உருவம்... தவறோ, சரியோ... அது யாராலயும் அழிக்க முடியாது.

ஃபர்ஸ்ட் இஸ் பெஸ்ட்!

ஃபர்ஸ்ட் இஸ் பெஸ்ட்!

நாம முதல் வாங்குன கார், நாம முதல் வாழ்ந்த வீடு, நாம முதல்ல படிச்ச ஸ்கூல்.. நம்மளோட முதல் ஃபிரெண்ட், நம்ம முதல் முறையா ரயில், விமானத்துல பயணிச்சதயே மறக்க முடியாத மனதினை வைத்துக் கொண்டு, முதல் காதலை மறப்பது என்பது மனித பிறவியால் முடியாத காரியம். ஃபர்ஸ்ட் இஸ் பெஸ்ட்... முதல் காதல்... சிறப்புக்கும் சிறப்புடையது...

(குறிப்பு: இது அவரவர் காதல், மற்றும் காதலன் / காதலிகளை சார்ந்தது...)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why First Love Never Dies?

Why First Love Never Dies?
Desktop Bottom Promotion