நீங்கள் காணும் செக்ஸ் கனவுகளுக்கு இதுதான் அர்த்தமாம்... இப்போ என்ன பண்ணப்போறீங்க...

Posted By: Venkatakishnan S
Subscribe to Boldsky

பாலியல் சார்ந்தக் கனவுகள் நமக்குள் இருக்கும் பாலியல் உணர்வை வெளிப்படுத்துபவையா? ஆனால் பிராய்டு என்ன சொல்கிறார் அட! போங்கய்யா. கனவு என்பது கனவு தான். அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை என்று சப்பென்று சொல்லி அந்த கனவில் நாம் எதிர்பார்த்த த்ரில் எதுவும் இல்லை என்று போட்டு உடைத்துவிடுகிறார். ஆனால் நாம் அப்படியே விட்டுவிட முடியுமா? அவர் காலம் வேறு நம் காலம் வேறு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாலியல் உணர்வு

பாலியல் உணர்வு

நம் முன்னோர்கள் காலத்தில் பாலியல் உணர்வை தூண்ட மனிதர்களுக்கு இந்த வாய்ப்பும் வசதியும் வேறு. இப்போது அப்படியா? உள்ளங்களையில் உலகத்தை உல்டாவா புரட்டிக் கொண்டு இருக்கிறோமே! அதில் உண்மை இருக்கிறதோ இல்லை பல உஜால் குஜால் மேட்டர்களுக்கும் அதைப் பற்றிய சிந்தனைகளுக்கும் குறைவேதும் இல்லை. சரி நம் சிந்தைக்கு எட்டி சிக்கென்ற செக்ஸ் கனவுகளையும் அது சார்ந்த பலன்களையும் பார்ப்போம். பொழுது போகணும்ல பாஸு... நம்ப ஊரு சினிமா, அரசியல் செய்திகளை விட இது கிக் தானே?

முகம் தெரியாதவர்களுடன் தொடர்பு

முகம் தெரியாதவர்களுடன் தொடர்பு

முன்பனி இரவில் மூடிக் கொண்டு படுத்தாலும் முகம் தெரியாதவர்களுடன் வரும் பாலியல் கனவு பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக வருகிறதாம். அது நம்முடைய லிபிடோ நிலையை உணர்த்துவதாக சொல்லப்படுகிறது. அதென்ன லிபிடோ, அதாங்க நிறைவேறாத நம்முடைய பாலியல் ஆசைகளும், அது சார்ந்த தூண்டல்களும் தான். உங்கள் மூளையில் உறங்கி கொண்டிருந்த பாலியல் தேவைகள் ஆசைகளாக உருவெடுத்து தான் உங்களை அப்படி முகம் தெரியாதவரோடு மோகப்போர் புரிய தயார்ப்படுத்துமாம். சாரி இதுக்கு தீர்வு என்று எதுவும் இல்லை. முடிந்தால் மனதை அமைதிப்படுத்த தியானம் செய்து விட்டு உறங்கிப் பாருங்கள்.

கனவில் தோன்றும் பாலியல் அனுபவங்கள்

கனவில் தோன்றும் பாலியல் அனுபவங்கள்

கனவுனாலே நடக்காத விஷங்களை காண்பது தான் போலிருக்கிறது. பொதுவாக கனவுகளில் வரும் பாலியல் அனுபவங்கள் நான் அதுவரை அனுபவிக்காத அல்லது அனுபவிக்க நினைக்கின்ற அனுபவங்களைத் தான் நமக்கும் இரவில் ஃபிலிம் காட்டிவிட்டு போய்விடுகிறது. புது புது டெக்னிக்குகளை புட்டு புட்டு வைத்து விட்டு போகும் போலத் தெரிகிறது. அதற்காக கண்ட இடத்தில் கைவைத்து புத்தூர் கட்டு போட்டு கொள்ளாதீர்கள். மணமானவர்கள் தங்கள் துணையோடு மனம் விட்டு பேசி புது, புது வித்தைகளை காட்டி புத்துணர்ச்சியோடு அனுபவித்துப் பாருங்கள். அப்படியானால் இப்படி பட்ட கனவுகள் குறைய வாய்ப்பு இருக்கிறது.

ரொமான்டிக் சீன் கனவு

ரொமான்டிக் சீன் கனவு

இதுவும் பாலியல் சார்ந்தக் கனவு தான் என்றாலும் நீங்கள் முழித்தவுடன் உங்களுக்கு பாலியல் நினைவுகள் எதுவும் இருக்காதாம். அதாவது அதற்கு முந்தையை பிந்தைய நினைவுகள் மட்டும் நினைவுக்குள் வந்து போகுமாம். அதாவது உங்கள் ஜோடியோடு நீங்கள் பீச்சில் நடப்பது போன்றோ, அல்லது காதல் ரசம் சொட்ட சொட்ட வசனங்கள் பேசுவது போலவோ அல்லது அவளோடு தனியாக ஹோட்டலில் கேண்டில் டின்னர் சாப்பிடுவது போலவோ பல்வேறு காட்சிகள் திரைக்கதை போல் கனவில் தோன்றுமாம்.

அன்பின் ஏக்கம்

அன்பின் ஏக்கம்

பாலியல் மோகக்கனவுகளும் கூட ஒரு வகை அன்பிற்கான ஏக்கம் போலத்தான் தெரிகிறது. காமத்தை தாண்டி காதலர்கள் தங்களுக்குள் உள்ள நெருக்கத்தை தாங்களோ அல்லது புறச்சூழல்கள் மூலமோ ஏற்படுத்திக் கொண்டால் இந்த வகை கனவை தவிர்க்க வாய்ப்பு இருக்கிறது.

பழைய துணையோடு பாலியல் கனவுகள்

பழைய துணையோடு பாலியல் கனவுகள்

லைஃப்ல இக்கரைக்கு அக்கரை பச்சை தானே. ஒண்ண விட இன்னொனு பெட்டர் போல் தோன்றினாலும். இது கொஞ்சம் விவகாரமான கனவு தான். அதாவது என்ன தான் பழைய பார்ட்னரோடு பிரேக் அப் ஆகி புது துணையோடு நீங்கள் காதல் வாழ்க்கையை புதுப்பித்துக் கொண்டாலும். இந்த கனவு அந்த பாழாய்போன பழைய பார்ட்னரோடு தான் வந்து தொலைக்குமாம். இப்போது உள்ள புது அனுபவங்களில் புது பார்ட்னரை தூக்கிவிட்டு பழைய பார்ட்னரை அதில் பொருத்தி பார்த்து உங்களை கனவிலும் கடுப்பேத்துமாம். இப்படிபட்ட கனவுகள் பழைய காயங்களுக்கு மருந்து போடுகிறதா அல்லது பழைய காயத்தை மேலும் புண்ணாக்கி விட்டு போகிறதா என்பதே புரியாத புதிர்.

பழைய காதலி பஞ்சாயத்து

பழைய காதலி பஞ்சாயத்து

ஒரு வேளை நீங்க நிஜத்தில் அவரை பாடாய் படுத்தி போதும்டா சாமினு அவரு உங்களை விட்டு ஓடிப்போயிருந்தா தான் இந்த பிரச்சனையா என்று தெரியவில்லை. ஆனாலும் அந்த ஒப்பீட்டு கனவை ஒழிக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஏதாவது பைசல் செய்யாமல் பழைய பஞ்சாயத்து இருந்தாலும் போன், இமெயில் மூலம் பேசி பைசல் செய்து விடுங்கள். பாவம் இல்லையேல் பேசாமல் புத்தம் சரணம் கச்சாமி என்று கண்ணை மூடிக்கொண்டு உச்சரித்தபடி உறங்கப் பழகுங்கள். தப்பிக்க சான்ஸ் இருக்கிறது.

ஆசைகளின் கலவை

ஆசைகளின் கலவை

பொதுவா இப்படி பல வகை பாலியல் சார்ந்த கனவுகளை பார்க்கும் போது நம் ஆழ்மனதில் தேங்கியுள்ள ஆசைகள், நிறைவேறாத தேவைகள், எதிர்பார்த்து ஏமாந்து போன தருணங்கள், தீர்வு தெரியாத பிரச்சனைகள், அன்பு, காதல் சார்ந்த தேடல்களின் அடிப்படையில் தான் தோன்றுகின்றன. உங்களுக்கு வரும் கனவைப் பொருத்து நீங்களே உங்கள் தேவையை அறிந்து கொள்ள முயலுங்கள். ஒவ்வொரு மனிதர்களும் தனித்தனிப் பிறவி, தனித்தனி அனுபவங்கள் அதுபோலத்தான் கனவும். .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: relationship
English summary

What Your Sexual Dreams Can Tell You

Sexual dreams are obviously a good gauge of your overall libido level, and while Freud said sometimes a cigar is just a cigar, he also obsessed in his semi-repressive Victorian times that sex dreams were always about something more.
Story first published: Thursday, March 22, 2018, 17:50 [IST]