For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலி, என் நண்பர்களிடம் மோசமாக நடந்துக் கொள்கிறார் - இரகசிய டைரி!

காதலி, என் நண்பர்களுடன் மோசமாக நடந்துக் கொள்கிறார் - இரகசிய டைரி!

By Staff
|

ஒரு முறை, இரண்டு முறை அல்ல. இது ஒரு தொடர் கதையாகவே நடந்து வருகிறது. பொதுவாகவே காதலி, மனைவிகளுக்கு தங்கள் துணையின் நண்பர்களை பிடிக்காது என்பதை நேரில் இருந்து சினிமா வரை கண்டிருக்கிறோம். பிடிக்காமல் போனாலும் கூட அவர்கள் எதிரில் கொஞ்சம் மரியாதையாக தான் நடந்துக் கொள்வார்கள்.

Secret Confession: My Girlfriend Not Behaving Nicely With My Friends.

ஆனால், என் காதலி அப்படி அல்ல... என் முன்னிலையிலேயே என் நண்பர்களிடம் மோசமாக நடந்துக் கொள்கிறாள். வெறுப்பை வெளிப்படுத்துவது, மரியாதை அளிக்காமல் போவது, அவமானப்படுவது என எண்ணற்ற காரியங்களில் ஈடுப்பட்டிருக்கிறாள். என் வாழ்வில் என் நண்பர்களின் பங்கு முக்கியமானது. அவர்கள் எனக்கு பல தருணங்களில் உதவியுள்ளனர்.

இப்போது காதலிக்காக நட்பை கைவிடுவதா? நட்புக்காக காதலை கைவிடுவதா? என்ற தருணத்தில் நான் பரிதவித்து வருகிறேன். என் மனம் நட்பு தான் முக்கியம் என்கிறது. ஏனெனில், தொடர்ந்து என் காதலி தான் அவர்களுடன் மோசமாக நடந்து வருகிறாள். ஆனால், இதை காரணம் காட்டி காதலியை பிரிவது சரியா? என்ற கவலையும் என்னுள் எழுகிறது. நான் என்ன செய்ய?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணம் கேட்டீர்களா?

காரணம் கேட்டீர்களா?

எந்த ஒரு விஷயமும் காரணங்கள் இன்றி நடப்பது இல்லை. ஒருவேளை உங்கள் நண்பர்களால், உங்களுக்கு தெரியாமல் உங்கள் காதலி ஏதேனும் விஷயத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறாரா? அல்லது எப்போதாவது தெரியாமல் செய்த கேலி அல்லது வேறு ஏதேனும் காரியம் அவர் மனதில் இன்றளவும் மறையாமல் இருக்கிறதா? என்பது குறித்து கேட்டறிந்துக் கொள்ள நீங்கள் முயற்சி செய்தீர்களா?

தவறான பழக்கம்..

தவறான பழக்கம்..

உங்கள் நண்பர்கள் மூலமாக உங்களுக்கு ஏதேனும் தவறான பழக்கம் ஏதாவது இருக்கிறதா? நண்பர்களால் குடி பழக்கம், நண்பர்களுடன் வேறு விதமான தவறுகள் செய்தது என... உங்கள் காதலிக்கு தெரியாது என்று நினைத்து நீங்கள் செய்து வரும் தவறு ஏதாவது அவருக்கு தெரிந்திருந்தால்.. அதற்கு காரணம் உங்கள் நண்பர்கள என்று அவர் கருதி வந்தாலும் கூட... உங்கள் மீது காட்ட முடியாத கோபத்தை... உங்கள் நண்பர்கள் மீது காட்டி... அவர்களுடன் சேர்ந்து நீங்கள் இனிமேல் அந்த தவறை செய்யாமல் தடுக்க அவர் முற்படலாம்.

முன் அனுபவம்...

முன் அனுபவம்...

உங்கள் காதலி இதற்கு முன் வேறு யாராவது ஆணை காதலித்திருக்கிறாரா? ஒருவேளை அப்படியான காதல் உறவு ஏதாவது இருந்திருந்தால்... அந்த உறவின் போது எக்ஸ் காதலனின் நண்பர்கள் மூலம் அவர் காயப்பட்டிருந்தால் கூட அதன் தாக்கத்தால்... எல்லாருமே இப்படி தான் என்ற எண்ணம் கொண்டு உங்கள் நண்பர்கள் மீது வீண் கோபத்தை வெளிப்படுத்த வாய்ப்புகள் உண்டு. ஒருவேளை உங்கள் காதலி உங்களிடம் இதை மறைத்திருந்தால்.. அவருக்கு தெரியாமல் அந்த பழைய நாட்கள் குறித்து நீங்கள் அறிந்து... அந்த தாக்கத்தில் அவரை வெளி கொண்டு வர முயற்சி செய்யுங்கள்.

மனநிலை!

மனநிலை!

சில நேரங்களில் பெண்கள் ஏன் கோபப்படுகிறார்கள் என்று அவர்களுக்கு தெரியாது. பெண்களுக்கு மூட் ஸ்விங் ஏற்படும் போது அவர்களுக்கு வெளிப்படும் கோபங்கள் பல சமயங்களில் காரணமற்றதாக இருக்கும். ஆனால், அது பொதுவாக அனைவர் மீதும் வெளிப்படும்.

இங்கே... உங்கள் விஷயத்தில் உங்கள் நண்பர்கள் மீது மட்டும் கோபம் வெளிப்படுவதால்... மூட் ஸ்விங் என்பதை தாண்டி.. உங்கள் காதலியின் மனதில் ஏற்பட்டிற்கும் மனநல சமநிலை இன்மை ஏதோ ஒன்று குறிப்பாக உங்கள் நண்பர்கள் மீது கோபப்பட வைக்கிறது. எனவே, அவர் மன ரீதியாக ஆரோக்கியமாக தான் இருக்கிறாரா என்பதை முதலில் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

பிரிவு தீர்வல்ல...

பிரிவு தீர்வல்ல...

உங்கள் நண்பர்கள் மீது கோபப்படுகிறார் என்பதற்காக உங்கள் காதலியை நீங்கள் பிரிவது சரியான தீர்வல்ல. ஒருவரை ஒருவர் காதலிக்கும் போது... அவர்கள் இருவருக்குள் ஏதேனும் பிரச்சனை என்ற காரணம் காட்டி பிரிவது வேறு. இங்கே, உங்கள் காதலிக்கும் உங்களுக்கும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை.

ஏதோ ஒரு தெரியாத, அறியப்படாத காரணத்தால் அவருக்கு உங்கள் நண்பர்கள் மீது கோபப்படுகிறது. எனவே, இதை காரணம் காட்டி உங்கள் காதலியை பிரிய முயற்சிக்க வேண்டாம். இது பின்னாளில் உங்கள் நண்பர்கள் மீது அவர் தீராக பகை வளர்த்துக் கொள்ள காரணமாக அமையலாம்.

தனித்தனியாக...

தனித்தனியாக...

நீங்கள் காதலி மற்றும் நண்பர்கள், நண்பர்களின் காதலிகளுடன் ஒன்றாகே வெளியே செல்லும் பழக்கம் இருப்பவராக தெரிகிறது. ஒருவேளை அனைவரும் கூட்டமாக வெளியே செல்வதை விரும்பாமல் கூட உங்கள் காதலி தனது கோபத்தை வெளிப்படுத்தலாம். அல்லது உங்கள் காதலிக்கு உங்கள் நண்பர்கள் அனைவரின் மீதும் கோபம் வெளிப்படுகிறதா? அல்லது குறிப்பட்ட ஒருசிலர் மீது கோபம் வெளிப்படுகிறதா என்பதை முதலில் கண்டறியுங்கள்.

யார்?

யார்?

அடுத்த சில முறை வெளியே செல்ல திட்டமிடும் போதும், உங்கள் நண்பர்களில் ஒருசிலரை மட்டும் உடன் ஜோடியாக அழைத்து செல்லுங்கள். அப்போது உங்கள் காதலியிடம் இருந்து வெளிப்படும் உணர்வை வைத்து அவரது கோபம் உங்கள் நண்பர்கள் அனைவரின் மீதும் இருக்கிறதா? அல்ல குறிப்பட்ட ஒருசிலர் மீது இருக்கிறதா என்பதை அறிந்துக் கொள்ளலாம். இதனால், ஒருவேளை உங்கள் நண்பர்கள் மீதும் தவறு இருக்கலாம் என்பதை அறிய வாய்ப்புள்ளது.

தனிமை!

தனிமை!

அல்லது உங்கள் காதலி தனிமையை விரும்பும் நபராக இருக்கலாம். உங்களுடன் தனியாக நேரம் செலவழிக்க கூட விரும்பலாம். அத்தகைய நேரத்தில் நீங்கள் உங்கள் நண்பர்களையும் உடன் அழைத்து வந்தால்.. அதன் காரணத்தாலும் அவருக்கு கோபம் உச்சந்தலைக்கு ஏற வாய்ப்புகள் இருக்கிறது.

எனவே, அடுத்த சில முறை காதலியுடன் தனியே வெளியே சென்று பாருங்கள். அப்போது அவரிடம் வெளிப்படும் மாற்றம் மற்றும் உணர்வை வைத்து... அவர் உங்களுடன் தனிமையில் நேரம் செவழிக்க தான் விரும்புகிறார் என்பதை அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secret Confession: My Girlfriend Not Behaving Nicely With My Friends.

Secret Confession: My Girlfriend Behaves Badly with my friends. I want to break up with her. Is it a right reason to do?
Desktop Bottom Promotion