சினிமாவுல வாய்ப்புத் தேடுற பையன நம்பி எப்டி கல்யாணம் பண்றது? My story #199

Posted By:
Subscribe to Boldsky

பாலிவுட்டில் மிகப் பிரபலமான கௌரி சிப்பர் பற்றி தெரியுமா? அதைவிட இவரது தற்போதைய பெயரைச் சொன்னால் எளிதாக கண்டுபிடிக்கலாம். கௌரி கான்.... பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மனைவி தான் இந்த கௌரி கான்.

ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட்டின் இணை நிறுவனராக இருக்கிறார். அதோடு இண்டீரியர் டிசைனர் மற்றும் ஃபேஷன் மாடலாகவும் இருக்கிறார். இதுவரை பல விளம்பரங்களுக்கு மாடலாக நடித்திருக்கிறார். ஷாருக்கான் மற்றும் கௌரிக்கு இடையில் மிக நீண்ட கால காதல் இருக்கிறது. காதல் வாழ்க்கை துவங்கிய இடம் மற்றும் அது கடந்து திருமணத்தை நோக்கிச் சென்றது மிகவும் சுவாரஸ்யமானதும் கூட.

திரையில் மட்டுமே லவ்வர் பாயாக வலம் வந்த ஷாருக்கான் நிஜவாழ்க்கையில் எவ்வளவு ரொமேண்ட்டிக்கான ஆள் என்று பாருங்க!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

நண்பனின் ப்ர்தடே பார்ட்டி அங்கே தான் கௌரியை முதன் முதலில் சந்திக்கிறார். 1984 ஆம் ஆண்டு நடந்த இந்த சந்திப்பின் போது கௌரி இன்னொரு ஆணுடன் இணைந்து நடனமாடிக் கொண்டிருக்கிறார். கௌரியை பார்த்ததுமே பிடித்துவிட்டாலும், அருகில் சென்று பேசவில்லை.

Image Courtesy

#2

#2

தயங்கிக் கொண்டே நீண்ட நின்றிருந்தார். எதார்த்தமாக இருவரும் சந்தித்துக் கொள்ள நடனமாடலாமா என்று கௌரியிடம் கேட்டுவிட்டார் ஷாருக். இல்லை... என்று கௌரி மறுத்துவிட ஷாருக் சற்றே தடுமாறித்தான் போனார்.

Image Courtesy

#3

#3

விருப்பமில்லை என்று சொன்னதும் ஒதுங்கி நின்றிருந்த ஷாருக்கிற்கு அங்கேயே காத்திருந்த கௌரியைப் பார்த்து இன்னொரு முறை கேட்டுப்பார்க்கலாமா என்று தோன்றியிருக்கிறது, எதாவது நினைத்துக் கொண்டால்? பல யோசனைகளுடன் கௌரியைப் பார்ப்பதும் கௌரி பார்க்கும் போது வேறு எங்கோ பார்ப்பது போல நிற்பதுமாய் தவிப்புடன் நின்றிருக்கிறார்.

Image Courtesy

#4

#4

ஷாருக் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த கௌரி, வெயிட்டிங் ஃபார் மை பாய் ஃபிரண்ட் என்றிருக்கிறார். சுக்குநூறாகிவிட்டார் ஷாருக், அவரது கனவு முதல் காதல் ஆரம்பித்த வேகத்திலேயே முடியும் என்று யார் தான் எதிர்ப்பார்த்திருப்பார்கள்.

Image Courtesy

#5

#5

காதலை மறந்து சற்றே தயக்கத்துடன் பேச ஆரம்பித்து நண்பர்கள் ஆகியிருக்கிறார்கள். ஷாருக்கானின் ஸ்டைல்,அவரது தன்னம்பிக்கையை பார்த்து வியந்து கௌரி ஷாருக்கான் மீது காதல் வயப்பட்டிருக்கிறார். என்ன தான் நட்பாக பழகினாலும் கௌரியை முதலில் காதலிக்க ஆரம்பித்தவர் ஆயிற்றே... பிரச்சனை துவங்கியது.

Image Courtesy

#6

#6

கௌரி மீது அதிக பொசசிவ்னெஸ் கொள்ள ஆரம்பித்தார். கௌரி தனக்கு மட்டுமே என்ற எண்ணம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது, கௌரிக்கு ஏற்கனவே ஒரு பாய்ஃபிரண்ட் இருப்பதை யோசிக்கவேயில்லை ஷாருக்.

தலைமுடியை விரித்து போடாதே, பிற ஆண்களுடன் பேசாதே என்று எக்கச்சக்க கட்டுபாடுகளை விதிக்க ஆரம்பித்தார்.

Image Courtesy

#7

#7

நிலைமை விபரீதமாவதை உணர்ந்த கௌரி இந்த உறவிலிருந்து குறிப்பாக ஷாருக்கிடமிருந்து விலக நினைத்தார். அன்றைக்கு கௌரியின் பிறந்தநாள், ஷாருக்கானுடன் மிகவும் உற்சாகமாக கொண்டாடிய கௌரி அன்று இரவே யாரிடமும் சொல்லாமல் மும்பையை விட்டே கிளம்பினார்.

ஷாருக்கிடம் இதைப் பற்றி மூச்சு விடவில்லை.

Image Courtesy

#8

#8

கௌரி காணவில்லை, நண்பர்கள் மூலமாக அவர் ஊரை விட்டு சென்று விட்டார் என்று தெரிந்தது. நிலைகுலைந்து போனார் ஷாருக், சிறிய வயதிலிருந்தே ஷாருக் அம்மா செல்லம். கௌரியைப் பற்றியும், கௌரியை தான் எவ்வளவு காதலிக்கிறார் என்பதையும் அம்மாவிடம் பகிர்ந்து வேதனைப்பட்டிருக்கிறார்.

Image Courtesy

#9

#9

மகனின் மனதை அறிந்தவர் சும்மா இருப்பாரா? கௌரியை தேடிப்போ என்று வழியனுப்பி வைத்ததோடு செலவுக்கு பத்தாயிரம் ரூபாய் பணமும் கொடுத்தனுப்பினார். கௌரி இருக்கும் ஊரில் யாரையும் தெரியாது, கௌரி எங்கே இருக்கிறார் என்பது கூட ஷாருக்கிற்கு தெரியவில்லை. ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் அம்மா கொடுத்த பணத்துடனும் சில நண்பர்களுடன் கௌரியைத் தேடி கிளம்பிவிட்டார்.

Image Courtesy

#10

#10

நகர் முழுவதும் தேடி அலைகிறார்கள். அங்கே யாரைப் பார்த்தாலும் கௌரியைப் பார்த்தது போலவே இருக்கிறது, கிட்டதட்ட பைத்தியம் பிடிக்காத குறை, தேடி அலைந்து அவ்வளவு தான் கௌரி இனி கிடைக்கமாட்டார் என்ற முடிவுக்கே வந்துவிட்டிருந்தார். மிகுந்த வருத்தத்துடன் கௌரி இல்லாமல் இந்த ஊரை விட்டுச் செல்வதா அல்லது இன்னும் சிறிது காலம் தேடலாமா என்ற யோசனையுடன் கடற்கரையில் உட்கார்ந்திருந்தார் ஷாருக்.

Image Courtesy

#11

#11

ஆட்கள் நடமாட்டம் நிறைந்த பகுதி, தூரத்தெரியும் கடலிலிருந்து பொங்கி வரும் அலையைப் போல கௌரி எதிரில் வந்து விட மாட்டாளா என்ற ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு பெண் வந்து கொண்டிருக்கிறாள், பார்க்க கௌரி மாதிரியே இருந்தாள். இந்த ஊருக்கு வந்ததிலிருந்து யாரைப் பார்த்தாலும் என் கௌரி போலத்தானே இருக்கிறது, திரும்பிக் கொண்டார்.

Image Courtesy

#12

#12

நேராக வந்த பெண் கடந்து செல்லாமல் ஷாருக்கான் எதிரிலேயே நிற்கிறாள். ஷாருக்கின் கண்களையே சில விநாடி உற்றுப் பார்த்தவளின் கண்கள் கலங்கியது. ஷாருக்கான் முன்னால் நின்று கொண்டிருப்பது கௌரி தான். ஆம், உண்மையில் அங்கே கௌரியே நின்றிருந்தார். தனக்காக, தன்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கிறானா என்பதை கௌரியால் நினைத்து கூட பார்கக் முடியவில்லை

#13

#13

இப்போது நாம் பார்த்துக் கொண்டிருப்பது உண்மையில் கௌரி தானா? என்று சுயநினைவுக்கு வந்த ஷாருக்கும் அழ ஆரம்பித்துவிட்டார். அப்போது தான் இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த அன்பு தெரியவந்தது. காதலை சொல்லிக் கொள்ள வில்லை என்றாலும் இவ்வளவு அன்பு ஒருவருக்கொருவர் வைத்திருப்பதை அப்போது தான் உணர்கிறார்கள்.

அந்த நொடியில் தான், இருவரும் இனி சேர்ந்து வாழ வேண்டும்.... திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள்.

 #14

#14

அப்போ பாய் ஃபிரண்ட்? ஷாருக் கேட்டேவிட்டார்..

அப்போ என் பாய் ஃபிரண்டுக்காக வெயிட் பண்ணல எங்க அண்ணனுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன், அப்போ யாருன்னே தெரியாத உங்க கூட டான்ஸ் ஆட இஷ்டமில்ல அதான் என்ன சொல்றதுன்னு தெரியாம பாய் ஃபிரண்டுன்னு சொல்லிட்டேன் என்று சொல்ல.... அதற்கு ஷாருக் சொன்னது தான் எபிக்

இப்போ நானும் உனக்கு சகோதரனா?? .... என்று சொல்லி சிரித்தாராம்.

Image Courtesy

#15

#15

ஷாருக் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்,கௌரி இந்து பார்ப்பனர்கள். கௌரியின் அப்பா வீட்டிற்குள்ளேயே மினி கோவிலை கட்டி பூஜை செய்யும் அளவிற்கு தீவிர பக்தி கொண்டவர், பல சந்தர்ப்பங்களை கடந்து திருமணம் வரைக்கும் வந்தாலும் இங்கே சாதியும் மதமும் தான் திருமணத்தை நிர்ணயிக்கிற மிகப்பெரிய இடத்தை வகிக்கிறது.

Image Courtesy

#16

#16

இன்னும் திருமணம் செய்து கொள்ளும் வயது வரவில்லை, நிலையான வருமானம் இல்லை நீங்கள் இருவருமே வாழ்க்கை குறித்த புரிதல் இல்லாமல் பேசுகிறீர்கள் இதெல்லாம் ஒத்து வராது என்று எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது.

அதுவும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் ஒரு இஸ்லாமிய பையனையா திருமணம் செய்து கொள்ளப்போகிறாய் என்றும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

Image Courtesy

#17

#17

அதன் பிறகு ஐந்து வருடங்கள் பெரும் போராட்டங்களுடன் காதலை தொடர்ந்திருக்கிறார்கள்.

தொடர்ந்து பெற்றோர்களின் அனுமதிக்காக காத்திருந்து அனுமதி வாங்கினார்கள். இந்து முறைப்படி 1991 ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது.

Image Courtesy

#18

#18

மிகுந்த உற்சாகமான அதே சமயம் சந்தோசமான திருமண வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஆர்யன்,சுஹானா,அப்ரம் ஆகிய மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் மூன்றாவது குழந்தை அப்ரம் வாடகைத்தாய் மூலமாக பிறந்த குழந்தையாகும்.

Image Courtesy

#19

#19

வெவ்வேறு மதத்தை சேர்ந்தவராக இருக்கிறார்கள் அவர்களுக்கு இடையில் இது குறித்த பிரச்சனை எழக்கூடும் என்று சொல்லப்பட்டது, ஆனால் அப்படி எண்ணியவர்களின் எண்ணம் தான் தோற்றுப்போனது.

ஒருவருக்கொருவர் மதிக்க கற்றுக் கொண்டார்கள். இரண்டு மதங்களையும் வீட்டில் வழிபட,கடைபிடிக்க அனுமதியிருந்தது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Romantic Love Story Of Bollywood Supper Star Sharuk khan

Romantic Love Story Of Bollywood Supper Star Sharuk khan
Story first published: Saturday, March 10, 2018, 11:47 [IST]