For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பியார், பிரேமா, காதல் படத்துல இதெல்லாம் கவனிச்சிங்களா?

  |

  பிக் பாஸ் புகழ் ரைசா மற்றும் ஹரிஷ் கல்யான் நடிப்பில், இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் இளன் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுகள் பெற்று திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் பியார், பிரேமா, காதல்.

  இதை, ஓகே கண்மணியின் வெர்ஷன் 2, அல்லது ஸ்டேஜ் 2 என்று கூட சொல்லலாம். இதனால், இது ஓகே கண்மணியின் தழுவல் என்று கூறிவிட முடியாது. இதுவொரு தற்போதைய நவயுக கலாச்சார காதலின் பிரதிபலிப்பு.

  Relationship Tips From The Movie Pyar Prema Kadhal

  இன்றைய காலக்கட்டத்தில் காதல், திருமணம், குழந்தைகள், அவர்களை வளர்ப்பது, வாழ்க்கையை வாழ்வதற்கு பதிலாக பிழைக்க ஒரு வேலை தேடிக் கொண்டு பணத்தின் பின்னே ஹச் டாக் போல ஓடுவதே மனிதரின் வாழ்க்கையாக இருக்கிறது.

  ஆனால், இதை எல்லாம் தாண்டி.. காதல், கனவு, இலட்சியம் என்ற கண்ணோட்டம் கொண்ட ஒரு பெண்ணுக்கும். கனவுகள் எதுவும் ஒன்றி, அம்மாவை நல்லா வெச்சு பார்த்துக்கணும் என்ற கடமையை கனவாக கண்டு வாழும் இளைஞனுக்கும் மத்தியில் நடக்கும் காதலே பியார் பிரேமா, காதல்.

  காதல், லிவ்-இன், திருமணத்திற்கு முன்பே செக்ஸ், அனாவசியமான சண்டைகள், பெற்றோர் காரணத்தால் பிரிவு என இந்த தலைமுறைக்கு பல பாடங்களை கற்பிக்கிறது ஸ்ரீ - சிந்துஜாவின் பியார், பிரேமா, காதல்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  கனவு!

  கனவு!

  நம்மில் பலரும் தொலைத்துவிட்டு தேடுவதற்கு கூட முயற்சிக்காமல் மந்தமாகி போன ஒரு விலைமதிப்பற்ற பொருள் தான் கனவு. பள்ளியில் நல்ல மார்க் எடுத்த காரணத்தால் கனவுகளை தொலைத்தவர்கள் சிலர், நல்ல மதிப்பெண் எடுக்க தவறியதால் தங்கள் கனவுகளை தொலைத்தவர்கள் சிலர். தங்கள் கனவு என்னவென்றே அறியாமல் போனவர்கள் பலர்.

  நிம்மதி?

  நிம்மதி?

  படித்த படிப்புக்கு ஏற்ற வேலை செய்யாமல், கிடைத்த வேலை செய்துக் கொண்டு கனவுகளை தொலைத்தவர்கள் சிலர். அப்பா அம்மா ஆசைப்பட்டனர் என்று என்ஜினியரிங் படித்துவிட்டு தங்கள் கனவுகளை எட்டிப்பிடிக்க அயராது உழைத்துக் கொண்டிருப்பவர்கள் சிலர். கனவுகள் இல்லாத வாழ்க்கை, உரம் இல்லாத விளைநிலம் போன்றது. நீங்கள் எத்தனை காலம் உழைத்தாலும், அதன் ரிசல்ட் உங்களுக்கு மன நிம்மதியை அளிக்காது.

  கவலை!

  கவலை!

  நாம் கனவு கண்ட வேலையில், தொழிலில் சில ஆயுரங்கள் கிடைத்தாலும் அது மனதிற்கு நிறைவாக இருக்கும். ஆனால், அதை விடுத்தது பல இலட்சங்கள் தரும் வேலையை / தொழிலை செய்தாலுமே கூட... வாழ்வில் ஒரு கட்டத்தில் வீடு, வாசல், கார், தோட்டம் என அனைத்தும் நம் பெயரில் நிலைத்திருக்கும்... ஆனால்.. மனதில் நிம்மதி மட்டும் இருக்காது.. காரணம்... கனவு... நாம் கண்ட கனவு நிறைவேறாத வலி பத்து மாதம் சுமந்த கரு இறந்தே பிறந்தால் தரும் வலிக்கு சமமானது.

  செக்ஸ்!

  செக்ஸ்!

  கனவுக்கு அடுத்ததாக இன்றிய தலைமுறையில் பெரிதாக மதிப்பு குறைந்து காணப்படுவது கற்பும், செக்ஸும். நம் ஊரில் அப்படி எல்லாம் இல்லை என்று கூறிவிட முடியாது. வாட்ஸ்-அப்பில் ஊர்வலம் வந்தவை சிலவன என்றால்... எத்தனயோ மின்னஞ்சல், க்ளவுட்களில் சேமித்து வைக்கப்பட்டிருப்பவை ஏராளம். காதலிக்கும் போதே, காதல் என்ற பெயரில் சிலர் கூடி விடுகிறார்கள். அதன் பிறகு சிறுது காலத்தில் பிரிந்து விடுகிறார்கள். குறைந்த பட்சம் நாம் படித்த கல்லூரியிலேயே இப்படியான உறவில் இருந்த சிலரை நாம் கடந்து வந்திருப்போம்.

  எதற்கானது...

  எதற்கானது...

  சில உறவுகளில் சில சூழல்களில் கட்டுப்பாடு இழப்பதால் கலவுதலில் ஈடுபடுவோர் உண்டு. சிலர் தங்கள் காதலை எடுத்த நிலைக்கு எடுத்து செல்ல, கலவுதலில் ஈடுபடுவது உண்டு. காதலில் இருந்து கலவுதல் பிறக்கலாம். அது இயல்பு, இயற்கை. ஆனால், கலவுதலுக்காக காதல் பிறக்க கூடாது. அது விஷம். உறவை நிச்சயம் அழித்துவிடும்.

  லிவ்-இன்

  லிவ்-இன்

  காதல் சரிப்பட்டு வருமா என்பதை அறிந்துக் கொள்ள டேட்டிங், திருமணம் சரிப்பட்டு வருமா என்பதை அறிந்து கொள்ள லிவ்-இன். அன்று நிச்சயம் செய்வதற்கு முன் பெண் பார்க்க செல்லும் இடத்தில் பத்து நிமிடம் ஆணும், பெண்ணும் பேசிக் கொள்வார்கள். அவர்கள் உறவு நீடித்து நிலைத்திருந்தது. ஆனால், அவர்கள் வாழ்நாள் முழுக்க சந்தோசமாக தான் இருந்தார்களா என்பது அவரவரருக்கு மட்டுமே வெளிச்சம்.

  சரியா, தவறா?

  சரியா, தவறா?

  இங்கே இந்த துரிதமான வாழ்க்கையில், ஆடைகளை துணையை தேர்வு செய்ய நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறார்கள். மும்பை, பெங்களூர், சென்னை போன்ற பெரு நகரங்களில் நிலைக் கொண்டிருக்கும் பெரிய குடியிருப்புகளில் லிவ்-இன் ஜோடிகள் அதிகரிக்க துவங்கியிருப்பதை நாமே கண்கூட பார்த்திருக்கிறோம்.

  லிவ்-இன் சரியா, தவறா? என்பதை தாண்டி.. லிவ்-இன் எதற்கானது, அது உறவை வலிமையாக, ஆரோக்கியமாக அமைத்துக் கொள்ள ஜோடிகள் பயன்படுத்துக் கொள்கிறார்களா? அல்ல தங்கள் சிற்றின்ப ஆசைகளை தீர்த்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்கிறார்களா? என்பதை அறிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.

  எது சரி?

  எது சரி?

  அப்பா, அம்மா பார்த்து வைத்த மணமகன், மணமகளை திருமணம் செய்துக் கொள்வது சரியா? அல்லது காதலித்த பெண்ணுடன் லிவ்-இன் உறவில் உறவில் இருப்பது சரியா? என்பதை சார்ந்தது அல்ல பியார் பிரேமா காதல்... நமக்கான கனவுகள் முதன்மையானது. திருமணம் என்பது ஒரு மனங்கள் ஒன்றிணைய நடக்க வேண்டுமே தவிர, இரு குடும்பங்கள் ஒன்றிணையவோ, பெற்றோர் பேரன், பேத்தியுடன் விளையாடவோ நடக்க கூடாது.

  புரிதல்!

  புரிதல்!

  இல்லறம் என்பது ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்ட பிறகு, ஒன்றாக சேர்ந்து வாழ்வது. அது தாலி கட்டி இனைவாத இருக்கலாம், மோதிரம் மாற்றிக் கொண்டு இணைவதாக இருக்கலாம், கையெழுத்திட்டு இணைவதாக இருக்கலாம். உறுதி மொழி எடுத்து இணைவதாக இருக்கலாம். அல்லது, இரு மனங்களின் இணைதலினால், அவர்கள் தங்கள் காதல் உறவு மீது வைத்திருக்கும் நம்பிக்கையால் இணைவதாக கூட இருக்கலாம்.

  இங்கே, திருமணமா, லிவ்-இன்னா என்பதல்ல முக்கியம்... சேர்ந்து வாழ போகும் அந்த இருவரும் ஒருவரை ஒருவர் முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறார்களா என்பதே முக்கியம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Relationship Tips From The Movie Pyar Prema Kadhal

  Relationship Tips ,Pyar Prema Kadhal, love, relationship, marriage, காதல், உறவுகள், திருமணம்,
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more