For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இன்னும் எத்தனை பேர காதலிக்க போறீங்க சார் நீங்க... எங்கயோ மச்சம் போல இவருக்கு!

  By Staff
  |

  ரன்பீர் கபூர் இந்தி சினிமாவின் பழம்பெரும் நடிகரான ரிஷி கபூர் மற்றும் நடிகை நீது கபூருக்கு பிறந்தவர். ரிஷி கபூர் இப்போதும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரும், நடிகர் அமிதாபும் நடித்த 102 நாட் அவுட் என்ற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

  காதல் உறவுகளில் கொஞ்சம் தெளிவற்ற நிலையில் தான் இருந்தார் ரன்பீர் கபூர். ஏறத்தாழ தனது 12வது வயதில் இருந்து காதலித்து வருகிறார் ரன்பீர் கபூர். ஆனால், ஒரே பெண்ணையா என்றெல்லாம் யாரும் கேட்க கூடாது.

  தனது பெற்றோரிடம் இருந்து ஒரு உறவென்பது எத்தனை சிக்கல்களை கொண்டது என்பதை கற்றுக் கொண்டேன் என்று வெளிப்படையாக கூறி இருந்தார் ரன்பீர் கபூர். ஒரு குட்டி காதல் மன்னனான ரன்பீர் கபூர் சமீபத்தில் நடிகை ஆலியாவை டேட் செய்து வருவதாக கூறி இருக்கிறார்.

  ஆகையால்... ரன்பீரின் பிஞ்சு காதல் முதல் ஆலியா பட் வரை ஒரு சின்ன ஃபிளாஷ் பேக்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  7வது...

  7வது...

  ரன்பீர் கபூரின் காதல் பயணம் துவங்கியது ஏழாவது படிக்கும் போது. அது தான் தனது முதல் சீரியஸான காதல் என்று கூறியிருந்தார் ரன்பீர். அப்போ, அதுக்கு முன்ன எத்தனை.. என்றெல்லாம் யாரும் கேள்வி கேட்க கூடாது.

  ஆனால், அந்த ஏழாம் வகுப்பு காதல் ப்ரேக்-அப் ஆனபிறகு மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் ரன்பீர் கபூர்.

  தீபிகா படுகோனே!

  தீபிகா படுகோனே!

  2008ம் பச்னா ஏ ஹசீனோ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, தன்னுடன் ஜோடி சேர்ந்திருந்த தீபிகா படுகோனே உடன் நெருக்கமாக பழகினார் ரன்பீர் கபூர். ரன்பீர் - தீபிகா ஜோடி மீடியா கண்களில் பெரும் ஈர்ப்பை பெற்றது. அப்போது மீடியாக்களில் பெரிதும் பேசப்பட்ட காதலர்கள் இவர்கள் தான்.

  ஏறத்தாழ இருவரும் நிச்சயம் செய்துக் கொள்வார்கள் என்று எண்ணி காத்திருந்த போதுதான் ஒரே வருடத்தில் இந்த காதல் கதை முற்று பெற்றது.

  ஒப்புதல்...

  ஒப்புதல்...

  காதலில், ஒரு உறவில் எனக்கு போதிய அளவு முதிர்ச்சி இல்லை, அனுபவம் இல்லை... தூண்டுதல்களை அட்வாண்டேஜாக எடுத்துக் கொள்கிறேன்... அக்கறையற்று, உணர்ச்சியற்று சில நேரம் நடந்துக் கொள்கிறேன் என்று தானாக முன் வந்து தனது காதல், உறவுகள் சார்ந்த ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார் ரன்பீர் கபூர்.

  புரளிகள்!

  புரளிகள்!

  2013ம் ஆண்டு ரன்பீர் கபூரும், கத்ரீனா கைபும் காதலிப்பதாக புரளிகள் கிளம்பின. இதை நம்பவைக்கும் படி ஸ்பெயின் சென்றிருந்த ரன்பீர், கத்ரீனா ஜோடி பிகினி உடையில் பீச்சில் உல்லாசமாக இருக்கும் படங்கள் இணையங்களில் வெளியாகி காட்டுத்தீ போல பரவின.

  சரி! இவர்கள் இருவரும் நிஜமாகவே காதலிக்கிறார்கள் என இந்தி சினிமா உலகம் நம்பியது. இவர்கள் இருவருக்கும் நடுவே ஏதோ இருக்கிறது என்று அஜாப் பிரேம் கி கஸாப் கஹானி (2009) என்ற படத்தின் படப்பிடிப்பின் போதிருந்த கூறி வந்தனர்.

  மீண்டும் ப்ரேக்-அப்

  மீண்டும் ப்ரேக்-அப்

  ஆரம்பத்தில் கத்ரீனா கைபுடனான உறவு குறித்து வாய் திறக்காத ரன்பீர் கபூர் 2015ம் ஆண்டு நாங்கள் இருவருமே எங்கள் உறவில் உறுதியாக தான் இருக்கிறோம். இப்போது அதுக் குறித்து இப்போது பேச விரும்பவில்லை என்று கூறினார்.

  ஆனால், 2016 பிப்ரவரி மாதம் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.

  ஆலியா பட்!

  ஆலியா பட்!

  பாலிவுட்டில் இது நாயகிகளுக்கான காலம் என்று கூறலாம். தீபிகா, பிரியங்கா சோப்ரா, ராணி முகர்ஜியின் கம்பேக், அனுஷ்கா ஷர்மா, ஆலியா என தொடர்ந்து நடிகைகள் தங்களுக்கான கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார்கள்.

  சமீபத்தில் ஆலியா பட் நடித்து வெளியான ராஸி என்ற படம் நூறு கோடிகளுக்கு வசூல் செய்து சூப்பர்ஹிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  இவரையும் விட்டு வைக்கவில்லை...

  இவரையும் விட்டு வைக்கவில்லை...

  இப்போது ரன்பீர் கபூரின் காதலிகள் பட்டியலில் சமீபத்தில் சேர்ந்திருப்பவர் ஆலியா பட். ரன்பீரின் வயது 35, ஆலியாவின் வயது 25 ஏறத்தாழ இருவருக்கும் பத்து வயது வித்தியாசம். இருவருமே திரை குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்.

  ரன்பீர் கபூர் சமீபத்தில் தனக்கும் ஆலியாவிற்கும் இடையே இருக்கும் உறவு குறித்து வாய் திறந்தார். தாங்கள் இருவரும் டேட்டிங் செய்து வருகிறோம். நான் முன்ன போல இல்லை. இப்போது மிகவும் முதிர்ச்சியுடன் நடந்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார் ரன்பீர் கபூர். இப்போது எதையும் விளக்கமாக கூற விரும்பவில்லை. கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்று மேலும் தெரிவித்திருந்தார் ரன்பீர்.

  ஆலியாவுடனாவது இவரது காதலிகள் பட்டியல் முடியுமா? இவரையாவது ரன்பீர் திருமணம் செய்துக் கொள்வாரா என்பது அவரது முதிர்ச்சியின் அளவில் தான் இருக்கிறது போல...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Ranbir Kapoor Confesses That He and Alia Bhatt are in Dating Relationship.

  Ranbir kapoor and Love Affairs is a lengthy story. His love desire started when he was studying 7th Standard. And Recently Ranbir confessed that currently he is dating alia bhatt.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more