For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கட்டிப்பிடிக்கணும்னு ஆசை இருந்தா மட்டும் போதுமா?... எப்படி கரெக்டா கட்டிப்புடிக்கணும்னு தெரியுமா?

அரவணைப்பு என்பது ஸ்பரிச ரீதியாக நம் அன்பை காட்ட சிறந்த வழிவகைகளில் ஒன்றாகும்

|

அரவணைப்பு என்பது ஸ்பரிச ரீதியாக நம் அன்பை காட்ட சிறந்த வழிவகைகளில் ஒன்றாகும்; அது நெருக்கத்தையும், பாசத்தையும் காட்டுவதோடு மகிழ்ச்சியையும் அதிகப்படுத்துகிறது.

relationship

அரவணைப்பு மன இறுக்கம் மற்றும் கவலையை குறைக்கிறது, இதனால் உங்கள் மன நலத்தை நல்ல நிலையில் பேன உதவுகிறது. நீங்கள் அரவணைப்பு பற்றி அறியாமலோ (அ) அரவணைப்பை எப்படி காட்டலாம் என்று தெரியாவிட்டலோ, கவலைப்பட வேண்டாம்! அரவணைப்பை எளிதாக மற்றும் வேடிக்கையாக எப்படி காட்டலாம் என்று அறிந்துகொள்ள மேற்கொண்டு படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரவணைப்பை தொடங்கும் முறை

அரவணைப்பை தொடங்கும் முறை

அரவணைப்பை மெதுவாக தொடங்கவும். உங்கள் துணை முதலில் அரவணைப்பை தொடங்க விரும்பலாம், அல்லது நீங்கள் தாமாக முன் வந்து அரவணைப்பை தொடங்குவதற்கு முன் வந்து இருக்கலாம், எப்படி இருந்தாலும், மெதுவாக துவங்குவது சிறந்தது. நீங்கள் உங்கள் அரவணைப்பை முரட்டு தனமாக தொடங்குவதை தவிர்க்கவேண்டும் - சொல்லப்போனால், நீங்கள் எவ்வளவு அவசரம் கொண்டவராக இருந்தாலும் பொறுமையாக இருக்கவும். உங்கள் கைகளை துணையின் தோள், பின் பகுதி (அ) இடுப்பில் வைத்து ஊங்கள் விருப்பத்தை மறைமுகமாக உணர்த்தலாம். சில நிமிடங்களுக்கு கையை அங்கேயே வைத்து மிக மென்மையாக தடவலாம்.

உணர்த்துதல்

உணர்த்துதல்

நீங்கள் கூட்டிணைப்புக்கான முயற்சியில் உள்ளீர்கள் என்பதை தெளிவாக உங்கள் துணைக்கு உணர்த்த வேண்டும். நீங்கள் அவர்களின் தோள்களில் கை வைத்தாலும் கட்டாயம் அவர்களோடு கூட வேண்டும் என்ற அவசியம் இல்லை. மென்மையாக அவர்களின் கையைப் பற்றிக் கொள்ளுங்கள் இதன் மூலம் உங்களின் எண்ணத்தை உணர்த்திடுங்கள்.

நிதானம்

நிதானம்

அரவணைப்பு என்பது தனி செயல், இது கண்டிப்பாக உடல் உறவுக்கு முன்பான விளையாட்டு அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மெதுவாக தொடங்கி நீங்கள் வசதியாக உணரும்வரை இதை தொடர்ந்திடுங்கள் மற்றும் அவசரத்தை தவிர்த்திடுங்கள்.

சுற்றுப்புறக் காரணிகள்

சுற்றுப்புறக் காரணிகள்

நீங்கள் அடிப்படை அரவணைப்பை தொடங்கி மேலும் தொடர தயாராக இருக்கிறீர்கள். நீங்கள் மேற்கொண்டு தொடரும் முன், முக்கியமான சுற்றுச்சூழல் காரணிகளை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் சூடான சூழலில் உள்ளீர்களா? ஆம் எனில் நீங்கள் உடல் ரீதியான தொடர்பை குறைக்க வேண்டும் இல்லையெனில் உங்கள் துணை நல்ல நிலையில் உணர மாட்டார்கள். நீங்கள் படுக்கையில் இருக்கிறீர்களா? அல்லது முற்றிலும் வேறு இடத்தில் இருக்கிறீர்களா? நீங்கள் இருக்க கூடிய இடம் மற்றும் அங்குள்ள இட வசதி ஆகியவற்றை பொருத்து, நீங்கள் செய்யக்கூடிய அரவணைப்பு நிலைகள் மற்றும் முறைகள் மாறும்.

வசதியாக இருங்கள்

வசதியாக இருங்கள்

நீங்கள் இப்போது உங்கள் துணையை சிறிது நேரம் அணைத்தபடி இருக்க வேண்டும், எனவே நீங்கள் முதலில் வசதியாக உங்களை வைத்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு திரைப்படம் பார்க்கும்போதோ (அ) படுக்கைக்கு முன்போ இதை செய்யும்போது, வசதியான துணிகளை மாற்றிக் கொள்ளுங்கள் அல்லது வசதியான போர்வைகளை உபயோகியுங்கள். நீங்கள் துணையுடன் ஓய்வெடுக்க விரும்பும்போது, ஒரு தலையணை வைத்துகொள்வதும் ஒரு நல்ல யோசனையாக இருக்கலாம்.

மென்மையான தடவல்.

மென்மையான தடவல்.

நீங்கள் மெதுவாக ஒரு அன்பான தடவலை, உங்கள் துணையின் முதுகு (அ) கைகளில் உணர்ச்சிபூர்வமான முறையில் செய்யலாம். இப்போது உங்கள் இலக்கு உங்கள் துணையை வசதியாகவும், மேலும் துணையின் கூடல் ஆர்வத்தை அதிகப்படுதுவதாகவும் இருக்கவேண்டும். நீங்கள் மேற்க்கொண்டு உண்மையான அரவணைப்பை தொடங்கும்போது மென்மையான தடவலை தொடருங்கள் இது உங்கள் இருவருக்கும் நல்ல உணர்சிகளை தொடர்ச்சியாக கொடுக்கும்.

பண்பான அரவணைப்பு

பண்பான அரவணைப்பு

மிக வழக்கமான, தொன்றுதொட்டு உள்ள முறை - ஸ்பூனிங் (spooning).

அனைத்து அரவணைப்பு நிலைகளிலும் மிகவும் பாரம்பரியம் மிக்க மற்றும் பிரபலமான முறை, ஸ்பூனிங் (spooning): இது ஒரு மிக நல்ல தொடக்க நிலை ஆகும்! இதில் ஒருவர் மற்றவரை பின் புறமாக அணைத்த நிலையில் நெருக்கமாக படுத்திருப்பது ஆகும். அவ்வாறு கிடக்கும் பொது பின்னாலிருப்பவர் கைகளால் துணையின் உடலை இதமாக தடவி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும் போது உங்கள் தலையை கவனமாக வைத்து கொள்ள வேண்டும் ஏனெனில் உங்கள் இருவரது தலையும் அடுத்து அடுத்து இருக்கும். எனவே பின்னாலிருப்பவர் துணையின் தோள்களில் (அ) கைகளில் வசதியாக தலையை வைத்து கொள்ளலாம்.

மனதை இதமாக்கும்

மனதை இதமாக்கும்

ஸ்பூனிங் மனதை நல்ல வெது வெதுப்பகவும் மற்றும் இதமாகவும் வைக்கும் அரவணைப்பு நிலைகளில் ஒன்றாகும், ஏனெனில் நீங்கள் உங்கள் துணையுடன் நெருக்கமான உடல் தொடர்பில் இருப்பீர்கள். மேலும் பின்னாலிருப்பவர் கைகளை கொண்டு முன்னளிருப்பவரை வளைத்து அணைக்கும் போதும் உங்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும், இவ்வாறு செய்யும் போது கால்களை சற்று மாற்றி வைத்து வியர்வை தொந்தரவில் இருந்து தப்பிக்கலாம்.

அரை ஸ்பூன் (half-spoon) நிலை

அரை ஸ்பூன் (half-spoon) நிலை

முழுமையான ஸ்பூனிங் முறை போன்றே, அரை ஸ்பூன் நிலையில் ஒரு நபர் தங்கள் முதுகு பாகம் தரையில் படும்படி படுத்திருப்பார், அவர் பக்கத்தில் துணை பகுதி சாய்ந்த நிலையில் படுத்து இருப்பார். உங்கள் கால்களை நல்ல நெருக்கமாக அடுத்தவரின் கால்களின் இடையில் வைத்து நல்ல சுகமான அரவணைப்பை காட்டலாம்.

நெருக்கமாக அடுத்து இருங்கள்

நெருக்கமாக அடுத்து இருங்கள்

நெருக்கமான இடைவெளி அரவணைப்புக்கு சிறந்ததாகும், உடலளவில் பெரிய நபர் படுக்கையில் படுத்த படி இருக்க, மற்றவர் அவரின் முகத்தை மார்பில் வைத்த படி கைகளை அடுத்தவரை இறுக்கி அணைத்தபடி கால்கள் இரண்டையும் படுத்திருப்பவரின் கால்களோடு பின்னி நெருக்கமாக படுத்திருக்க வேண்டும். மேலே படுப்பவர் முகத்தை சற்று சாய்ந்த நிலையில் அடுத்தவரின் மார்பில் வைப்பதன் மூலம் மூச்சுத் திணறலைத் தவிர்க்கலாம்.

முகத்திற்கு முகம் நேராக வையுங்கள்

முகத்திற்கு முகம் நேராக வையுங்கள்

நீங்கள் ஒருவருக்கொருவர் முகம் நோக்கி பார்த்து கொண்டு படுத்த நிலையில் இருப்பது மிகவும் காதல் வயப்பட்ட நிலைகளில் ஒன்று. நீங்கள் இருவரும் பக்கவாட்டு நிலையில் முகம் சற்று இடைவெளியில் நேராக இருக்கும்படி பக்கவாட்டாக படுக்கலாம். அவ்வாறு படுக்கும்போது உங்கள் கைகள் மற்றும் கால்களை அடுத்தவரின் கல் மற்றும் கைகளோடு தொட்டு அல்லது பின்னியபடி கிடக்க வேண்டும் இதன் மூலம் சுழலும் காதல் உணர்வுகளை அதிகரிக்கலாம்.

உங்கள் துணையுடன் மேலே வானத்தை பார்ப்பது போல படுத்து இருங்கள்.

நீங்களும் உங்கள் துணையும் வெளியிடத்தில் தனியாக இருந்தால் ஒருவருக்கொருவர் வானத்தை பார்த்த படி படுத்துக்கொண்டு மகிழ்ச்சியாக உணரலாம். ஒருவருக்கொருவர் அருகில் படுத்தபடி, உங்கள் முதுகு படுக்கையில் படும்படியாகவும் வானத்தை பார்ப்பது போல மேலே பார்த்துக்கொண்டு, கால்களை அடுத்தவரின் மேல் இட்டுக்கொண்டு, உங்களில் ஒருவர் அரை தழுவல் மற்றும் மற்ற நபர் கழுத்தில் கைகளை கொண்டு மென்மையாக தடவ வேண்டும். உங்கள் உடல்களுக்கு இடையில் அடுத்தவரின் கைகளை வைத்திருக்க வேண்டும். இது பெயருக்கு முரணாக வெளியிடத்தில் அல்லாது எந்த சூழ்நிலையிலும் செய்யலாம்.

மடியில்

மடியில்

நீங்களும் உங்கள் துணையும் தனியாக ஒருவர் தரையில் அமர்ந்து சம்மணமிட்டு ஒரு கை பின்னல் ஊன்றிய படியான நிலையில் அமர்ந்து இருக்கும் போது மற்றவர் தன் தலையை மடியில் வைத்து ஒருவரை ஒருவர் உற்று பார்த்தபடி இருக்க வேண்டும். இவ்வாறு கண்களை நோக்கி உற்று பார்க்கும்போது மற்றும் பேசும் போது மிக சிறப்பாக உணரலாம். அப்போது தலையை மற்றும் முகத்தை தடவுவது மற்றும் முடி பிடித்து மென்மையாக விளையாடுவது போன்றவை இனிமையான அரவணைப்பை கொடுக்கும். உங்கள் துணையின் தலைமுடியுடன் விளையாடுங்கள்.

உங்கள் தலைமுடியை யாராவது தடவி வருடும்போது இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணருவீர்கள். இவ்வாறு செய்ய வேறு பாலின துணை அவசியம் இல்லை, நீங்கள் துணையின் தலை முடியின் ஊடே உங்கள் கைகளை விட்டு லேசாக பிடித்து கொடுங்கள். இது உங்கள் தலையில் சீப்பு கொண்டு கொண்டு மசாஜ் செய்வது போன்ற உணர்ச்சியை கொடுக்கும். உங்கள் துணையின் முடியில் விளையாடுவது கண்டிப்பாக அவர்களை மகிழ்ச்சியாக மற்றும் வசதியாக வைக்க செய்யும் ஒரு வழி ஆகும்.

சிறிய முத்தம்

சிறிய முத்தம்

உங்கள் துணையை எதிர்பாராத தருணத்தில் யதேட்சையாக முத்தமிடுங்கள்.

சிறிய அன்பான முத்தங்களை அவர்களின் நெற்றியில், கைகளில் (அ) விரல்களில் கொடுப்பது நீங்கள் உங்கள் துணையை நீங்கள் எந்த ஆளவு நேசிக்கிரீர்கள் என்பதை அவர்களுக்கு புரிய வைக்கும். இந்த நடவடிக்கை அவர்களை மகிழ்ச்சியாக்குவதுடன் அவர்களை உங்களோடு நெருக்கமாக இருக்க செய்யயும்.

மசாஜ் செய்யவும்

மசாஜ் செய்யவும்

எல்லோரும் மசாஜ்-அய் நேசிக்கிறார்கள், சரிதானே? உங்கள் துணையின் மிக அருகில் உள்ள உடல் பாகங்களில் மசாஜ் செய்வதன் மூலம் உங்கள் அன்பை வெளிப்படுத்தலாம். இதை அவர்களின் முதுகு, தோள்கள், அல்லது கைகளில் செய்யலாம். நீங்கள் எந்த மசாஜ்-ம் செய்ய விரும்பவில்லை என்றால், உங்கள் கைகள் கொண்டு இப்பாகங்களை முன்னும் பின்னுமாக தேய்க்கலாம்.

உங்கள் விரல் நுனியை கொண்டு உங்கள் துணையின் உடலில் மெதுவாக தட்டலாம். உங்கள் கைகளை கொண்டு உடல், கால்கள் மற்றும் கைகள் ஆகிய பாகங்களை தடவலாம். இது ஸ்பூன் அல்லது அரை ஸ்பூன் நிலையில் இருந்து எளிதாக செய்யலாம், ஆனால் எந்த மற்ற சமயங்களிலும் இதை செய்யலாம்.

கிச்சு கிச்சு செய்வது

கிச்சு கிச்சு செய்வது

மெதுவாக உங்கள் துணையை உடலின் உணர்ச்சியான பாகங்களில் கிச்சு கிச்சு செய்வதன் மூலம் அவர்களை நொடிப்பொழுதில் சிரிக்க வைத்து உங்களின் அருகாமையில் ஆக்கலாம். ஆனால் இதை நீண்ட நேரம் செய்வதை தவிர்க்கவும். தேவையான அளவு நேரம் மட்டும் இதை செய்து நீங்கள் அவர்களை மகிழ்ச்சி அடைய மற்றும் நெருக்கமானவராய் இருக்க முயற்சிக்கிறீர்கள் என்பதை உணர்த்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Cuddle

Cuddling is one of the best means of physical affection; it garners closeness, shows affection, and increases happiness.
Story first published: Tuesday, May 15, 2018, 16:42 [IST]
Desktop Bottom Promotion