இந்த 9 விஷயத்தை சரியாக செய்தால், மனைவியை எளிதாக திருப்திப் படுத்திடலாம்!

By Staff
Subscribe to Boldsky

80, 90களில் இருந்த காதலுக்கும், தற்போதைய காதலுக்கும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதாவது.., அப்போதெல்லாம் கணவன், மனைவிக்கு மத்தியில் சண்டை வந்தால் மல்லிகை பூ, அல்வா வாங்கிட்டு போ என்று சொல்வார்கள். ஆனால், இப்போது இருக்கும் பெண்கள் தலையில் பூ வைத்துக் கொள்வதும் இல்லை, அல்வாவும் சாப்பிடுவது இல்லை.

இந்த தலைமுறை பெண்களை கவர, அவர்கள் மனதை அழகுப்படுத்த, அவர்களை உங்கள் மீது அதிக காதல், அன்பு செலுத்த வைக்க வேறு சில விஷயங்களை ஆண்கள் செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலை, மாலை!

காலை, மாலை!

பெண்கள் குறைந்தபட்சம் எதிர்பார்க்கும் விஷயம் இதுதான். காலையும், மாலையும் ஒரு விஷ். குட் மார்னிங், குட் நைட். இதில் என்ன இருக்கிறது என்று ஆண்கள் கருதலாம். இருக்கிறது, இதை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால், அவர்களை நீங்கள் மறவாமல் இருக்கிறீர்கள் என காதலி / துணை கருதுகிறார்கள். இது பெண்களை ஸ்பெஷலாக உணர வைக்கிறது. எனவே, இனிமேல் காலை, மாலை விஷ் பண்ண மறக்க வேண்டாம்.

பாராட்டுங்க!

பாராட்டுங்க!

எல்லா உயிரும் எதிர்பார்ப்பது இந்த பாராட்டு தான். நீங்கள் சிறியதாக ஏதாவது வேலையில் சாதித்தாலும், டார்கெட் முடித்தாலும், மேனேஜர் பாராட்டத் மாட்டாரா என்று விரும்புவீர்கள் அல்லவா? அதே போல தான். தனது காதலன், கணவனுக்காக செய்யும் ஒவ்வொரு சின்ன, சின்ன விஷயத்திற்கும் பெண்கள் ஒரு பாராட்டை எதிர்பார்ப்பார்கள். பாராட்டாமல் இருந்தாலும் கூட பரவாயில்லை, நொட்டை பேச்சு பேசி குறை கூறுவதை தவிர்க்கலாம்.

பரிசுகள்!

பரிசுகள்!

வெறும் பாராட்டுடன் நிறுத்திக் கொள்ளாமல், கூடுதலாக, உங்கள் மனைவி / காதலி உங்களுக்காக செய்த விஷயத்தை பாராட்டி அதனுடன் சின்ன பரிசும் கொடுத்தீர்கள் எனில், அடுத்த ஒரு மாத காலத்திற்கு அதை நினைத்தே உங்கள் மீது காதல் மழை பொழிவார்கள்.

ஆனால், ஒன்று பத்து ரூபாய்க்கு பூ வாங்கிக் கொடுத்தாலும் அதை உண்மையாக, முழு மனதுடன் செய்ய வேண்டும். வேண்டா வெறுப்பாக செய்து அதை முகத்தின் பாவனையில் காண்பித்துக் கொடுத்துவிட்டீர்கள் என்றால், எத்தனை நாட்கள் ஆனாலும், அது ஆறாத தழும்பாக அவர் மனதிலேயே நிலைக் கொண்டு விடும்.

உண்மை!

உண்மை!

பெண்கள் நோண்டி நோண்டி கேள்வி கேட்பது எதற்காக தெரியுமா? உங்கள் மீது இருக்கும் சந்தேகமே, பொறாமையோ அல்ல. எல்லையற்ற காதல், அன்பு, அக்கறை, எங்கே தவறாக ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற அச்சம். அதனால் மனைவியுடம் தயவு செய்து பொய் பேச வேண்டாம். உறவில் நம்பகம் தொலைந்து போய் விட்டால், அனைத்தையும் இழந்துவிடுவோம்.

டிபி வைங்க பாஸ்!

டிபி வைங்க பாஸ்!

பெண்கள் எப்போதும் தங்கள் காதலர், கணவருடன் இருக்கும் படத்தை முகப்பு படமாக வைக்க விரும்புவார்கள். அதே சமயம், தங்கள் காதலன் / கணவரும் தங்களுடன் இருக்கும் படத்தை முகப்பு படமாக வைக்க வேண்டும் என்று விரும்புவார்கள் பெண்கள். இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.

இப்படியாக தங்கள் படத்தை வைப்பதன் மூலம் வேறு பெண்கள் தங்கள் துணையுடன் நெருங்கி பழகுவதை தவிர்க்க முடியும் என்று கருதுகிறார்கள். நீங்கள் வேண்டுமானால் ஒருநாள் உங்கள் துணையின் படத்தை டிபியாக வைத்து பாருங்களேன், அன்று உங்களுக்கு கூடுதல் கவனிப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆச்சரியம்!

ஆச்சரியம்!

பெண்களை கவர, அவர்களை மனதை உங்கள் வசமாக்க இதை சரியாக செய்தால் போதும். அவர்களுக்கு பிடித்த விஷயத்தை, அவர்கள் எதிர்பாராத நேரத்தில் செய்து அசத்தி ஆச்சரியப்படுத்தினால் போதும், அவர்கள் உங்களை விரும்ப ஆரம்பித்துவிடுவார்கள். படம், அவர்களுக்கு பிடித்த இடம், அவர்களுக்கு பிடித்த பொருள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அது அவர்களுக்கு மிகவும் பிடித்த பொருளாக இருக்க வேண்டும்.

அதிர்ச்சி!

அதிர்ச்சி!

அதிர்ச்சி என்றால், பொய் பேசி, தவறு செய்து அதிர்ச்சி அளிப்பது அல்ல. அவர்கள் எதிர்பாராத நேரத்தில் அவர்கள் நண்பர்கள், உறவினர்களை அழைத்து வந்து அவர்கள் முன் நிறுத்துவது. அவர்கள் நீண்ட நாட்களாக வாங்க, காண காத்திருக்கும் விஷயங்களை ஏற்படுத்திக் கொடுப்பது.

ஒருவேளை, நீங்கள் லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பில் இருந்தால், அவர்களை எதிர் பார்க்காத போது அவர்கள் முன் தோன்றுவது போன்ற இன்ப அதிர்சிகளை கொடுக்க வேண்டும்.

மன்னிப்பு!

மன்னிப்பு!

ஆண்கள் பெண்களிடம் கேட்க தயங்கும் விஷயம் தான். திருமணத்திற்கு முன் ஆயிரம் மன்னிப்பு கேட்பார்கள். திருமணத்திற்கு பின் மன்னிப்பு என்ற வார்த்தை சிலருக்கு கௌரவ குறைச்சலாக மாறிவிடும். தவறு உங்கள் பக்கம் தான் என்றால் தயங்காமல் மன்னிப்பு கேளுங்கள்.

சண்டைகள் முடிவடையாமல் தொடர்வதற்கு காரணம் மன்னிப்பு யார் கேட்பது என்ற ஈகோவால் தான். சண்டைக்கு சீக்கிரம் முற்றுப்பள்ளி வைக்கவும்... காதலுக்க் தொடர்புள்ளி வைக்கவும் உதவும் ஒரே கருவி மன்னிப்பு.

போட்டோஸ் எடுங்க!

போட்டோஸ் எடுங்க!

அவன் தூங்கிட்டு இருக்கும் போது, சமைச்சுட்டு இருக்கும் போது. வேலைவிட்டு திரும்பும் போது, டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது என செல்ஃபீ அல்லது போட்டோஸ் எடுத்து அவர்களை அசத்தலாம்.

உங்களுக்கு கொஞ்சம் ஃபிரேம் எல்லாம் பார்த்து நன்கு போட்டோ எடுக்க வரும் என்றால், கவலைய விடுங்க... உங்களுக்கும், உங்க துணைக்கும் என்ன்ன பிரச்சனை வந்தாலும் சமாளிச்சிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Fundamental Things A Woman Expects From A Man In Every Relationship

    It is never easy to convince and satisfy a girlfriend and a wife. Woman’s expectation increase with the pace of time. Fundamental things a woman expects.
    Story first published: Saturday, May 5, 2018, 17:06 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more