For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  காதலின் 5 நிலைகள் குறித்து பண்டைய இந்து மதம் கூறுவது என்ன?

  By Staff
  |

  கண்டதும் காதல், ஃபேஸ்புக்கில் லவ் ஸ்மைலி போட்டால் காதல், ஃபிரெண்ட்ஷிப் ரெக்வஸ்ட் அக்ஸப்ட் செய்தால், வாட்ஸ்அப் நம்பர் கொடுத்தால் என இந்த தலைமுறையில் காதல் பலவகை படுகிறது.

  ஈர்ப்பு, கவர்ச்சி, ஆசை, காதல், காமம் என ஆண், பெண்ணுக்கு இடையே ஏற்படும் உணர்வுகளில் பலவகை உண்டு. ஆனால், அதுகுறித்து இன்று யாரும் அறிந்திருப்பது இல்லை.

  Five Stages of Love, See What Ancient Hindu Philosophy Says!

  Image Source: detechter

  வெறும், ஈர்ப்பு காதலாக மாற வாய்ப்பு உண்டு. ஆனால், கவர்ச்சி காதலாக வாய்ப்பே இல்லை. காதலில் இருந்து காமம் பிறக்கலாம். ஆனால், காமத்தில் இருந்து காதல் பிறக்காது.

  உண்மையில் காதலுக்கு ஐந்து நிலைகள் இருக்கிறது என்று பண்டைய கால இந்து தத்துவங்களில் கூறப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்று இந்த தொகுப்பில் காணலாம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  காமா: நிலை #1

  காமா: நிலை #1

  உணர்வை செதுக்குதல்!

  உடல் ரீதியாக இணைவதற்கு முன்னர் மன ரீதியாக ஆண், பெண் இணைய வேண்டும். உடல் சார்ந்து ஏற்படும் முதல் ஈர்ப்பு நிலை காமம். இது உடலுறவு சார்ந்த ஆசைகள். உலகின் சில மதங்கள் செக்ஸுவல் ஆசைகள் ஆண்களின் வீழ்ச்சி என்று கூறுகின்றன.

  அவமானம் அல்ல!

  அவமானம் அல்ல!

  இந்து தர்மத்தில் தாம்பத்தியம் ஆனது அவமானத்திற்கு உரியது அல்ல, அது மனித வாழ்வின் இன்ப நிலை என்று குறிப்பிடப்படுகிறது. இது குறித்து தான் காமசூத்ராவில் கூறப்பட்டுள்ளன. காமசூத்ரா என்பது வெறும் உடலுறவு நிலைகள் குறித்து மட்டும் கலந்தாய்வது அல்ல. அதில் காதல் மற்றும் ஆண், பெண் உறவு, உணர்வு ரீதியான சந்தேகங்கள் குறித்த தத்துவங்களும் கூறப்பட்டுள்ளன.

  சிருங்கார - நிலை #2

  சிருங்கார - நிலை #2

  பேரின்ப நெருக்கம் (Sringara - காதல் சுவை)

  மன ரீதியான ஆசைகளை தீர்க்க பல வழிகள் உண்டு. ஆனால், உடல் ரீதியான ஆசைகளை தீர்க்க ஒரே வழி தான், உடலுறவு. ஆனால், எந்தவொரு நெருக்கம் அல்லது பகிர்வு, ஆசைகள் இன்று ஒரு ஆண், பெண் இணைதலில் மன ரீதியான உணர்ச்சி வெளிப்பாடு அல்லது முழுமை இருக்காது.

  ஆகையால் தான், இந்திய முனிவர்கள் பலர் மன ரீதியான உணர்வுகள் குறித்தும், அது மேம்படவும் பல சிறப்பு மிக்க படைப்புகளை, சூழ்நிலைகள் உருவாக்குதல் குறித்து எழுதி வைத்துள்ளனர்.

  ரொமான்ஸ்!

  ரொமான்ஸ்!

  இங்கே தான் சிருங்கார ரசம் பிறக்கிறது. இதை தெளிவாக புரியும்படி கூறவேண்டும் எனில், ரொமான்ஸ்.

  இது காமத்தை, காம எண்ணங்களை தூண்டும் செயல்கள் ஆகும். கொஞ்சி குலவுதல், பரிசுகள் அளித்தல், விளையாடுதல், செல்லப்பெயர் வைத்து அழைத்தல் என அனைத்துமே சிருங்காரம் தான். ராதா - கிருஷ்ணன் உறவில் இசை, நடனம், கவிதை என பல சிருங்கார ரசத்தை காண இயலும்.

  பண்டைய கால முனிவர்கள் வெறுமென தன் காதல் துணையை கண்டறிவதால் மட்டுமே அனைத்து பிரச்சனைகளும் முடிவடைந்துவிடாது என்பதை அறிந்திருந்தார்கள். எனினும் இது நல்ல உணர்வையும், சிறந்த நிலையையும் அளிக்கும்.

  மைத்ரி - நிலை #3

  மைத்ரி - நிலை #3

  தாராள மனப்பான்மை!

  பல காதல் இணைய, செயலிகள்... எதற்காக இன்னும் உங்கள் காதலிக்காக காத்திருக்கிறீர்கள்... இதோ, உங்களுக்கான இடம் இதுதான் என்று கூவுவார்கள். ஆனால், காதல் என்பது மவுஸ் கிளிக்கில் விளைவது அல்ல. ஒரு பட்டன் அல்லது ஒரு லிங்க் உங்கள் மனதையும், காதலையும் நிறைவடைய செய்கிறது எனில் அது தற்காலிகமானதாக மட்டுமே இருக்கும்.

  அமையலாம், சிலருக்கு இலட்சத்தில் ஒருவருக்கு அவரது வாழ்நாள் துணை இதுப் போன்ற இணைய / செயலிகளில் அமையவும் வாய்ப்புகள் உண்டு. ஆனால், இது அபூர்வம்.

  விதை!

  விதை!

  உண்மையில் காதல் என்பது ஒரு விதை போல, எவ்வளவு பெரிய ஆலமரமாக இருந்தாலும், அது விளைந்து வந்தது ஒரு சிறிய விதையில் இருந்துதானே.

  அப்படி தான் காதலும். உங்கள் காதல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், உங்கள் உறவு, உணர்வு பிரபஞ்சத்தை காட்டிலும் பெரிது என்று நீங்கள் பரிசாற்றிக் கொண்டாலும். அது உங்கள் இருவருக்கு மத்தியில் நடந்த ஒரு சிறிய மகிழ்ச்சியான தருணத்தில் தான் உருவாகி இருக்கும்.

  சுயநலமற்ற அந்த தருணம் தான் உங்கள் இருவரையும் சுயம்வரத்தில் இணைத்திருக்கும்.

  கடினம் தான்!

  கடினம் தான்!

  தாராள மனப்பான்மை அனைவரிடமும் இருக்குமா? அது கொஞ்சம் கடினமானது தான். ஏன் எவராலும் அனைவரிடத்திலும் தாராள மனப்பான்மை வெளிப்படுத்த முடியாது. ஒருவேளை நீங்கள் அனைவரிடமும் நல்ல மனப்பான்மையுடன் நடந்துக் கொள்ளும் நபராக இருந்தாலும், உங்கள் துணை மிகவும் கொடுத்து வைத்தவர். உங்கள் காதல் உறவி பன்மடங்கு மேலோங்கி சிறக்கும்.

  பக்தி - நிலை #4

  பக்தி - நிலை #4

  எவ்வித சலனமற்ற பக்தி!

  தாராள மனப்பான்மை என்பது வெறும் துவக்கம் தான். அது முடிவோ, நிறைவோ அல்ல.உங்கள் ஆழ்மனதை கடந்த காதல் ஒன்று இருக்கும். அதன் ஆசைகள், நிறைவடையும் புள்ளி அனைத்தும் மிக எளிமையாக, சாதாரணமாக இருக்கும். அதை யார் தொடுகிறாரோ அவர் தான் உங்கள் உண்மையான காதல் துணையாக இருக்க முடியும்.

  இதை பண்டைய கால முனிவர்கள் பக்தி யோகா என்று கூறியுள்ளனர். காதல் என்பது மற்ற மனித, பிற உயிர்களிடம் வளர்ப்பது மட்டுமல்ல, கடவுளிடமும் வளர்ப்பது என்கிறார்கள்.

  கட + உள்!

  கட + உள்!

  கடவுள் என்பது மிக எளிமையான சொல், கடவு என்றால் கடந்து செல்வது, உள் என்றால் உள்ளம் அல்லது உங்கள் உள்ளே என்று கூட பொருள் கொள்ளலாம். உங்களை நீங்களே கடந்து சென்று, உங்களுக்குள் இருக்கும் அந்த காதல் விதையை வளர்க்க வேண்டும். அது நண்டு ஆரோக்கியமாக வளரும் பட்சத்தில் மற்றவர் மீதான உங்கள் காதலும் செழித்து வளரும்.

  யார் ஒருவர் தன்னைத் தானே அதிகம் நேசிக்கிறானோ, அவரால் மட்டுமே பிறரையும் அதே போல நேசிக்க முடியும். அவர்களிடம் தான் உண்மையான கனிவு, உண்மை, நேர்மை, நீதி போன்றவற்றை காண முடியும்.

  ஆத்மா பிரேமா - நிலை #5

  ஆத்மா பிரேமா - நிலை #5

  அளவுகடந்த சுயத்தின் மீதான காதல்!

  தெளிவாக கூற வேண்டும் என்றால் அனைத்துமே இங்கு சக்கரம் தான். முதலில் வெளி நோக்கி நகர்ந்தாலும், பின்னர் உள் நோக்கி வந்து சேரும். ஆத்மா பிரேமா என்பதும் அதே தான்... சுயத்தின் மீதான அளவுகடந்த காதல். சுயநலமாக செயற்படுவதற்கும், சுயத்தின் மீதான் காதலும் முற்றிலும் வேறுபட்டவை என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

  நீர்!

  நீர்!

  காதல் நீர் போன்றவது அதற்கு சொந்தமாக உருவம் இல்லை. ஆனால், தான் அடைப்படும் இடம் எதுவாக இருந்தாலும் அதன் உருவத்தை எடுத்தாள துவங்கிவிடும். அப்படி தான் காதலும், யார் இடத்தில் சென்றாலும், அவருக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும்.

  நீங்கள் எந்த ஒரு தருணத்தில் உங்கள் சுயத்தின் மீதான காதலில் வெற்றிக் கொள்கிறீர்களோ, அன்று தான் நாம் அனைவரும் சமம் என்ற நிலையை புரிந்துக் கொள்வீர்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Five Stages of Love, See What Ancient Hindu Philosophy Says!

  Five Stages of Love, See What Ancient Hindu Philosophy Says!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more