ஸ்கை ப்ளூக்கும் லைட் ப்ளூவுக்கும் என்னம்மா வித்யாசம்? காதலில் இப்படியும் சிக்கல் வரலாம்....

Posted By: Staff
Subscribe to Boldsky

அன்று அத்தனை முறை போன் செய்திருக்க கூடாது தான். ஆனாலும் மனம் கேட்கவில்லை அவள் கோபம் கொண்டு பேசுவாள் என்று தெரிந்துமே விடாது அவளுக்கு கால் செய்து கொண்டிருந்தேன்.

ஒரு வார்த்தை கோபமாகவாது, எரிந்து விழும் சொற்களையாவது கேட்டுவிட வேண்டும் என்று தோன்றியது. அப்படி என்ன தேவை.... அவளின் அந்த வார்த்தைகள் என்ன மாய மந்திரம் இருக்கிறது என்றெல்லாம் தெரியாது. தோன்றும் போது அருகில் இருக்க வேண்டும், ஸ்விட்ச் போட்டால் சிரிக்கும் குழந்தையைப் போலே அவள் இருக்க வேண்டும்.

அவ்வப்போது செல்லக்குட்டி.... தங்கமே என்று கொஞ்ச வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போன் எடுக்கவில்லை என்பதில் ஆரம்பிக்கிறது... :

போன் எடுக்கவில்லை என்பதில் ஆரம்பிக்கிறது... :

காலைல இருந்து எவ்ளோ மெசேஜ் ஒரு மெசேஜுக்காவது ரிப்ளை பண்ணனும்னு தோணுச்சா.... என் கால் அட்டண்ட் கூட பண்ண முடியலல்ல என்று ஆரம்பிப்பாள்... ஆபிஸ்ல வொர்க்,மீட்டிங் இருந்துச்சு,வண்டில வந்துட்டு இருந்தேன் என எந்த பதிலைச் சொன்னாலும் அவளைச் சமாதானப்படுத்த முடியாது.

டவர் கிடைக்கல என்று கூட தப்பிக்க முடியாது.

லைவ் அப்டேட்ஸ் :

லைவ் அப்டேட்ஸ் :

காதலைச் சொல்லிக் கொள்வதற்கு முன்பிருந்தே எங்களிடம் இந்தப் பழக்கம் இருந்தது. காலையில் கண் விழிப்பதிலிருந்து கல்லூரிக்கு கிளம்பிச் செல்வது, பாட இடைவேளை,ப்ரேக் டைம்,மாலையில் வீடு திரும்பி இரவு தூங்கும் வரையிலும் லைவ் அப்டேட்ஸ் வந்து கொண்டேயிருக்கும்.

ஸ்கை ப்ளூ டாப் போடாவா லைட் ப்ளூ டாப் போடவா? என்று கேள்வியை அனுப்பிவிடுவாள். அதற்கு ரிப்ளை செய்வதற்கு தாவு தீர்ந்துவிடும்.இந்த கேள்வியை கேட்ட அன்று லைட் ப்ளூக்கும் ஸ்கை ப்ளூவுக்கும் என்னம்மா வித்யாசம் என்று கேட்டுவிட்டேன்.... அன்றைக்கு எடுத்தபாடம் எனக்கு பாலபாடம்.

கேள்விகள் :

கேள்விகள் :

போனை எடுத்ததும்... ஹலோ என்றெல்லாம் சொல்லமாட்டார்கள்.... எங்க இருக்க? என்பது தான் முதல் கேள்வியாக இருக்கும். நாம் பதிலை யோசித்து சொல்வதற்குள்ளாக எங்க ஊர் சுத்துற? பின்னாடி என்ன சத்தம் கேக்குது? யாரோட இருக்க... யார் பேசுறா என்று வரிசையாக கேள்விகள் வந்து விழும்.

லைக் கமெண்ட் ஷேர் :

லைக் கமெண்ட் ஷேர் :

இருப்பதிலேயே பெரும் தலைவலி இது தான். எங்காவது ஊர் சுற்றப் போன இடத்தில் ப்ளர்ரான செல்ஃபியை எடுத்து.... ஏகப்பட்ட ஹேஸ்டேகுகளுடன் செல்ஃபியை அப்லோட் செய்ய.... அடுத்த நொடி ஓடிச்சென்று ஹார்ட்டீன் போட வேண்டும். தப்பித்தவறி தாமதமானால் அன்றைக்கு நம் கதை கந்தல் தான்.

லேட்டா வந்துட்டேன் :

லேட்டா வந்துட்டேன் :

அவர்கள் வரச்சொன்ன நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக சென்று காத்திருக்க வேண்டும். கால் கடுக்க காத்திருந்துவிட்டு அவர்கள் தாமதமாக வந்தால் எதிர்த்து ஏன் தாமதம் என்று ஒரு கேள்வி கேட்டுவிடக்கூடாது.

அவ்வளவு தான் ஒப்பாரி ஆரம்பித்து விடும்.

இரண்டு நிமிடங்களும் இரண்டு மணி நேரமும் :

இரண்டு நிமிடங்களும் இரண்டு மணி நேரமும் :

அவர்கள் வரச்சொன்ன நேரத்திற்கு இரண்டு நிமிடங்களுக்கு தாமதமாக சென்று விட்டாள் போதும்.... உன்ன எப்போ வரச் சொன்னேன் நீ எப்போ வர்ற.... எல்லாம் அசால்ட்டு, எனக்கு மரியாதையே கொடுக்குறதில்ல, என் மேல உனக்கு லவ் இல்ல என்று பொங்க ஆரம்பித்து விடுவார்கள். அம்மா தாயே.... இரும்மா வர்ற வழில ட்ராபிக்.

லேட்டா வர்றதுக்கும் லவ் குறையுறதுக்கும் என்னம்மா வித்யாசம் தயவு செஞ்சு கொஞ்ச விளக்கிடுங்க.

 சரி சாரி... :

சரி சாரி... :

தப்பு நம் மீது இருக்கிறதோ இல்லையோ... முதலிலேயே மண்டியிட்டு மன்னிப்பு கேட்பது தான் நமக்கு நல்லது இல்லையென்றால் சேதாரம் நமக்குத் தான். ஆரம்பத்தில் நண்பர்கள் இப்படிச் சொல்லும் போது, தேவையில்லாமல் சொல்கிறார்கள்.... ரொம்பத்தான் பில்டப் கொடுக்கிறார்கள் என்று கோபமாக இருக்கும்.

கமிட் ஆன பிறகு தானே தெரிகிறது. அவர்கள் சொன்னது அத்தனையும் உண்மையென்று. பசியும் வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள். ஆனால் காதலும் இதனோடு சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேனே... :

கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேனே... :

காதலிக்க ஆரம்பித்துவிட்டால் இரவானால் என்னாகுமோ தெரியாது, தூக்கமே இருக்காதா? விடிய விடிய பேசிக் கொண்டே இருப்பார்கள். லேசாக கண் அசந்த மாதிரி இருக்க.... மணி எட்டாச்சு காலேஜ் கிளம்பலயா என்று சத்தம் கேட்கும்.

நமக்கு முன்பாகவே நம் கனவுக் கன்னிகள் வகுப்பறையில் உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருப்பார்கள். எப்போ தூங்குதுக, எப்போ முழிக்கிதுகன்னு ஒண்ணும் புரியலயே...

சரக்கடிச்சியா... :

சரக்கடிச்சியா... :

என்றைக்கோ நண்பர்களோ சேர்ந்து சர்க்கடித்த விஷயத்தை சொல்ல அதையே பிடித்துக் கொள்வார்கள். அதன் பின் எப்போதும்.... அதைச் சொல்லி சொல்லியே மிரட்டுவார்கள் .

என்ன சரக்கடிச்சியா....? கப் அடிக்கிது. போன்ல எப்டிம்மா கப் அடிக்கும்?

அவன் கூட இனிமே சேராத.... அவன் கூட சேந்து சேந்து தான் நீ இப்டி ஆகுற என்பார்கள். அந்த கூட்டத்திலேயே நாம் தான் ஓன்னாம் நம்பர் ஆயோக்கியன் என்று அவர்களுக்கு தெரியாது பாவம்.

ஸ்வீட் :

ஸ்வீட் :

என்ன தான் தொந்தரவு என்று சொன்னாலும், இடைஞ்சலாக இருக்கிறது. இதற்கு நாம் காதலிக்காமலே இருந்திருக்கலாமோ என்று தோன்றினாலும்.... என் காதலி எனக்கு எப்போதும் ஸ்வீட் தான்.

காதலில் கொஞ்சல்கள் மட்டுமே நிறைந்திருக்க வேண்டுமா என்ன? இப்படியான சில தொந்தரவுகளும் நமக்கு வேண்டும் தானே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Boys Relationship goals

Boys Relationship goals
Story first published: Saturday, January 13, 2018, 16:43 [IST]