பெண்கள், ஆண்கள் மீது அதிக ஈர்ப்பு கொள்ள தூண்டும் 7 விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஆண்கள் தான் சைட் அடிப்பார்கள், பெண்கள் தான் வசீகரிப்பார்கள் என்பது எல்லாம் பொய். அழகுப் படுத்திக் கொள்வது, ஸ்டைலாக உடை உடுத்துவது என ஆரம்பித்து, தங்கள் மீது எதிர் பாலினத்தவர் ஈர்ப்பு கொள்ள ஆண், பெண் இருவரும் சமநிகராக எல்லா வேலைகளிலும் ஈடுபடுகின்றனர்.

அந்த வகையில் ஒரு ஆய்வில், ஆண், பெண் இருவரும் எந்தெந்த விஷயத்தின் அடிப்படியில் தாங்கள் அதிகம் எதிர் பாலினத்தவர் மீது அதிக ஈர்ப்பு கொள்ள தூண்டப்படுகிறோம் என கூறிய டாப் 7 விஷயங்கள் பற்றி இங்கு காணலாம்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஒரு ஆய்வில், ஆண், பெண் இருவரும் தங்கள் எதிர் பாலினத்தவர் மீது இன்ஸ்டன்ட் ஈர்ப்பு கொள்ள தூண்டும் விஷயம் என முக அழகை தான் கூறியுள்ளனர்.

முகத்தின் வடிவம், அவர்களது கண்கள், இதழ், மூக்கு என ஏதாவது ஒன்று சார்ந்து அழகு தான் தங்களை முதலில் ஈர்க்கிறது என கருத்து தெரிவித்துள்ளனர்.

#2

#2

அதே ஆய்வில், இரண்டாவதாக, எதிர் பாலினத்தவரின் உடல் வடிவம் தங்களை ஈர்க்கிறது என அதிகமானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

#3

#3

மேலும், இளமையான தோற்றம், உடல் தோரணை போன்றவையும் எதிர் பாலினத்தவர் மீது ஈர்ப்பு கொள்ள தூண்டுவதாக நிறைய பேர் கூறியுள்ளனர்.

#4

#4

தோற்றம் மற்றும் அழகை அடுத்து, எதிர் பாலினத்தவரின் குரல்வளம் ஈர்ப்பு கொள்வதில் பெரிய அளவில் பங்கு வகிக்கிறது என கருத்து தெரிவித்துள்ளனர்.

#5

#5

என்னதான் அழகாக இருந்தாலும், அவரது நடை மற்றும் பாவனைகள் தான் ஈர்ப்பு கொள்ள முக்கியமான காரணிகளாக இருக்கின்றன என பலரும் கூறியுள்ளனர்.

#6

#6

புத்திக்கூர்மை! ஆம், அழகு என்பது பத்து வருடத்தில் அழிந்துவிடலாம், ஆனால், புத்திக்கூர்மை, அறிவு அழியாதவை. இந்த மாடர்ன் யுகத்தில் புத்திக்கூர்மை சார்ந்தும் பலர் தங்கள் எதிர் பாலினத்தவர் மீது அதிக ஈர்ப்பு கொள்கிறார்களாம்.

#7

#7

சமூகத்தில் மதிப்பு கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு ஒரு நபர் சமூகத்தில் அதிக மதிப்பு கொண்டிருந்தால், அவர் மீது அதிக ஈர்ப்பு கொள்ள தூண்டுவதாக கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Makes You Attractive?

Have you ever wondered what makes you attractive? Well, Human beings are programmed to perceive certain aspects of the human body as attractive or unattractive.