நீங்க இன்னமும் சிங்கிளா இருக்க இந்த 3 தான் காரணம், இத எப்படி மாத்திக்கலாம்!

Posted By:
Subscribe to Boldsky

இங்கே பலர் சிங்கிளாக இருப்பதற்கு காரணம் காதலிக்க பெண் இல்லை என்பதால் தான். உண்மையில், காதலிக்க பெண்கள் இருந்தும், தன்னை காதலிக்கும் பெண்கள் இருந்தும், எனக்கு காதல் வேண்டாம் என இருப்பது தான் சிங்கள்.

நீங்கள் ஏன் சிங்கிளாக இருக்கிறீர்கள் என கேள்வி கேட்டால் பெரும்பாலானவர்கள், இதோ இவனால தான், இவன் கூட எல்லாம் சேர்ந்தா எப்படி பொண்ணு செட் ஆகும் என நண்பர்களை காரணம் காட்டுவார்கள்.

ஆனால், உண்மையில் அவரவர் காதலில் இணைவதற்கும், சிங்கிளாக இருப்பதற்கும் அவரவர் மட்டும் காரணம். உங்கள் வெற்றி தோல்வியை உங்களை தவிர வேறு யாரும் ஊர்ஜிதம் செய்ய முடியாது, அப்படி ஒருவர் செய்கிறார் என்றால், அது உங்களது வெற்றியோ, தோல்வியோ அல்ல.

சரி! பாயிண்டுக்கு வருவோம்... நீங்கள் சிங்கிளா இருக்க நீங்களே எப்படி காரணமா இருக்கீங்க? அத எப்படி மாத்திக்கலாம்... வாங்க பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மதில் மேல் பூனை!

மதில் மேல் பூனை!

நீங்கள் சிங்கிளாக இருப்பதற்கான முதல் காரணம் நீங்களே தான். மதில் மேல் பூனை என்பது போன்ற உங்களது மனம். எப்படி ஒரு ஆண் / பெண்ணிடம் பழகுவது, அவர்களுடன் நெருங்குவதில் இருக்கும் அச்சம் கலந்த உணர்வு போன்றவை தான் உங்களை இன்னும் சிங்கிளாகவே வைத்துள்ளது.

இந்த மதில் மேல் பூனை உணர்வு, உங்களை உணர்வு / உறவு ரீதியாக தைரியமாக ஒரு முடிவை எடுக்கவிடாது. சரியான ஒரு நபர் நம் வழியில் வரை காத்திருப்போம் என்ற எண்ணம் மட்டுமே உங்களுக்குள் வளர்ந்துக் கொண்டிருக்கும்.

கெத்து?!?!

கெத்து?!?!

இந்த மதில் மேல் பூனை எண்ணம் உங்களை ஒரு பிரிவினை நிலையிலேயே வைத்துக் கொள்ளும். ஏதேனும் காரணம் சொல்லி சிங்கிள் தான் கெத்து என ஒப்பேற்ற தான் தோணுமே தவிர, உறவில் இணைவது தான் இயற்கை என்ற வட்டத்திற்குள் உங்களை செல்ல விடாது.

உங்களுக்கு லவ் மேரேஜ் எல்லாம் கஷ்டம். அப்பா, அம்மாவா பார்த்து கல்யாணம் செஞ்சு வெச்சா தான் உண்டு!

தன்னிறைவு!

தன்னிறைவு!

எப்போதும் தன்னிறைவு மட்டுமே போதுமானது என்ற எண்ணம் உங்களுக்குள் இருக்கும். இது உங்கள் தன்னிறைவை தாண்டி, அடுத்த நிலைக்கு யோசிக்க வைக்காது.

ஒரு சரியான நபரை தேர்வு செய்வதை காட்டிலும், தனது மகிழ்ச்சிக்கு இடையூறாக இருந்துவிடுவானா / வாளா என்ற சிந்தனையில் நீங்கள் கடைசி வரை சிங்கிளாகவே இருந்துவிடுவீர்கள்.

இந்த சிந்தனை உங்களை ஒரு காலி பாட்டிலாகவே வைத்துக் கொள்ளும்.

மிங்கிள்? சிங்கிள்?

மிங்கிள்? சிங்கிள்?

உறவு என்பது விட்டுக்கொடுத்து வாழ்வது. அட்ஜஸ் செய்துக் கொள்ளும் மனநிலை வராதவரை மிங்கிளாக முடியாத சிங்கிளாகவே இருக்க வேண்டியது தான்.

மிஸ் அல்லது மிஸ்டர் பர்பெக்ட் என இந்த உலகில் யாருமே இல்லை என்பது தான் உண்மை.

எல்லைகள்!

எல்லைகள்!

இந்த உலகில் எதற்கும் எல்லைகள் இல்லை, நாமாக தான் கோடுகள் வரையறுத்துக் கொண்டு வைத்துள்ளோம்.

நாளையே ஏதேனும் அழிவோ, இயற்கை சீற்றமோ உண்டானால், அந்த எல்லைகளை நாம் கடந்துவிடுவோம். ஏனெனில், எல்லை கொண்டு வரையறுக்கப்பட முடியாத ஒன்று நமக்குள் ஆழமாக இருக்கிறது அதுதான் அன்பும் காதலும்.

வட்டம்!

வட்டம்!

நான் இப்படிப்பட்டவன்/ள் எனது வட்டம், எல்லை இது, இதை தாண்டி எங்கும் போக மாட்டேன், இதற்குள் யாரையும் அனுமதிக்கமாட்டேன் என்ற நிலையில் இருந்து நீங்கள் வெளிவராமல் இருக்கும் வரை சிங்கிளாகவே இருக்க வேண்டியது தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

These are the Three Major Reasons Why You are Still Single!

These are the Three Major Reasons Why You are Still Single!
Subscribe Newsletter