Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
சிறந்த உறவை அமைத்துக் கொள்ள ஆண்கள் இந்த 5 விஷயங்களை செய்ய வேண்டும்!
இங்கு ஒரு ஆண் சிறந்த உறவில் இணைய / அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கு அவர் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.
இல்வாழ்க்கை என்பது சிலருக்கு தானாக அமையும், சிலர் தாமாக அமைத்துக் கொள்ள வேண்டும். சுருக்கமாக கூற வேண்டும் என்றால் நிச்சயம், காதல் திருமணங்கள்.
இதில் எந்த வகை திருமணமாக இருப்பினும், நீங்கள் சில விஷயங்களை அறிந்து, தெரிந்து சரியாக நடந்துக் கொண்டால் மட்டுமே அந்த வாழ்க்கி, உறவு சிறந்த அமையும்.
இதையும் சுருக்கமாக கூற வேண்டும் என்றால், ஒத்தையடி பாதையில், இரட்டை மாட்டு வண்டி ஓட்ட ஆசைப்பட வேண்டாம்...

தேவை அற்றவை!
உங்களுக்கு என்ன வேண்டும் என்று அறிந்து, தெரிந்து செய்யுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும் என்று நீங்கள் அறிந்து கொண்டால், தேவையற்ற விருப்பங்களின் எண்ணிக்கை குறைந்து விடும். இதனால் உங்கள் ஆர்வம் ஒரு இடத்தில் குவியும். இது நடந்து விட்டாலே உறவு ஆரோக்கியமாக அமையும்.

தேர்வு!
உடுத்தும் உடையில் இருந்து, உண்ணும் உணவு வரை, செய்யும் வேலையில் இருந்து, பழகும் நபர்கள் வரை தேர்வு செய்து செய்வது நல்லது. வேண்டாத உறவுகள், தொந்தரவு செய்யும் உறவுகளை வைத்துக் கொண்டு மாரடிக்க வேண்டாம்.

உதிரிகள்!
நீங்கள் உண்மையாகவே ஒரு நிலையான இணைய வேண்டும், அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் ஃப்ளர்ட் செய்வது, பெண்களுடன் வேற்று இன்பத்திற்காக பழகுவது போன்றவற்றை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கட் செய்ய வேண்டும்!
இவர் தான் நமது துணை, இவருடன் தான் இல்வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து விட்டால். வேறு நபர்களை சாய்ஸ்-ல் வைத்துக் கொள்ள நினைக்க வேண்டாம்.

யோசிக்க வேண்டாம்!
"இதுநாள் வரை அவருடன் பழகிவிட்டேன், எப்படி பிரிவது..." என யோசிக்க வேண்டாம். நீங்கள் இல்வாழ்க்கை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால் சிற்றின்பங்களை விட்டுக் கொடுத்து தான் ஆகவேண்டும்.

விஷமாக மாறலாம்!
நீங்கள், "எதற்கு பிரிய வேண்டும், அவரும் யாருக்கும் தெரியாமல் இருந்தால் என்ன..?" என்று நினைக்கலாம். ஆனால், பின்னாளில் உங்கள் இல்வாழ்க்கை சிதற, பிரிந்து போக அதுவே ஒரு காரணியாக அமையலாம்.



Click it and Unblock the Notifications
