நீங்க அட்லீஸ்ட் ஒருதடவையாவது அனுபவிக்க வேண்டிய 10 ரொமாண்டிக் விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ரொமான்ஸிலும் பல வகைகள் உண்டு. சில வகை ரொமான்ஸ்களை நீங்களாக அமைத்துக் கொள்ளவோ, ஏற்படுத்திக் கொள்ளவோ முடியாது.. அதுவாக நடக்க வேண்டும், அதற்கான சூழல் தானாக அமைய வேண்டும். நீங்களாக அந்த சூழலை அமைத்து கொண்டாலும் கூட, அந்தளவிற்கு பெரிய ரிசல்ட் கிடைக்காது.

பெரும்பாலும் சண்டையே போட்டுக் கொள்ளாத கணவன் - மனைவிக்குள் பெரியளவு ரொமான்ஸ் இருக்காது. ஏனெனில், ஒரு பெரிய ரொமான்ஸ் நடக்க வேண்டும் எனில், அதற்கு முன் ஒரு சின்ன சண்டை நடந்திருக்க வேண்டும். உப்பு இல்லாம உணவு ருசிக்குமா? அதே போல தான் சண்டை இல்லாத ரொமான்ஸ்ம்.

சில ரொமான்ஸிற்கு காரணம் சூழல், சில ரொமான்ஸிற்கு காரணம் தம்பதிகள், சில ரொமான்ஸிற்கு காரணமே இருக்காது... அந்த வகையில் உங்கள் உறவில் இந்த பத்து ரொமான்ஸ் சிட்டுவேஷன்கள் நிகழ்ந்துள்ளதா? நீங்கள் அனுபவித்துள்ளீர்களா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சைலன்ட்...

சைலன்ட்...

அது சண்டையா இருக்கலாம், கேலியா இருக்கலாம், ஏதோ ஒரு பெரிய விவாத விஷயமா இருக்கலாம். ஆனா, திடீர்னு ஒரு அமைதி... ரெண்டு பெரும் பேசுறத நிறுத்திட்டு, கண்ணால பேச துவங்குற அந்த ரொமாண்டிக் மொமன்ட். ஒரு தந்திரமான புன்னகை மலரவிட்டு ரொமான்ஸ் ஆரம்பமாகுற சிட்டுவேஷன்.

கட்டிப்பிடி...

கட்டிப்பிடி...

கட்டிப்பிடித்துக் கொள்வது தம்பதி மத்தியில் பெரிய விஷயமல்ல. ஆனால், சாதரணமாக கடிப்பிடித்து விடைபெறும் முன்னர், திடீரென கூடுதலாக சில நொடிகள் அவரை கட்டிபிடித்து, நகரவிடாமல் காதல் தொல்லை செய்வது. உடலை தாண்டி ஈருயிர் அந்த இணைப்பில் இறுக்கமாவது...

சிம்பிள்...

சிம்பிள்...

ரொம்ப சிம்பிளா தான் பேசிட்டு இருந்திருப்பீங்க... பட் ஒரு செகண்ட்ல ஒரு அணைப்பு இரும்பை ஈர்க்கும் காந்தம் போல கண்ணிமைக்கும் நொடிக்குள் பூக்கும் அந்த ரொமான்ஸ். உங்க துணையின் தீண்டல்களை அனுபவிக்க துவங்கும் தருணம்...

ஹஸ்கி வாய்ஸ்!

ஹஸ்கி வாய்ஸ்!

ஏதோ ஒன்று பற்றி பேசிக் கொண்டிருந்திருபீர்கள், அல்லது ஏதனும் படம் பார்த்துக் கொண்டிருந்திருபீர்கள். திடீரென துணையின் குரல் ஹஸ்கியாக மாறும்... அவரது கண்கள் உங்களை ஏக்கங்களுடன் காணும்... ஒரு மெல்லிய அணைப்பு, மூக்கும், மூக்கும் உரசிக் கொள்ளும்... இதழ்கள் நமட்டுச்சிரிப்புடன் இடைவெளியில் இருக்கும்.

பிளான் கேன்சல்டு...

பிளான் கேன்சல்டு...

நீங்கள் இருவரும் எங்கேனும் செல்ல திட்டமிட்டு, ஆனால்... கடைசி நேரத்தில் நீங்கள் அதிக வேலை காரணமாக அல்லது உங்கள் தோழருடன் திடீரென அதிக நேரம் செலவழித்த பின்னர் மொத்த பிளானையும் மறந்து, தலையை சொறிந்துகொண்டு வீடு வந்து சென்றால்... உங்கள் துணையும் அதே போல ஒரு காரணம் கொண்டு நான் பிளான் பண்ணதையே மறந்துட்டேன் என சொல்லும் போது ஒரு புதிய பிளான் பிறக்கும், அதை வீட்டில் மட்டுமே அரங்கேற்ற முடியும்.

கண்ணடி...

கண்ணடி...

ஏதோ ஒரு குறும்புத்தனத்தை செய்துவிட்டு இருவரும் வீட்டை வியப்பில், ஆச்சரியத்தில் மூழ்கடிப்பது. அல்லது சிறுப்பிள்ளை தனமாக ஏதேனும் தவறு செய்துவிட்டு கிரேட் எஸ்கேப் என கண்ணடித்து கொள்வது. பிறகு தனியாக அறைக்குள் வந்து விழுந்து, விழுந்து சிரிப்பது.

கண்களால் கைது செய்...

கண்களால் கைது செய்...

வேலை அல்லது வேறு ஏதேனும் காரணமாக கொஞ்சம் நாள் பிரிந்திருந்து, பிறகு மீண்டும் ஒருவரை ஒருவரை நேரில் காணும் போது கண்கள் மட்டுமே பேசிக் கொள்ளும்... ஆரத்தழுவி அசையாது ஒரே இடத்தில் நிற்கும் அந்த தருணம்.

என்னவிலை அழகே...

என்னவிலை அழகே...

ஏதேனும் வீட்டு நிகழ்ச்சியின் போதோ, வெளியிடங்களுக்கு செல்லும் போதோ துணை, முன் என்றும் கண்டிராத அளவிற்கு ஆஹா! அழகில் ததும்பி நிற்கும் போது.. பேச வார்த்தை இல்லாமல் அசந்து போய் பார்ப்பது...

ஃபீல்...

ஃபீல்...

எந்த ஒரு காரணமும் இன்றி, திடீரென உணர்ச்சிவசப்பட்டு ஒருவரை ஒருவர் கட்டியணைத்து கொள்வது. கைகளை தழுவி, விரல்களை பிடித்து, தலைமுடியை வருடி... ஏதும் பேசிக் கொள்ளாமல், ஏதேதோ செய்யும் அந்த மௌனம் பேசும் ரொமாண்டிக் தருணம்.

புயலுக்கு பின் அமைதி...

புயலுக்கு பின் அமைதி...

எங்கோ துவங்கி எங்கோ முடியும் ஒரு பெரிய சண்டையிட்டு... பிறகு பேரமைதி காத்த பிறகு.. இப்போ எதுக்கு தேவையில்லாம நாம சண்டப்போட்டுக்கிட்டு இருக்கோம் என படுக்கையில் ஒருவரை ஒருவர் மன்னித்துக் கொண்டு... சரி இனிமேல் இப்படி தேவையில்லாம சண்டப்போடக் கூடாது என வாக்குறுதி கொடுத்துக் கொள்ளும் ரொமான்ஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Some Romantic Situations That Every Couple Should Experience!

Some Romantic Situations That Every Couple Should Experience!
Subscribe Newsletter