நீங்கள் ஒரு சிறந்த உறவுக்கு தகுதியில்லை என நினைக்கிறீர்களா? அதற்கு இது தான் காரணம்!

Written By: Lakshmi
Subscribe to Boldsky

அனைவருமே தனக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைக்க வேண்டும். அவருடம் மகிழ்ச்சியாக சில விஷயங்களை வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என பற்பல கனவுகளோடு உற்சாகமாக தான் இருப்போம். ஆனால் காலப்போக்கில் அந்த கனவுகள் எல்லாம் அழிந்து நமக்கு இனி நல்ல வாழ்க்கை துணை கிடைக்கவேமாட்டார் என நினைப்போம்.

செக்ஸ்டிங்களில் டீன் பருவத்தினர் ஈடுபட காரணங்கள்!

இது ஏன் நடக்கிறது? இதற்கு உங்களது வாழ்க்கையில் நடந்த சில எதிர்மறையான விஷயங்கள் காரணமாக இருக்கலாம். அல்லது உங்களை பற்றிய தாழ்வுமனப்பான்மையாக இருக்கலாம். உங்களது இந்த எண்ணத்திற்கு என்ன காரணம் என்பதை இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

நிச்சயதார்த்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கை கட்டாயம் இப்படி மாறும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. தவறான எண்ணம்

1. தவறான எண்ணம்

உங்களை பற்றி பிறர் கிண்டல் செய்வது, அல்லது நீங்களே இவரிடம் இது இருக்கிறது நம்மிடம் இல்லை என்று உங்களை நீங்களே தாழ்வாக நினைத்து கொண்டு, யாராவது ஒரு ஆண் உங்களிடம் பேச விரும்பினால் கூட நீங்கள் இடம்தராமல் இருக்க காரணமாக அமையும்.

2. தாழ்வான மதிப்பீடு

2. தாழ்வான மதிப்பீடு

உங்களை நீங்களே மிக மோசமாக கற்பனை செய்து கொண்டு, ஆம் நாம் அப்படி தான் இருக்கிறோம் என நீங்களே உங்களது மனதிற்குள் ஒரு புரிதலுக்கு வந்துவிடுவீர்கள். உங்களுக்கு என்ன தான் ஆசை இருந்தாலும் அது எல்லாம் நமக்கு நடக்காது என நினைத்துக்கொள்வீர்கள்.

3. தொந்தரவான உறவு

3. தொந்தரவான உறவு

உங்களுக்கு ஒரு காதல் அமைந்தாலும் கூட உங்களது இந்த தாழ்வு மனப்பான்மையால் உங்களது காதலை காப்பாற்றிக்கொள்ள தேவையில்லாமல் படாதபாடுபடுவீர்கள். நீங்கள் செய்யும் தேவையற்ற காரியங்களால் உங்கள் உறவில் ஒரு மகிழ்ச்சியே இல்லாமல் போய்விடும்.

4. நெருங்கிய நண்பர்

4. நெருங்கிய நண்பர்

நீங்கள் உங்களது மிக நெருங்கிய உங்களை அதிகமாக புரிந்து கொண்ட ஒரு நபரை காதலிக்க முன்வரமாட்டீர்கள். அவரை விட்டு தள்ளி செல்வீர்கள்.

5. இவரை தான் பிடிக்கும்

5. இவரை தான் பிடிக்கும்

நீங்கள் உங்களது ஒரு பகுதியை மட்டுமே நேசிப்பவரை தான் விரும்புவீர்கள். அவர் உங்களது இனிமையான பகுதியை தான் விரும்புவார். உங்களது கோபம், சோகம், கவலை என பிறவற்றை வெறுப்பார். உங்களுக்கு நல்ல காதலன் கிடைப்பார் என்ற நம்பிக்கை போக இதுவும் ஒரு காரணமாக அமையும்.

6. உங்களை கவர்ந்தவர்

6. உங்களை கவர்ந்தவர்

நீங்கள் ஒரு இடத்தில் உங்களை வெளித்தோற்றத்தினால் கவர்ந்தவரை சற்றும் அவரை பற்றிய முழுமையான புரிதல் இன்றி காதலிக்க நேர்ந்தால், அவரது உண்மையான முகம் தெரிந்ததும் நீங்கள் ஏமாந்து போவீர்கள்.

7. கனவு காதலன்

7. கனவு காதலன்

நீங்கள் கிடைக்கவே கிடைக்காத ஒரு நபரை கனவில் நினைத்துக்கொண்டு அவரை அடைய வேண்டும் என நினைத்துக்கொண்டு இருந்தால் உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். நடைமுறைக்கு ஏற்றவாறு கனவு இருந்தால் சிறப்பு. இல்லை என்றால் நல்ல வாழ்க்கை துணை நமக்கு அமையமாட்டார் என்ற எண்ணம் தான் வரும்.

8. காதலில் மட்டும் மகிழ்ச்சி இல்லை

8. காதலில் மட்டும் மகிழ்ச்சி இல்லை

உங்களுக்கு பிடித்த வேலை, பிடித்த நண்பர்கள், பிடித்த பொழுதுபோக்கு என அனைத்திலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் ஆனால் காதலில் மட்டும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பீர்கள். இது உங்களது வாழ்க்கையையே இருட்டாக்கும்.

9. சிந்தனை

9. சிந்தனை

நீங்கள் இந்த காதல் நன்றாக இருக்கும் என்பது பற்றி சிந்திப்பீர்கள். ஆனால் இந்த காதலுக்கு நாம் சரியாக வருமா என்பது பற்றி சிந்திக்கமாட்டீர்கள்

10. மகிழ்ச்சியாக இருக்கிறாயா?

10. மகிழ்ச்சியாக இருக்கிறாயா?

உங்களது குரலை வைத்து அனைவரும் நீ நன்றாக இருக்கிறாயா என கேட்பார்கள். நீங்கள் நான் நன்றாக இருக்கிறேன் என கூறுவீர்கள் ஆனால் நீங்கள் சொல்வது உண்மையில்லை என அவர்களுக்கு தெரியும்.

11. பாதுகாப்பின்மை

11. பாதுகாப்பின்மை

நீங்கள் உங்களது காதலில் ஒரு பாதுக்காப்பின்மையை உணருவீர்கள். அதுமட்டுமின்றி அனைவரது காதலும் பாதுகாப்பற்றதாக தான் இருக்கும் என நினைப்பீர்கள்.

12. நண்பர்கள்

12. நண்பர்கள்

உங்களது நண்பர்கள் உங்களை மிகவும் அதிகமாக தாழ்த்தி பேசுவார்கள். இவ்வாறு பேசுவது உங்களை அவர்களிடம் மனம் திறந்து பேச அனுமதிக்காது. நீங்கள் வேறு வழி இன்று அவர்களது நட்பை தொடர்வீர்கள்.

13. சங்கடமான சூழ்நிலை

13. சங்கடமான சூழ்நிலை

ஒருவரை சந்தித்து பேச மிகவும் சங்கடமாக உணர்வீர்கள். உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இருக்காது. இதுவும் உங்களுக்கு காதல் கிடைக்காததற்கான காரணமாக அமையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs You Still Don not Think You are Worth a Relationship

Signs You Still Don not Think You are Worth a Relationship
Story first published: Monday, July 3, 2017, 18:30 [IST]