அவனை ஏமாற்றியதில் எனக்கு துளியும் வருத்தம் இல்லை - உண்மை கதை!

Posted By:
Subscribe to Boldsky

2012ல் பள்ளிப்படிப்பை முடித்து வெளியேறும் போது நான் ஒரு இளம் அப்பாவி பெண். அந்த நாட்களில் எனது சுய மதிப்பு மிகவும் குறைவாக இருந்தது, அது கடினமான நாட்களாக கழிந்தன.

என் குழந்தை பருவம் பிரகாசமானதாகவோ, கண்கவர் வண்ணமாகவோ அமைந்திடவில்லை. எனது அப்பா ஒரு அரசு ஊழியர் என்பதால், அடிக்கடி பணியிட மாற்றம் நடந்துக் கொண்டே இருக்கும், நாங்கள் வெவ்வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்து கொண்டே இருந்தோம்.

இப்படியாக கழிந்துக் கொண்டிருந்த என் வாழ்வில், ஒரு நாள் சமூக இணையத்தளத்தில் எனது பள்ளி சீனியருடன் மீண்டும் அறிமுகம் கிடைத்தது. நாங்கள் இருவரும் கேசுவலாக பேசிக்கொள்ள துவங்கினோம்.

மெல்ல, மெல்ல, அது சீரியஸான உறவாக மாறி காதலில் விழுந்தோம். எங்கள் எதிர்காலம் பற்றி திட்டமிட்டோம், திருமணம், குழந்தைகள், சேமிப்பு என நாங்கள் பேசாததே இல்லை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரு தடை...

ஒரு தடை...

எங்கள் உறவில் இருந்த ஒரே தடை... அவர் முஸ்லிம். மிக திடமாக, வலிமையாக தனது மதத்தை கடைப்பிடிக்கும் நபர். அவர் எனக்கு நிறைய நிபந்தனைகள் விதிக்க துவங்கினார். புர்கா அணிய வேண்டும், இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும், எனது வாழ்வியல் முறையில் பல மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என நிபந்தனை பட்டியல் பெரிதானது.

2 வருடங்கள் கழிந்தன...

2 வருடங்கள் கழிந்தன...

எங்கள் உறவு பயணம் இரண்டு வருடங்கள் கடந்தது. கொஞ்சம், கொஞ்சமாக விஷயங்கள் விசித்திரமாக மாற துவங்கியது. அவர் என்னை என்றாவது ஒரு நாள் தான் சந்திப்பார். எனது அழைப்புகளை ஏற்க மாட்டார். ஏன் ஏற்கவில்லை என்பதற்கு நொண்டி சாக்குகள் கூறுவார்.

இப்படியாக திடீர் மாற்றங்கள்... உறவில் விரிசல் விழ துவங்கியது.

வேலையில்லை...

வேலையில்லை...

எங்கள் உறவு மெல்ல, மெல்ல மோசமான நிலையில் இருந்து அபாயகரமான நிலைக்கு சென்றது. அவருக்கு வேலையும் இல்லை. எப்படி வேலையே இல்லாமல் அவர் வீட்டுக்கு வாடகை கொடுக்கிறார், பகட்டான வாழ்க்கைக்கு எங்கிருந்து பணம் வருகிறது...? என எனக்கு ஒரு பெரிய சந்தேகம் இருந்தது.

இப்படியே அபாயகரமான நிலைக்கும் அப்பாற்பட்ட நிலைக்கு எங்கள் காதல் உறவு சென்றது...

20 வயது பெண்...

20 வயது பெண்...

அப்போது எனக்கு வயது இருபது. சித்தப்பிரமை பிடித்தது போல இருந்தேன். தூக்கம் வராது, மக்கள் மீதான நம்பிக்கை இழந்திருந்தேன். ஆனால், நான் அப்போது தான் எனக்காக வேலை செய்ய துவங்கினேன்.

எனது உடல் எடையை குறைக்க துவங்கினேன். இது தான் எனது வாழ்வில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. முன்பு என்றும் இல்லாதது போல, எனது வாழ்க்கை மிகவும் பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டது.

சந்தேகம்...

சந்தேகம்...

நான் எதற்காக உடல் எடை குறைக்கிறேன் என எனது காதலனுக்கு சந்தேகம் எழ துவங்கியது.ஏதேனும் வேறு ஆண்களுடன், அல்லது எனது உறவுக்கார சகோதரர்களுடன் உறவில் உள்ளேனா என சந்தேகிக்க துவங்கினான்.

பல சமூக தளங்களில் இருந்து உளவு பார்க்க துவங்கினான். இந்த சந்தேக நோய், உளவு பார்ப்பது ஓராண்டு காலன் தொடர்ந்தது. எனது வாழ்க்கை மொத்தத்தையும் உறிஞ்சி எடுத்துவிட்டான். என்னால் எப்படி பதில் கூறுவது, புரியவைப்பது என்றே தெரியவில்லை.

நம்பிக்கை இழந்தேன்...

நம்பிக்கை இழந்தேன்...

ஒரு கட்டத்தில் நான் அவன் மீதான நம்பிக்கை இழந்தேன். கடவுள் என் மீது கருணை மழை பொழிந்தார். என் வாழ்வில், எனது வாழ்க்கையை மாற்றும்படியான ஒரு ஆண் நுழைந்தான். அவன் எனது செகண்டரி பள்ளி பேட்ச் மாணவன். அவன் ஓர் உறவில் நிம்மதி, அமைதி எப்படி இருக்க வேண்டும் என காட்டினான்.

அடிக்கடி என்னை வந்து சந்தித்து சென்றான். என்னை சந்தேகித்து கொண்டிருந்த காதலனை நான் ஏமாற்றினேன். ஒரு நாள் எனது காதலன் இதை கண்டறிந்தான்.

ஏசினான்!

ஏசினான்!

மிகவும் கேவலமாக ஏசினான். என்னுடன் சண்டையிட்டான். முரட்டுத்தனமாக நடந்துக் கொண்டான். எனது நண்பனை பிளாக்மெயில் செய்தான். எனக்கு இதில் வருத்தமோ, குற்றவுணர்வோ துளியும் இல்லை. நேரடியாக அவன் முகத்தின் முன், என்னை விட்டு சென்றுவிடு என திட்டுவிட்டேன்.

ஒரு கால்...

ஒரு கால்...

ஓராண்டுக்கு பிறகு, ஒரு தெரியாதை எண்ணில் இருந்து எனக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. அதை ஏற்று பேசிய போது, எதிர் முனையில் இருந்து ஒரு பெண் பேசினாள். எனது எக்ஸ் காதலன், அவளை உணர்வு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏமாற்றிவிட்டான் என கூறினாள். அது குறித்து குறுஞ்செய்திகளும் அனுப்பினாள்.

உறவில்...

உறவில்...

தன்னுடன் அவன் உறவில் இருந்தான், அவளுடன் மட்டும் இல்லாது, அதே சமயத்தில் வேறு ஒரு பெண்ணுடனும் உறவில் இருந்துள்ளான். இருவரிடமும் பணம் ஏமாற்றியுள்ளான் என்பதும் தெரியவந்தது.

அந்த நொடி தான், நான் வருந்தாதற்கு மிகவும் இலகுவாக உணர்ந்தேன். சில சமயம் அவனை ஏமாற்றிவிட்டோம் என்ற எண்ணம் வரும். ஆனால், அதுகுறித்து இனிமேல் எண்ண போவதில்லை.

நம்பவே முடியவில்லை..

நம்பவே முடியவில்லை..

இவனையா ஒரு காலத்தில் நான் திருமணம் செய்துக் கொள்ள திட்டமிட்டிருந்தேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இவனுக்காக எனது பெற்றோர், நண்பர்களை எல்லாம் விட்டு செல்ல திட்டமிட்டிருந்தேன். என்னை நானே அதிக நாட்கள் வருத்தி கொண்டேன். அனைத்தும் ஒரு கேடுகெட்ட நபருக்காகவா?

இளம்பெண்களே!

இளம்பெண்களே!

நான் இன்றைய இளம் பெண்களுக்கு ஒரு விஷயத்தை கூறிக்கொள்ள விரும்புகிறேன். படிக்கும் காலத்தில் காதல் வேண்டாம். உங்களுக்கான வேலையை தேர்ந்தெடுங்கள். உங்களுக்கான ஆண் உங்களை தேடி வருவான். உங்கள் பெற்றோரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

அவனை பிரிந்த பிறகு தான், என் வாழ்வில் எனக்கான அனைத்தும் கிடைத்தது. இப்போது எனக்கான சிறந்த துணை இருக்கிறார். எனது வாழ்க்கை, மற்றும் வேலை சிறப்பாக அமைந்துள்ளது. நான் செய்த தவறை நீங்களும் செய்திட வேண்டாம்.

நான் எனது நன்றியை கடவுளுக்கும், எனது பெற்றோருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Real Story: I'm Not Worried or Guilt That I Cheated!

Real Story: I'm Not Worried or Guilt That I Cheated!
Subscribe Newsletter