அவனது ஐந்தாறு காதலிகளுள் நானும் ஒருத்தி... - My Story #047

Posted By:
Subscribe to Boldsky

எனது முதல் பணியிடத்தில் தான் அவனை சந்தித்தேன். என் வாழ்வில் மிக விரைவாக முக்கிய நபராக மாறினான். எனது பேட்ச்சில் அவன் தான் சிறந்த ஆண் என்று குறிப்பிடுவேன். உண்மையில், அவனில் நான் விழுந்துவிட்டேன் என்று தான் கூற வேண்டும்.

அவனை சந்தித்து சில நாட்கள் இருக்கும். ஒரு நாள் நாங்கள் ஒன்றாக சாப்பிட்டு கொண்டிருந்தோம். அப்போது தான் அவன் ஏற்கனவே ஒரு முஸ்லிம் பெண்ணை ('A') காதலிப்பதாக கூறினான். அப்போது நான் பெரிதாக வருத்தம் கொள்ளவில்லை. அவன் மீது கிரஷ் மட்டும் தான் இருந்ததே தவிர காதல் எல்லாம் இல்லை.

ஒரு நபர் மீது எனக்கு கிரஷ் அல்லது ஈர்ப்பு இருந்தால் அதை அவர்களிடமே நேரடியாக கூறிவிடுவேன். பேச தயங்க மாட்டேன். நான் எப்போதுமே இப்படி தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அந்த நாள்...

அந்த நாள்...

அவன் அந்த மதிய உணவு இடைவேளையில் அவனது காதலி பற்றி கூறும் போது. அவனிடம் உன்மேல் எனக்கு கிரஷ் இருக்கிறது என்பதை கூறிவிடலாமா என நினைத்தேன். அவன் தான் ஆல்ரெடி கமிட்டட் என தெரியுமே. சொல்வதால் எந்த தப்பும் இல்லையே. நான் இதனால் ஏதும் நடக்காது என நினைத்திருந்தேன். எனவே, அன்று இரவே அவனிடம் எனது கிரஷ் விஷயம் பற்றி கூறினேன்.

அவனும்...

அவனும்...

நான் கூறிய உடனேயே, அவனும் என் மீது அதே மாதிரியான உணர்வு கொண்டுள்ளதாக கூறினான். இந்த பதில் நான் எதிர்பாராத ஒன்று. பிறகு, அவனது காதலி பற்றி என்னிடம் விவரிக்க ஆரம்பித்தான். நான் ஒரு ஹிந்து, காதலி முஸ்லிம். எனவே, நாங்கள் திருமணம் செய்துக் கொள்வது மிகவும் கடினம் என கூறினான்.

ப்ரேக்-அப்!

ப்ரேக்-அப்!

எனவே, ஏற்கனவே அவர்கள் இருவரும் ப்ரேக் - அப் செய்ய முடிவு செய்துவிட்டதாக கூறினான். இந்த முடிவை இருவரும் மனமொத்து தான் எடுத்துள்ளனர். மேலும், அந்த பெண் இன்னும் சில மாதங்களில் திருமணம் செய்துக் கொள்ள போவதாகவும் கூறினான்.

பிறகு நானும் எனது எக்ஸ் காதலன் பற்றி அவனிடம் கூறினேன். எனது எக்ஸ் காதலன் என்னை விரும்பும் போது வேறு ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டான் என்பதை கூறினேன். அந்த அப்பாவி பெண்ணிற்காக எனது காதலை தியாகம் செய்தேன் என்பதையும் கூறினேன்.

பகிர்வுகள்!

பகிர்வுகள்!

இப்படியாக நாங்கள் இருவரும் எங்கள் எக்ஸ் காதல் பற்றி பேசி பகிர்ந்த பிறகு தான் எங்கள் காதல் பயணம் துவங்கியது. அவனது காதலி 'A'வுக்கும் வேறு ஒரு ஆணுடன் நிச்சயம் ஆகிவிட்டது. பிறகு, அவளும் அந்த ஆணுடன் காதலில் விழுந்திருப்பார். அவர்கள் இருவரும் சில மாதங்களில் திருமணம் செய்துக் கொள்ள போகிறார்கள். எனவே, இப்போது அந்த எக்ஸ் காதலி எங்கள் வாழ்க்கைக்குள் அறவே நுழைய வாய்ப்பில்லை.

மகிழ்ச்சி!

மகிழ்ச்சி!

நானும் எனது இந்நாள் காதலனும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். ஒரு நல்ல நாளில் 'L' எனும் பெண் ஒருத்தி என் வாழ்வுக்குள் வந்தால். அந்த 'L' எனும் பெண்ணுடன், எனது இந்நாள் காதலன் கடந்து சில வருடங்களாக உறவில் இருப்பதாக கூறினாள். இது என் வாழ்வில் பேரதிர்ச்சியை அளித்தது.

நான் அவனிடம் அந்த 'L' எனும் பெண்ணை பற்றி கேட்டேன். 'L' பொய் கூறுகிறாள் என கூறினான் இவன். அதற்கு அடுத்த நாளே அந்த 'L' எனும் பெண் எனக்கு கால் செய்தாள். நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என கூறிவிட்டு அழைப்பை கட் செய்துவிட்டாள்.

மன்னிப்பு!

மன்னிப்பு!

பிறகு எனது காதலனிடம் மன்னிப்பு கேட்டேன். பிறகு சில மாதங்கள் எங்கள் உறவு நிம்மதியாக சென்றது. எல்லா காதல் கதைகளையும் போல ஏற்றத்தாழ்வுகளும், சண்டைகளும் கலந்தே இருந்தது. மாற்றி, மாற்றி மன்னிப்பு கேட்டுக் கொள்வோம். எனக்கு மன்னிப்பு கேட்பதில் ஈகோ எல்லாம் கிடையாது. நான் செய்தது தவறு என உணர்ந்தால் தயங்காமல் மன்னிப்பு கேட்டுவிடுவேன்.

கடினமான காலங்கள்...

கடினமான காலங்கள்...

அவனது கடினமான காலங்களில் நான் உதவியும் உள்ளேன். நான் பெரும் அளவில் கடன் வாங்கி அவனுக்கு பணம் கொடுத்து உதவினேன். இப்படியாக எங்கள் உறவு ஸ்மூத்தாக சென்றுக் கொண்டிருந்தது.

கடந்த வாரம், நான் யாரிடம் இருந்து பணம் வாங்கி கொடுத்தேனோ, அந்த நபர் என்னிடம் பணத்தை திருப்பிக் கொடுக்க கூறி மிகவும் கடுமையாக நடந்துக் கொண்டார். அந்த நபர் எனது சகோதரிக்கும் கால் செய்து எல்லாவற்றையும் கூறிவிட்டார். எனது சகோதரிக்கு இது ஏற்கனவே தெரியும். பத்து நாட்களில் பணத்தை திருப்பி தருவதாக வாக்களித்தோம்.

சண்டை!

சண்டை!

இதனால் எங்களுக்குள் பெரிய சண்டை வந்தது. நான் அவனை நேற்று சந்தித்தேன். நாங்கள் சண்டையிட்டு பிரிந்துவிடலாம் என்ற எல்லைக்கு சென்றுவிட்டோம். டோம். ஆனால், கண்டிப்பாக பணத்தை திருப்பி தந்துவிடுவதாக வாக்குறுதி அளித்தான். மேலும், உன்னைவிட்டு விலக மாட்டேன் என்றும் கூறினான்.

பிறகு நாங்கள் இருவரும் சமாதானம் ஆனோம். வீடு திரும்பும் போது அவனுக்கு ஒரு கால் செய்தது. உடனே போனை எடுத்துக் கொண்டு கொஞ்ச தூரம் நகர்ந்து சென்றான். அப்போது தான் அவன் மீது எனக்கு சந்தேகம் எழுந்தது.

யாருடன் பேசுகிறாய் என கேட்டதற்கு, தனது அக்காவுடன் பேசுவதாக கூறினான். சரி அவரது நம்பரை கொடு நானும் பேசுகிறேன் என்றும். நம்பர் தர மறுத்துவிட்டான். நான் அவனது போனை பிடிங்கி பார்த்தேன். அவன் என்னிடம் இருந்து மொபைலை மீண்டும் வாங்குவதற்குள் அந்த எண்ணை எடுத்துவிட்டேன்.

அதே 'L'

அதே 'L'

அந்த நம்பர் என்னுடன் பேசிய அதே 'L' . நான் அவளுக்கு கால் செய்து பேசிய போது தான். அந்த 'L' எனும் பெண்ணும், அவளும் இன்னும் உறவில் இருப்பது தெரிய வந்தது. அதை அவளும் ஒப்புக் கொண்டாள்.

அவன் என்னுடன் உறவில் இருக்கிறான் என தெரிந்தும், ஏன் நீ இப்படி செய்கிறாய். மேலும், அவன் ஏற்கனவே 'A' எனும் பெண்ணை நான்கு வருடம் காதலித்தை தெரிந்துமா நீ இப்படி செய்கிறாய் என கோபமாக பேசினேன்.

அதிர்ச்சி!

அதிர்ச்சி!

'L' எனும் பெண்ணுக்கு 'A' பற்றி தெரியவே இல்லை. 'L' கடந்த ஓராண்டு காலமாக தான் இவனுடம் பழகி வருகிறாள். அவளுக்கு 'A' தெரியாது என்பது எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நான் அந்த நான்கு வருட காதல் பற்றியும் 'L' எனும் பெண்ணிடம் கூறினேன்.

நேற்று இரவு நானும் அந்த 'L' எனும் பெண்ணும் ஒருமணிநேரம் பேசியிருப்போம். என் (எங்கள்) காதலன் இன்னும் இந்த உண்மையை ஒப்புக் கொள்ள மறுக்கிறான்.

ஃபேஸ்புக்!

ஃபேஸ்புக்!

அவனது ஃபேஸ்புக் ஓபன் செய்து பார்த்த போது 'L' உடன் அவன் பேசிய சாட் ஹிஸ்டரி கிடைத்தது. அவ்வப்போது அந்த 'L' பெண்ணை காதலிப்பதாக பேசியுள்ளான். இந்த குறுஞ்செய்தி ஸ்க்ரீன்ஷாட் கொண்டு அவனிடம் பேசினேன். அது வெறும் நட்பான செய்திகள் எனது எனக்கு தெரியும்.

ஆகையால், என்னால் உன்னை திருமன்பம் செய்துக் கொள்ள முடியாது என கூறினேன். நான் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் எனது மனதை மாற்றிக் கொண்டே இருப்பேன் என்பதை அறிந்து என் மனதை மாற்ற முயற்சித்தான்.

இன்னும் ஐந்து நாட்கள் அவகாசம் தருகிறேன், எனது பணத்தை முழுமையாக தந்துவிட்டு என் வாழ்க்கையை விட்டு சென்றுவிடு என கூறி திட்டி நகர்ந்தேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Real Story: He has More Girlfriends, But He Says, He Want to Marry Me!

Real Story: He has More Girlfriends, But He Says, He Want to Marry Me!
Subscribe Newsletter