தாஜ்மஹாலைக் கட்டிய கோபால கிருஷ்ணன் பற்றி தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

செய்தியை கேட்டதிலிருந்து ஒன்றும் விலங்கவில்லை. எரிச்சலாய் வந்தது அந்த கிழவனுக்கு.

ஏன் தாத்தா ஒரு மாதிரி இருக்க? பேத்தி கேட்டாள் பதில் வரவில்லை.

மாத்திர போட்டாச்சா? பாட்டி கேட்டாள் போடாம எங்க போகப்போறேன் சும்மா ஏன் நொய் நொய்ங்கிற தாத்தாவின் வார்த்தைகளில் அவ்வளவு எரிச்சல் அதை விட உக்கிரமாக இருந்தது அவரின் முகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாட்டி மீது காதல் :

பாட்டி மீது காதல் :

அந்தக் காலத்திலேயே காதல் திருமணம் செய்து ஊர் ஃபேமஸ் ஆனவர். இன்றைக்கும் ஊருக்குச் சென்றால் கூட அதான் அன்னைக்கு தொழுவத்துல ஒளிஞ்சிருந்து கல்யாணம் கட்டிகிட்டான்ல அவனோட பேத்தி என்று தான் அறிமுகம் கிடைக்கும்.

ஊரில் நடந்த ஏதோ ஒரு கூட்டத்தில் பங்கேற்க நண்பர்களோடு வந்தவருக்கு பாட்டியின் மீது காதல். எப்படியோ பார்த்து தூது அனுப்பி பாட்டியை சம்மதிக்க வைத்துவிட்டார்.

Image Courtesy

தொழுவத்தில் காத்திருப்பு :

தொழுவத்தில் காத்திருப்பு :

பாட்டி வீட்டை விட்டு வெளியேறும் சமயத்தில் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் அலர்ட் ஆகிவிட்டார்களாம். வேறு வழி பாட்டி வரும் வரை காத்திருக்க முடியாது என்று சொல்லி தாத்தா சுவர் ஏறி குதித்து ஒரு இரவு முழுக்க தொழுவத்திலேயே காத்திருக்கிறார்.

விடிந்ததும் கோலமிட வந்த பாட்டியை இழுத்துக் கொண்டு ஓடிவிட்டார் தாத்தா.

Image Courtesy

மொட்ட மலையா? தாஜ்மஹாலா? :

மொட்ட மலையா? தாஜ்மஹாலா? :

அப்பா சிறுவயதில் இருக்கும் போது, காதல் மயக்கத்தில் பாட்டியிடம் ஏதேதோ பில்டப்புகளை எல்லாம் கொடுத்திருப்பார் போல... வீட்டில் ஏதேனும் சண்டை வந்தால் என்ன பண்ணியிருக்க? எனக்கு என்ன பண்ணியிருக்க மூணு வேலைக்கு நல்லா வடிச்சு கொட்றத திங்கிற ஒரு தாஜ்மஹாலுக்கு கூட்டிட்டு போயிருப்பியா?

இங்க பக்கதூர்ல இருக்குற மொட்டை மலையவே கண்ணுல காட்டல இதுல துரை தாஜ்மஹால் கிழிக்கப் போறாரு... என்று கொணட்டுவாளாம்.

Image Courtesy

தாஜ்மஹால் சுற்றுலா :

தாஜ்மஹால் சுற்றுலா :

ஒரு வழியாய் மூன்று வருடம் தீபாவளிக்கு கூட புதுத் துணி எடுக்காமல் பணத்தை சேமித்து குடும்பத்துடன் தாஜ்மஹால் சுற்றுலாவுக்கு சென்று வந்திருக்கிறார்கள்.

இன்றைக்கும் தாத்தா ரசித்து சொல்லக்கூடிய கதைகளில் தாஜ்மஹால் பிராயணம் கண்டிப்பாக இடம் பெறும். தன்னுடைய காதல் அரங்கேற்றத்தை விட தாஜ்மஹால் பயணத்தை சொல்லிக் கொண்டேயிருப்பார்.

Image Courtesy

 செய்தி :

செய்தி :

சமீபத்தில் சுற்றுலா தளங்களுக்கான பட்டியலில் தாஜ்மஹால் இடம் பெறவில்லை என்பது மற்றவர்களை எப்படி பாதித்ததோ இல்லையோ தாத்தாவுக்கு மிகவும் சங்கடமாகிவிட்டது.

உணர்வோடு கலந்துவிட்டு ஒரு விஷயம் அதில் ஏற்படுகிற மாற்றங்களை ஏற்றுக் கொள்வதற்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்படும்.

மீண்டும் பார்த்து விட ஆசை :

மீண்டும் பார்த்து விட ஆசை :

மாலை உட்கார்ந்து பேப்பர் புரட்டிக் கொண்டிருந்தவரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தேன்.

நம்ம வேணா ஒரு தடவ எல்லாரும் சேர்ந்து தாஜ்மஹால பாத்துட்டு வருவோமா?

அது என்ன பக்கத்தூர்லயா இருக்கு காலைல ஏறினா நைட் போய் இறங்கிட்டு சுத்திப் பாக்குறதுக்கு. அதுவும் இந்த வயசுல ரொம்ப கஷ்டம் தாத்தா...

எனக்கென்னடி ஜம்முன்னு இருக்கேன். நம்ம சீக்கிரம் போய் பாத்ரணும் இல்ல நம்ம உடனே போயாகணும் உங்கப்பண்ட்ட சொல்லு...

ஏன் தாத்தா இவ்ளோ அவசரப் பட்ற? தாஜ்மஹால் எங்க போயிடப்போது.

தாஜ்மஹால் நிறம் மாறினால்? :

தாஜ்மஹால் நிறம் மாறினால்? :

அதில்ல இதோ இந்த செயிண்ட் மேரீஸ் சர்ச்ச ஏதோ காரணம் சொல்லி முழுசா வெள்ள பெயிண்ட் அடிச்சு வச்சானுகள்ள அது மாதிரி காவி பெயிண்ட் அடிச்சுட்டாங்கன்னா?

பேசமா ஷாஜகானோட இன்னொரு பேரு கோபாலகிருஷ்ணனு மாத்தி விட்றணும்.

யூ.... ஆண்ட்டி இண்டியன் என்று சொல்ல, நல்ல வேலை தாத்தாவுக்கு கேட்கவில்லை.

Image Courtesy

தக்காளி ரசம் :

தக்காளி ரசம் :

பொண்டாட்டி மேல சந்தேகப்பட்டு நெருப்புல தள்ளிவிட்டவன் நல்லவன், ஷாஜகான் கெட்டவனா?

தாத்தா புலம்பலில் இருந்த நியாயம் புரிந்தது .

தாத்தாவுக்கு தக்காளி அதிகம் சேர்க்காத மிளகு ரசம் செய்து டேபிளில் வைத்தால், ச்சை.... என்ன இது உப்பு சப்பு இல்லாம ரசமா இது குழாத்தண்ணி மாதிரி இருக்கு மனுஷன் திம்பானா டேபிளில் உட்கார்ந்து கத்திக் கொண்டிருந்தார் பாட்டி கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் பேத்திக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மனைவியானவள் :

மனைவியானவள் :

ஏன் பாட்டி உன்னைய திட்டிட்டே இருக்காரு தாத்தா.

நான் பொண்டாட்டில்ல ...

பொண்டாட்டினா இப்டி தான் திட்டணுமா?

அது அந்த கிழவன்ட்டதான் கேக்கணும். என்ன ஒரு இளக்காரம் தான்.

மேற்கொண்டு எதுவும் கேட்க முடியவில்லை பாட்டியிடம்.

Image Courtesy

காதலுக்கேற்ற வயது :

காதலுக்கேற்ற வயது :

மீண்டும் தாத்தாவிடம்... நீ லவ் மேரஜ் தான பண்ண தாத்தா?

ஆமா...

இப்பயும் பாட்டிய லவ் பண்றியா?

சாகப்போற காலத்துல இன்னும் என்னடி லவ்வு? அதான் பேரன் பேத்திக எடுத்தாச்சு ,நல்லது கெட்டது பாத்தாச்சு இன்னும் லவ்வு அது இதுன்னு....

போதுமா தாத்தா... பாட்டிய லவ் பண்ணது .

அப்டி இல்ல பாசம் இருக்குதா அதுக்காக பொழுதன்னைக்கும் காட்டிட்டேயிருக்க முடியுமா ?

மத்தவங்கட்ட எல்லாம் ஒரு நாளைக்கும் விட்டுக் கொடுக்கவே மாட்டேனே அவள

Image Courtesy

ஷாஜஹான் பண்ண அதே தப்பு :

ஷாஜஹான் பண்ண அதே தப்பு :

ஷாஜகான் பண்ண அதே தப்ப நீயும் பண்ணாத தாத்தா?

கோடி கோடியா செலவழிச்சு இவ்ளோ பெரிய மாளிகைய கட்டி நானும் பாசக்காரன்னு வேஷம் போடாம லவ் பண்ணு.

தாத்தாவுக்கு புரிந்திருக்கும். பாட்டி பூரித்திருப்பாள்....

பேரன்பு நிலைக்கட்டும்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Real life incident of grand father and her grand daughter

    Real life incident of grand father and her grand daughter
    Story first published: Thursday, October 5, 2017, 13:50 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more