முத்தமிடுவதில் எக்ஸ்பேர்ட் ஆக சூப்பர் டிப்ஸ்..!

Written By: Lakshmi
Subscribe to Boldsky

காதலில் தீண்டல்களும் முத்தமிடுதலும் ஒரு முக்கியமான பகுதி. நீங்கள் ஒரு சிறந்த காதலனாகவோ அல்லது காதலியாகவோ இருக்கலாம். ஆனால் நீங்கள் சிறந்த முத்தமிடுபவராக இருக்கிறீர்களா?

இந்த 6 கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சா நீங்க தான் கில்லாடி!

ஆண்களில் 66% பேருக்கும், பெண்களில் 55% பேருக்கும் சிறப்பாக முத்தமிட தெரியவில்லை என ஆய்வுகள் கூறுகின்றன. உங்களுக்கு சிறப்பாக முத்தமிட தெரியவில்லை என்றால் அதை கற்றுக்கொள்வது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒயின் பருகுதல்

ஒயின் பருகுதல்

நீங்கள் முதல்முறையாக உங்களது துணையை சந்தித்து முத்தமிடும் போது சிறிதளவு ஒயின் பருகினால் உங்கள் மூளை நீங்கள் சிறப்பாக முத்தமிட உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அதற்காக, நீங்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் குடித்துவிட்டு உங்கள் துணையை முத்தமிட்டால் அதுவே கடைசி முத்தமாகவும் அமையும் ஜாக்கிரதை!

நெற்றியை சாய்த்து முத்தமிடுதல்

நெற்றியை சாய்த்து முத்தமிடுதல்

நீங்கள் முத்தமிடும் போது உங்கள் நெற்றியை சரியான அளவில் சாய்த்து முத்தமிடுவது அவசியம். நிறைய பேர் இந்த விசயத்தில் தடுமாறுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சரியான நேரம்

சரியான நேரம்

முத்தத்தை சரியான நேரத்தில் தருவது மிகவும் முக்கியமானது. உங்கள் துணை கோபமாக இருக்கும் போது அவரை முத்தமிட்டு உங்களது நாளை மோசமான நாளாக மாற்றிக்கொள்ளாதீர்கள்

கோபமாகவோ, மன அழுத்தத்துடனோ இருக்கும் போது நீங்கள் அவரை முத்தமிட்டால், அதை அவரால் அனுபவிக்க முடியாது. எனவே இருவருக்கும் நல்ல மனநிலை தோன்றும் வரை காத்திருங்கள்.

வாய் சுத்தம்

வாய் சுத்தம்

முத்தமிடுவது பற்றி யோசிக்கும் முன் வாய் சுத்தம் என்பது மிகவும் அவசியம். அதுவும் ஒரு பெண்ணை முத்தமிட வேண்டும் என்றால் உங்கள் வாயில் துர்நாற்றம் வீசினால் நன்றாகவா இருக்கும்? பெண்கள் முத்தத்துடன் சேர்த்து உங்களது சுவாசத்தையும் விரும்புகிறார்களாம் எனவே வாயை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம்.

மெதுவான முத்தம்

மெதுவான முத்தம்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக முத்தமிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் மிகவும் வேகமாவும் அழுத்தமாகவும் முத்தமிடாதீர்கள். பெண்களுக்கு மெதுவான மென்மையான ஆழ்ந்த முத்தம் தான் பிடிக்குமாம். அதற்காக மிகவும் மெல்லிய முத்தமும் வேண்டாம்.

உங்கள் முழு திறமையையும் காட்டுங்கள்

உங்கள் முழு திறமையையும் காட்டுங்கள்

உங்களுக்கு தெரிந்த வித்தைகளை எல்லாம் முத்தத்தில் காட்டுங்கள். பயம் கொள்ளத்தேவையில்லை. அதே சமயம் உங்கள் துணையையும் உங்களை முத்தமிட அனுமதியுங்கள்.

மறக்க முடியாத முத்தம்

மறக்க முடியாத முத்தம்

ஒவ்வொரு முறை முத்தமிடும் போதும் அதை மறக்க முடியாத அனுபவமாக்குங்கள். மறுமுறைக்காக காத்திருக்க வேண்டாம். கிடைத்த சந்தர்ப்பத்தை வீணாக்கமால் சிறந்த அனுபவமாக்குவது உங்களிடம் தான் உள்ளது. பதட்டம் அடையாமல், முத்தத்தின் மூலமாக உங்கள் ஆழ்மனதில் உள்ள காதலை வெளிப்படுத்தினால், உங்கள் முத்தத்திற்கு உங்கள் துணை அடிமையாகிவிடுவார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Important Ways to be a Better Kisser

here are the some scientific ways to be a better kisser
Story first published: Tuesday, June 13, 2017, 16:45 [IST]