ஒருவர் காதலில் விழுந்துவிட்டார் என்பதை இந்த அறிகுறிகளை கொண்டு அறியலாம்!

Written By: Lakshmi
Subscribe to Boldsky

காதல் யார் மீது வேண்டுமானலும், எந்த வயதிலும் வரலாம் என்பது உண்மை தான். ஆனால் ஏற்கனவே காதலிக்கும் ஒருவரை காதலித்தால் கடைசியில் மிஞ்சுவது தோல்வியும் விரக்தியும் தான். நீங்கள் காதலிக்கும் ஒருவர் ஏற்கனவே ஒருவரை காதலித்துக்கொண்டு தான் இருக்கிறார் என்பதை எளிதாக அறியலாம். காதல் சில அறிகுறிகளை வெளிப்படையாகவே காட்டிவிடும் தன்மை உடையது. நீங்கள் காதலிக்கும் பெண் / ஆண் ஏற்கனவே ஒருவரை காதலித்துக்கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. முக புத்தகம்

1. முக புத்தகம்

நீங்கள் பொதுவாக ஒருவரை பற்றி தெரிந்து கொள்ள அவரது முக புத்தகம் உதவியாக இருக்கும். அதில் அவர் சிங்கிலா அல்லது உறவில் இருக்கிறா என்பதை அவரே கொடுத்து இருந்தால் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இல்லை என்றால், அவரது புகைப்படங்கள், அதிக டேக்குகள், அவர் யாருடைய போஸ்டுகளை அதிகமாக லைக் செய்கிறார், அவர் பதிவிடும் அனைத்து கருத்துக்களுக்கு யார் தொடர்ந்து லைக் போடுகிறார்கள் என்பது போன்ற சில விஷயங்களை ஆராயலாம்.

2. வாட்ஸ் ஆப்

2. வாட்ஸ் ஆப்

தொழில்நுட்பங்கள் ஒருவர் கமிட் ஆகிவிட்டார் என்பதை எளிதில் புரிய வைக்கின்றன. வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் மற்றும் டிபிகள் காதல் சார்ந்து அல்லது காதல் பிரச்சனை போன்றவை சார்ந்து இருந்தால் அவர் ஏற்கனவே கமிட் ஆனவர் என தெரிந்து கொள்ளலாம்.

3. புரளிகள்

3. புரளிகள்

நெருப்பில்லாமல் புகையாது என்பது போல சில சமயம் சில புரளிகளில் கூட ஏதேனும் உண்மை ஒளிந்திருக்கலாம்.

4. நண்பர்கள்

4. நண்பர்கள்

நீங்கள் காதலிப்பவரின் நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். நேராக கேட்க தோன்றவில்லை என்றால் மறைமுகமாக கூட கேட்கலாம்.

5. ஒரே நபரை பற்றி அடிக்கடி பேசுவது

5. ஒரே நபரை பற்றி அடிக்கடி பேசுவது

அவருடன் நீங்கள் பேசும் போது குறிப்பிட்ட ஒரு நபரை பற்றி அதிக நேரம் அல்லது அடிக்கடி பேசுவது போன்ற அறிகுறிகளை வைத்தும் அவர் ஒருவர் மீது காதலில் இருக்கிறார் என்பதை அறியலாம்.

6.நேராக கேட்டுவிடுங்கள்

6.நேராக கேட்டுவிடுங்கள்

உங்களுக்கு இந்த வழிகள் எல்லாம் சரிப்பட்டு வரவில்லை அல்லது நீங்கள் வெகு தொலைவில் இருப்பதால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் நேரிலேயே கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to Find Your Crush is Already in Love

How to Find Your Crush is Already in Love
Story first published: Thursday, June 29, 2017, 15:24 [IST]