கணவன் மனைவி உறவு குதுகலமாய் இருக்க சில யோசனைகள்!

Written By:
Subscribe to Boldsky

கணவன், மனைவி உறவு என்பது கடைசி வரை நம்முடன் வாழ்வின் இன்ப, துன்பங்கள் அனைத்திலும் கூடவே வரக்கூடியது. இந்த உறவுக்கு மரியாதை கொடுத்து நடப்பதும், எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் இருப்பதும் முக்கியம். ஒரு சில சின்ன சின்ன விஷயங்களை மட்டும் புரிந்து கொண்டு நடந்தால், கணவன், மனைவி உறவு சிறப்பாக அமையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெளிப்படையாக பேசுதல்:

வெளிப்படையாக பேசுதல்:

கணவன், மனைவி இருவருமே தன் துணை, தன்னிடம் எதையும் வெளிப்படையாக கூறும் அளவிற்கு சுதந்திரம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இவரிடம் இதனை சொன்னால் சண்டை தான் வரும் என நினைத்து மறைக்கும் அளவிற்கு இருக்க கூடாது.

பொய் கூறுதல் :

பொய் கூறுதல் :

ஒருவர் மீது பயம் இருந்தால் தான், அவர் இதனை சொன்னால் என்ன சொல்ல போகிறாரோ என்று பயந்து பொய் சொல்வோம். அந்த அளவுக்கு பயத்தை தனது துணைக்கு தராமல் இருக்க வேண்டும்.

தேவைகளை பூர்த்தி செய்தல்

தேவைகளை பூர்த்தி செய்தல்

ஆண்கள் மட்டும் வேலைக்கு செல்பவராக இருந்தால், தனது மனைவியின் தேவை அறிந்து, அவருக்கு வேண்டியதை செய்து தர வேண்டும். அவரது தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நானே தான் எல்லா செலவையும் செய்கிறேன் என்று சொல்லிக்காட்ட கூடாது.

பெண்கள்!

பெண்கள்!

ஒரு வீட்டில் இருவரும் வேலைக்கு போனால், பெண்கள், நானும் தான வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகப்படுத்தக்கூடாது. என் அம்மா வீட்டில் எப்படி இருந்தேன் தெரியுமா? என்றும் பெருமை பேசக்கூடாது.

வேலைகளை பகிர்ந்து கொள்ளுதல்

வேலைகளை பகிர்ந்து கொள்ளுதல்

வீட்டு வேலைகளை இருவரும் பகிர்ந்து செய்தல் வேண்டும். ஒருவர் மட்டுமே குழந்தைகளையும், குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு இருக்க கூடாது.

செலவுகள்!

செலவுகள்!

சேமிப்பிற்கு இவ்வளவு, செலவுக்கு இவ்வளவு என்று பஜ்ஜெட் போட்டு குடும்பத்தை நடத்த வேண்டும். செலவுகள் எல்லை தாண்டி செல்லாத படி பார்த்துக்கொள்ள வேண்டும். நிதி பிரச்சனை உண்டானால் அது குடும்ப அமைதியை கெடுத்துவிடும்.

கருத்துக்கள்

கருத்துக்கள்

கணவன், மனைவி இருவரின் கருத்துக்களும் மாறுபட்டவை என்றாலும் கூட ஒருவரது கருத்துக்கு மற்றொருவர் மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to be a best husband and wife

How to be a best husband and wife
Story first published: Saturday, August 19, 2017, 15:42 [IST]
Subscribe Newsletter