என் உயிரினும் மேலானவன் அவன்...! என் காதல் கதை!

Posted By:
Subscribe to Boldsky

காதல் என்பது எப்போது நினைத்தாலும் சுவாரசியத்தை தரும் ஒரு விஷயமாகும். காதலில் விழாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். காதல் எந்த நேரத்தில் வரும், எந்த சந்தர்ப்பத்தில் வரும் என்பது யாருக்குமே தெரியாத ஒன்றாகும். இந்த பகுதியில் ஒருவரது காதல் கதையை காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பள்ளி பருவம்

பள்ளி பருவம்

நான் அப்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். எனது குடும்பம் மிகவும் கண்டிப்பான குடும்பம். என்னை வெளியில் எங்கும் விட மாட்டார்கள். என்னை டியூசனுக்கு விட்டதே அபூர்வமான ஒரு விஷயம் தான். நான் மாலை வேளையில் டியூசன் செல்வேன். அப்போது ஒரு நாள் ஒருவரின் ஃபோனில் இருந்து எனக்கு பிடித்த பாடல் ஒலித்தது. அந்த பாடலை கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும். அப்போது எல்லாம் டவுன் லோடு செய்து பாடலை கேட்பது எல்லாம் எனக்கு தெரியாது. அந்த பாடல் அவனது போனில் ரிங்க் டோனாக ஒலித்ததும் நான் திரும்பி பார்த்தேன்...!

காந்த பார்வை

காந்த பார்வை

நம்மை யாரவது பார்த்தால் நாமும் எதர்ச்சையாக பார்ப்போம் இல்லையா.. அதே போல அவனும், எதற்காக அவள் என்னை இப்படி பார்க்கிறாள் என்பது போல் பார்த்தான். ஆனால் நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை... மீண்டும் ஒருமுறை நான் அவனை பேருந்தில் பார்த்தேன். அப்போதும் அந்த அமைதியான பேருந்தில் அவனது செல்போன் அந்த பாடலை ஒலித்தது.. நான் அவனை பார்த்தேன்.. அவனை நான் திரும்பி பார்த்தேன். அவனும் என்னை பார்த்து விட்டான். அய்யோ... என்று வெட்கப் பட்டு திரும்பினேன். எனது வெட்கம் பிடித்தது போல ஒரு சின்ன சிரிப்பை எனது ஒரப் பார்வையால் அவனிடம் கண்டேன்.

ஏய் பாப்பா..!

ஏய் பாப்பா..!

நான் ஒரு அழகான மாலை வேளையில் டியூசன் சென்ற போது, அவன் ஒரு டீ கடையில் ஓரமாக நின்று, ஏய் பாப்பா என்று அழைத்தான்... என்னை வீட்டில் பாப்பா என்று தான் கூப்பிடுவார்கள்... நான் சட்டென்று திரும்பி விட்டேன்.. ஆனால் அவன் அழைத்ததோ... ஒரு சின்ன பாப்பாவை தான்... எனது கிறுக்கு தனத்தையும் அவன் கண்டு விட்டானே என்று நான் கூச்சப்பட்டு ஓடி விட்டேன்... என் வாழ்க்கையில் முதல் முதலில் பரிச்சையமான ஒருவன் அதனால் இரவு முழுவதும் அவனது நினைவுகள்... கனவுகள்.. என்னை உறங்க விடாமல் துரத்தின...

க்ரீட்டிங் கார்டு...

க்ரீட்டிங் கார்டு...

பேருந்தில் எல்லாம் அவன் அமர்ந்து இருக்கும் இடத்தில் இருந்து பார்த்தால், நான் தெரிகின்ற மாதிரி நின்று கொள்வேன். பேருந்து கண்ணாடியில் பார்த்து அவன் முகம் பார்ப்பேன்.. இது தினமும் தொடர்ந்தது... ஒரு நாள் பேருந்தில் சரியான கூட்டம்.. அவன் அருகிலேயே நிற்கும் சூழ்நிலை உண்டாகிவிட்டது... அன்று தான் காதலர் தினமும் கூட.. அவன் எனது பையை கேட்டான். நானும் கொடுத்தேன். அன்று இரவு நான் எனது பையை திறந்த போது அதில் ஒரு க்ரீட்டிங் கார்டு இருந்தது. எனக்கு தூக்கி வாறி போட்டது... ஒரு பக்கம் சந்தோஷம் தான்.. ஆனாலும் வீட்டில் யாரவது பார்த்தால் என்ன செய்வது என்ற பயம் இருந்தது. அதுமட்டுமின்றி இந்த அனுபவம் புதிதும் கூட...

காதல்...

காதல்...

மறுநாள் நான் அந்த கார்டை கொண்டு சென்று அவனிடமே கொடுத்து விட்டேன் கோபமாக.... அவன் அதை பிரித்து பார்த்து விட்டு சிரித்தான், எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.. ஏனென்றால், நான் அதில் மீ டூ என்று எழுதி கொடுத்தேன்... எங்களது காதல் தொடர்ந்தது... என்னை மிகவும் புரிந்தவன்.. அவனிடம் திருட்டு தனமாக பயந்து பயந்து நாழு வார்த்தை தான் பேச முடியும்.. பின்னர் அவனுக்கு வெளியூரில் வேலை கிடைத்தது. அவன் வெள்ளி கிழமை நாள் தான் ஒரு குறிப்பிட்ட பேருந்திற்கு வருவான்... நான் அவனிடம் மனம் விட்டு பேச அந்த நேரம் ஏதுவாக இருக்கும்... அது மிகவும் நெருக்கமான நேரம் என்பதால்....

அதிகம் பேசவில்லை

அதிகம் பேசவில்லை

அப்போது செல்போன் இல்லை.... தினமும் அவனிடம் பேசவில்லை... அவனை காண்பதே வெள்ளிக்கிழமைகளின் இரவுகளில் தான்... அந்த பேருந்தை பிடிக்க நான் விரைந்து வருவேன்.. அதில் எனக்கு ஒரு சந்தோஷம்.. ஒரு வாரம் அவனை காணவில்லை என்றால் கூட பெரும் தவிப்பு இருக்கும். அவனது ஊர் தெரியும்.. குடும்பம் பற்றி தெரியும். ஆனால் எதையும் நேரில் காணவில்லை.. அவன் சொல்வது உண்மையா என்று பரிசோதிக்கவும் தோனவில்லை....

கல்யாணம்

கல்யாணம்

எனக்கு வார வாரம் ஏதேனும் பரிசை வாங்கி வருவான்... நான் அதை பார்த்து விட்டு அதனை அவனிடமே கொடுத்து விடுவேன். திருமணம் எல்லாம் எப்படி சாத்தியம் என கேட்டேன்... நான் பார்த்துகிறேன் என்றான்.. அதற்கு மேல் மறு வார்த்தை பேசவில்லை.. இதை பற்றி எல்லாம் எனது தோழிகளிடம் கூறினேன்.. அவர்கள் முட்டாள் தனமான காதல் என்றார்கள்.. பேசாமல்... பார்க்காமல் எப்படி என்றார்கள்.... ஆனால் சரியாக எட்டு வருடம் கழித்து அவன் என்னை திருமணம் செய்து கொண்ட போது... என் தோழிகளின் முகத்தில் ஈயாடவில்லை....!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

he loves me lot real life story

he loves me lot real life story
Story first published: Sunday, October 22, 2017, 10:30 [IST]
Subscribe Newsletter