இந்த 15 விஷயம் ஒரு பொண்ணுக்கிட்ட இருந்தா? உசுரே போனாலும் மிஸ் பண்ணிடாதீங்க!

Posted By: Lakshmi
Subscribe to Boldsky

ஒரு பெண்ணை காதலிக்கலாம வேண்டாமா என்ற யோசனையா? இதோ இந்த 15 குணங்களுடன் ஒரு பெண் கிடைத்தால், தயவு செய்து அந்த பெண்ணை தவற விட்டுவிடாதீர்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. உங்கள் விருப்பமே அவர் விருப்பம்

1. உங்கள் விருப்பமே அவர் விருப்பம்

உங்களுக்கு பிடித்த சினிமா, நீச்சல் என இருவருக்கும் ஒரே மாதிரியான விஷயங்கள் பிடித்திருக்கும். உங்கள் இருவரது கண்ணோட்டமும் ஒரே மாதிரியாக இருக்கும். இருவரது கருத்துக்களும் 90% ஆவது ஒத்துப்போகும்.

2. உங்கள் வேலையில் மூக்கை நுழைக்கமாட்டார்

2. உங்கள் வேலையில் மூக்கை நுழைக்கமாட்டார்

உங்களது பொழுதுபோக்கு மற்றும் உங்களுக்கு பிடித்த நல்ல காரியங்களை செய்யும் போது உங்கள் பாதையில் குறுக்கிடாமல் இருப்பார்.

3. கஷ்டத்தை கூறுவார்

3. கஷ்டத்தை கூறுவார்

யாரும் எல்லா நேரமும் சந்தோஷமாக இருப்பது இல்லை. அந்த பெண் ஏதேனும் ஒரு காரணத்தால், சோகமாக இருந்தால் அதற்கான காரணத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வார்.

4. உங்களை நேசிக்கும் பெண்

4. உங்களை நேசிக்கும் பெண்

உங்களை மட்டும் காதலிப்பார். நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை பார்த்து காதலிக்கமாட்டார். பல பிரபலங்கள் இது போன்ற குணம் கொண்ட பெண்களை தான் விரும்புகிறார்களாம்.

5. உங்களை மாற்ற நினைக்கமாட்டார்

5. உங்களை மாற்ற நினைக்கமாட்டார்

நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்களோ அப்படியே ஏற்றுக்கொள்வார். உங்களை மிஸ்டர்.பெர்பெக்ட்டாக மாற்ற எண்ணி உங்களுக்கு மிகவும் பிடித்த காரியங்களுக்கு தடை போடமாட்டார். பிடிக்காத விஷயங்களை செய்ய வலியுறுத்தமாட்டார்.

6. தனது அழகில் தன்னம்பிக்கை உள்ள பெண்

6. தனது அழகில் தன்னம்பிக்கை உள்ள பெண்

அடிக்கடி தனது ஸ்டைலை மாற்றி அமைக்கமாட்டார். குண்டாக இருக்கிறோமோ என்று ஜிம்மிற்கு செல்வது, டயட்டில் இருப்பது போன்ற காரியங்களில் அதீத கவனம் செலுத்தமாட்டர். நாம் எப்படி இருக்கிறோமோ அதுதான் அழகு என தன்னம்பிக்கையுடன் இருப்பார்.

7. உங்கள் ஓய்வு நேரத்தை எடுத்துக்கொள்ளமாட்டார்

7. உங்கள் ஓய்வு நேரத்தை எடுத்துக்கொள்ளமாட்டார்

உங்களது ஓய்வு நேரத்தில் நீங்கள் தனக்காக இதை இதை செய்ய வேண்டும் என அறுபது டஜன் லிஸ்ட்டுகளை போட்டு கையில் தரமாட்டார். உங்களது ஓய்வு நேரத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய அனுமதிப்பார்.

8. உங்கள் மதிப்பை பகிர்ந்து கொள்வார்

8. உங்கள் மதிப்பை பகிர்ந்து கொள்வார்

இருவருக்கும் ஒருவரிடம் ஒருவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற புரிதல் இருக்கும். உங்களது உறவில் போதுமான அளவு நேர்மை இருக்கும். மேலும், பணத்தை இருவரும் எவ்வாறு செலவு செய்கிறீர்கள் என்பது அவசியம். நீங்கள் கஞ்சமாகவோ அல்லது அதிகம் செலவு செய்பவராகவோ இருக்கலாம், உங்களை போலவே அவரும் இருக்கிறாரா என்பது அவசியம்.

9. வெளிப்படையாக இருக்கும் பெண்

9. வெளிப்படையாக இருக்கும் பெண்

அவருக்கு சின்ன வயதில் ஏற்பட்ட பிரச்சனைகள், கஷ்டங்கள், நிறைவேறாத ஆசைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். எந்த ஒரு கவலை, சோகத்தையும் உங்களிடம் கூறுவார். அவரது புத்திசாலித்தனங்கள் மட்டுமல்லாது, குறைகளையும் உங்களிடம் கூறுவார்.

10. காது கொடுத்து கேட்கும் பெண்

10. காது கொடுத்து கேட்கும் பெண்

உங்கள் அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சனையா? புராஜெக்ட் வேலைகளை முடிப்பதில் சிரமமா என்பது போன்ற சில கேள்விகளின் மூலம் உங்களின் பிரச்சனைகள் அனைத்தையும் அறிந்து, உங்கள் குழப்பத்திற்கும், மன சங்கடத்திற்கும் தீர்வு கொடுப்பார்.

11. உங்களை மகிழ்விப்பார்

11. உங்களை மகிழ்விப்பார்

நீங்கள் இருவரும் ஒரே விசயத்திற்காக சிரிப்பிர்கள். இருவரும் ஒன்றாக இருக்கும் போது நேரம் போவது கூட தெரியாத அளவிற்கு மகிழ்ச்சியாக பேசிக்கொள்விற்கள். கேலிகள், கிண்டல்கள் என உற்சாகமாக இருக்கும். இருவரும் சேர்ந்து பல குறும்புத்தனங்களை செய்வீர்கள்.

12. உங்கள் குடும்பதிற்கு ஏற்ற பெண்

12. உங்கள் குடும்பதிற்கு ஏற்ற பெண்

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உங்களுக்கு பிடித்த பெண் இணைந்துவிட்டால் பல பிரச்சனைகள் தீரும். உங்களின் குடும்பத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து நடந்துகொள்ள முடியும். பொறாமை எண்ணம் வராது.

13. ஆடைகளை பற்றி அபிப்ராயம் கேட்கமாட்டார்

13. ஆடைகளை பற்றி அபிப்ராயம் கேட்கமாட்டார்

எனக்கு இந்த ஆடை நல்லா இருக்குமா, இந்த கலர் நல்லா இருக்குமா என உங்களை வறுத்தெடுக்கமாட்டார். ஏனென்றால் தனக்கு என்ன பொருந்தும் என்பதில் தெளிவாக இருப்பார்.

14. உங்களை ஆச்சரியப்படுத்துவார்

14. உங்களை ஆச்சரியப்படுத்துவார்

உங்களை ஆச்சரியப்படுத்தும் வித்தை கற்றவராக இருப்பார். உங்களை திடிரென வெளியில் அழைத்து சென்று ஆச்சரியப்படுத்துவார். அவர் செய்யும் மிகச்சிறிய விஷயம் கூட உங்களை பிரமிக்கவைக்கும்.

15. மனம் புண்படும்படி நடக்கமாட்டார்

15. மனம் புண்படும்படி நடக்கமாட்டார்

உங்களுக்கு தெரியாத ஏதேனும் ஒரு விஷயத்தை நீங்கள் தவறாக செய்தால், உங்கள் மனம் புண்படும்படி சிரிக்கமாட்டார். உங்களுக்கு தெரியாதவற்றை பொருமையுடன் சொல்லிக்கொடுப்பார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

fiveteen signs of great girl friend

This content defines about fiveteen signs of great girl friend
Story first published: Thursday, May 11, 2017, 18:10 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter